Friday, August 21, 2015

இட்லி டா !!

சர்வதேச அறிவியல் மாநாட்டில் ஐந்து
நாடுகளை சேர்ந்த மாணவர்களிடத்தில்
கேட்க்கபட்ட கேள்வி ..


வெப்பமாக்கப் படும்போது
திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும் பொருள் எது ..?

🇨🇳 சீனா :
வாய்ப்பே இல்லை அது போன்ற கேள்விக்கு
எந்த புத்தகத்திலும் பதில் இல்லை.

🇬🇧 லண்டன் :
எந்த இணைய தளத்திலும் பதில் இல்லை.

🇫🇷 பிரான்ஸ் :
அர்த்தமற்ற கேள்வி.

🇺🇸 அமெரிக்கா :
பதில் தெரியாது.

🇮🇳
இந்தியா :
லூசு பசங்களா இதுக்கூடவா
தெரியாது ?

" இட்லி" டா !!

50 ரூபாயை பிடியுங்கள்..!!

ஒரு இந்தியன்.. விமானத்தில் பயணித்து கொண்டிருந்தான்.. அவன் அருகே.. சீனன் ஒருவன் அமர்ந்திருந்தான்.! அவன் இந்தியனை எப்படியும்.. ஏமாற்றி பணம் பறித்து விட.. வேண்டும் என..எண்ணினான்..!

இந்தியனிடம் மெதுவாக பேச்சை.. ஆரம்பித்தான்..!

சீனன்;- " அன்பரே.. மிகவும் போர் அடிக்கிறது.. நமக்குள் போட்டி வைத்து.. நேரத்தை கடத்துவோமா..?"


இந்தியன்;- "வேண்டாம்.. போட்டிக்கு நான் வர வில்லை..! எனக்கு தூக்கம் வருகிறது..!"

சீனன்;- "அன்பரே.. கொஞ்சம் கேளுங்கள்.. போட்டியில் நான் தோற்று..நீங்கள் வெற்றி பெற்றால்.. நான் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன்..! மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால் 500 ரூபாய்..நீங்கள் எனக்கு தரவேண்டும்..!
போட்டிக்கு இப்போது சம்மதமா..?

இந்தியன்;- "நான் தான் போட்டிக்கு வரவில்லை என்று சொன்னே'னே.. ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்..? நான் தூங்கப் போகிறேன்..!

சீனன்;- (விடுவதாக இல்லை) "சரி.. இப்படி வைத்து கொள்வோம்.. போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று.. நான் தோற்றால்.. 500 ரூபாய் உங்களுக்கு நான் தருகிறேன்.. மாறாக நான் வெற்றி பெற்று.. நீங்கள் தோற்றால்.. 50 ரூபாய் நீங்கள் எனக்கு கொடுத்தால் போதும்.. இப்போது சம்மதமா..??

இந்தியன்;- "சரி..சம்மதம்..!"

சீனன்;- " போட்டியை முதலில் நான் தொடங்குகிறேன்..! நன்றாக கவனியுங்கள்.. நிலவுக்கும்.. பூமிக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு..??

இந்தியன்;- " தெரியவில்லை.. 50 ரூபாயை பிடியுங்கள்..!"

சீனன்;- "மகிழ்ச்சி நண்பரே..!"

இந்தியன்;- "நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா..?"

சீனன்;- "கேளுங்கள்..!"

இந்தியன்;- "ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள்.. இருக்கும்.. பின் மலையை விட்டு கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும்.. அது என்ன விலங்கு..??

சீனன்;-( அதிர்ச்சியானான்.. நீண்ட நேரம் யோசித்து விட்டு ) "தெரியவில்லை..500 ரூபாயை பிடியுங்கள்..!"

இந்தியன் ரூபாயை வாங்கி பாக்கெட்டில் வைத்து விட்டு.. தூங்க ஆரம்பித்தான்..!

சீனன்;- "ஏய்.. ஒரு விலங்கு மலை ஏறிச் செல்லும் போது மூன்று கால்கள் இருக்கும்.. பின் மலையை விட்டு.. கீழே இறங்கும் போது நான்கு கால்கள் இருக்கும் விலங்கு எது..?

இந்தியன்;- தெரியவில்லை..50 ரூபாயை பிடியுங்கள்..!!

கொய்யால
யார்கிட்ட....

தமிழன்டா !!

Wednesday, August 19, 2015

அடமானமாய் என்ன தருவீங்க…?

ராக்கேஷ் ஒரு பேங்க்-கின் கிராமத்து பிராஞ்ச் அதிகாரி.
அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார்.

ராக்கேஷ் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான். “எதுக்காகப் பணம் வேணும்…?”


அந்த ஆதிவாசி ஆள் பதில் சொன்னார்.
“கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!”

“அடமானமாய் என்ன தருவீங்க…?”

ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார்.
“அடமானம்னா என்ன..?”.

“நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும்.அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்…!”

ஆதிவாசி ஆள் சொன்னார். “கொஞ்சம் நிலம் இருக்கு… ரெண்டு குதிரை இருக்கு… எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்…!”.

ராக்கேஷ் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தான்.

சில மாதங்கள் கழிந்தது. அந்த ஆதிவாசி மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.
பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.

ராக்கேஷ் ஆச்சர்யத்துடன் கேட்டான்.
“கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா…?”

அந்த ஆதிவாசி உற்சாகமாய்ப் பதில் சொன்னார்.
“லாபம் இல்லாமலா…? அது கிடைச்சது நிறைய…!”.

ராக்கேஷ் ஆர்வத்துடன் கேட்டான்.
“அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?”.

“என்ன செய்யறது… பொட்டில போட்டு வச்சிருக்கேன்…!”.

ராக்கேஷ் யோசித்தான். ‘இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக் கிடைச்சுட்டான்…!’ என்று நினைத்தபடியே,”ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே…?” என்றான்.

ஆதிவாசி கேட்டார். “டெபாசிட்னா என்ன…?”.

ராக்கேஷ் விளக்கமாய்ப் பதில் சொன்னான்.
“நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு… அதில உங்க பணத்தை போட்டு வச்சா… உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பார்த்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்…!”.

கேட்டுக் கொண்டிருந்த அந்த ஆதிவாசி நபர் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.

“அடமானமாய் என்ன தருவீங்க…?”.

Tuesday, August 18, 2015

கோடீஸ்வரர் ?

நயா பைசா கூட இல்லாமல் இருந்தவர் இப்போது கோடீஸ்வரர் !

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாகலாபுரம் என்கிற கிராமத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் 1973ல் பிறந்தவர் பிரேம் கணபதி. ஏழு குழந்தைகளில் ஒருவர் அவர். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்த அவருக்கு பிரத்தியேகத் திறமைகள் எதுவும் கூட இருக்கவில்லை. வறுமை அந்தக் கிராமத்தில் இருந்து அவரைச் சென்னைக்குத் துரத்தியது. மாத வருமானம் சுமார் ரூ 250/- மட்டுமே கிடைக்க முடிந்த சில்லறை எடுபிடி வேலைகள் செய்து பிழைத்து வந்தார். அதையும் முடிந்த வரை சேமித்து கிராமத்தில் இருக்கும் தன் பெற்றோருக்கு அனுப்பி வைப்பார்.


அப்போது பழக்கமான ஒருவன் மும்பையில் ரூ1200/- மாத வருமானத்தில் வேலை தயாராக இருக்கிறது என்று சொல்ல வீட்டுக்குக் கூடத் தெரிவிக்காமல் அந்த ஆளுடன் ப்ரேம் கணபதி 1990ல் மும்பைக்கு ரயிலில் பயணமானார். மும்பையில் பாந்த்ரா ரயில்நிலையத்தில் அவருடைய சட்டைப்பையில் இருந்த முழு சேமிப்பான ரூ 200/-ஐ திருடிக் கொண்டு கூட வந்தவன் மாயமாய் மறைந்து விட்டான். அப்போது தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்கிற உண்மையை ப்ரேம் கணபதி உணர்ந்தார். 17 வயதில் கையில் நயாபைசா இல்லாமல், பாஷையும் தெரியாமல், தெரிந்தவர்களும் யாருமில்லாமல் ஆதரவற்றவராய் நிற்பது கடுமையான துர்ப்பாக்கியம் அல்லவா?

ப்ரேம் கணபதி மேல் பரிதாபப்பட்ட ஒருவர் திரும்பி சென்னைக்குப் போக டிக்கெட் வாங்கிக் கொடுக்க முன் வந்தார். ஆனால் தோற்றுப்போன மனிதனாய் சென்னைக்குத் திரும்ப ப்ரேம் கணபதிக்கு மனம் வரவில்லை. மும்பையில் மாஹிம் பகுதியில் ஒரு பேக்கரியில் பாத்திரம் கழுவும் வேலை கிடைத்தது. மாதம் ரூ150/- தான் சம்பளம் என்றாலும் இரவு அந்தப் பேக்கரியிலேயே தூங்க இடம் கொடுத்ததால் அந்த வேலைக்குச் சேர்ந்து கொண்டார் ப்ரேம் கணபதி.

சில மாதங்களில் டீக்கடையில் டீ விற்கிற பையனாய் முன்னேறினார். சுறுசுறுப்பும், முகமலர்ச்சியுடன் பழகுகிற தன்மையும் கொண்ட ப்ரேம் மற்ற டீ விற்கும் பையன்களை விட மூன்று மடங்கு அதிகமாக டீ விற்று வியாபாரத்தைப் பெருக்கினார். நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அளவு தான் ஒருவரே டீக்கடைக்குச் சம்பாதித்துக் கொடுத்தார். ஒரு வாடிக்கையாளர் அதைப் பார்த்து விட்டு ஒரு டீக்கடைக்குத் தான் முதல் போடத் தயார் என்றும் ப்ரேம் கணபதி டீக்கடையை நடத்தினால் வரும் இலாபத்தில் பாதி பாதி எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார். ப்ரேம் கணபதி ஒத்துக் கொள்ளவே புதிய டீக்கடையைத் துவக்கினார்கள். ப்ரேமின் திறமையால் வியாபாரம் மிக நன்றாக நடந்தது. இலாபம் அதிகமாகிக் கொண்டு வருவதைப் பார்த்தவுடன் இத்தனை பணத்தை இவனுக்குத் தர வேண்டுமா என்று முதல் போட்டவருக்கு பொறாமை ஏற்பட்டது. அவர் ப்ரேம் கணபதியை டீக்கடையில் இருந்து விலக்கி விட்டு சம்பளத்துக்கு இன்னொருவரை வைத்துக் கொண்டார்.

மறுபடியும் ஏமாற்றப்பட்டாலும் மனம் தளராத ப்ரேம் கணபதி ஒரு கைவண்டியை நாள் ஒன்றுக்கு ரூ150/- வாடகைக்கு எடுத்து அது வரை சேர்த்திருந்த ரூ 1000/-ல் ஸ்டவ்வும், பாத்திரங்களும் வாங்கி வாஷி ரயில் நிலையம் எதிரில் இட்லி தோசை விற்க ஆரம்பித்தார். மிக சுத்தமாக இடத்தை வைத்துக் கொண்டு மிக ருசியாக இட்லி தோசைகளை சமைத்துக் கொடுத்த அவருடைய அந்த சிறிய கைவண்டி தோசைக்கடை நாளடைவில் பிரபலமாகியது. பிறகு கைவண்டியை விட்டு ஒரு கடையையே வாடகைக்கு ப்ரேம் எடுத்துக் கொண்டார். அதற்கு தோசா ப்ளாசா என்று பெயரிட்டார். அவருடையை தோசா ப்ளாசாவைத் தேடி நாளடைவில் தூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களும் வர ஆரம்பித்தார்கள். மிக நல்ல வருமானம் வர ஆரம்பிக்கவே சைனீஷ் உணவு வகைகள் செய்யும் கடை ஒன்றையும் பக்கத்தில் வாடகைக்கு எடுத்துக் கொண்டார். அது தோல்வி அடைந்தது. அதனால் அதை விட்டு விட்டு தோசையிலேயே பல பல வகைகளை அறிமுகப்படுத்தி கடையை விரிவுபடுத்தினார். அவருடைய மெனுவில் 108 வகை தோசைகள் இருந்தன.

வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் ருசி, சேவை, விதவிதமான தோசை வகைகள், சுத்தம் இருந்ததாலும் தரத்தை எப்போதும் உயர்வாகவே தக்க வைத்திருந்ததாலும் அவர் வியாபாரம் செழிக்க ஆரம்பித்தது.

இன்று இந்தியாவில் 45க்கும் மேலான தோசா ப்ளாசாக்கள் ப்ரேம் கணபதிக்கு உள்ளன. அதுமட்டுமல்லாமல் துபாய், நியூசிலாந்து முதலான பத்து வெளி நாடுகளில் கூட கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐம்பது கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாகவும் ப்ரேம் கணபதி இருக்கிறார் என்ற செய்தியைப் படிக்கையில் முயற்சி திருவினை ஆக்கும் என்ற வள்ளுவன் சொன்னது முற்றிலும் உண்மை என்று தோன்றுகிறதல்லவா?

தன்னம்பிக்கையூட்டும் இந்த இளைஞரின் சாதனையை பகிரலாமே

Monday, August 17, 2015

பைத்தியம்

ஒருவர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியின் வாசல் நின்று போர்டை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தார். பிறகு வேகமாக உள்ளே சென்று தலைமை டாக்டர் முன்னே அமர்ந்து அவரிடம் :
டாக்டர் ! இங்கே வருபவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களா என்று எப்படி முடிவு செய்து அட்மிட் செய்வீர்கள்?
அவர்களின் மனநிலையை சோதனை செய்து பார்த்த பின்பு அட்மிட் செய்து சிகிச்சை கொடுப்போம்.
என்ன சோதனை ?
டாக்டர் அவரை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மிகப்பெரிய தொட்டியில் நீர் நிரம்பி இருந்தது. அருகில் ஒரு ஸ்பூன், ஒரு டம்ளர், ஒரு சிறிய பக்கெட் இருந்தது.
டாக்டர் அவரிடம் கேட்டார்:
தொட்டியை உடனே காலி செய்ய வேண்டும். தண்ணீரை சீக்கிரம் வெளியேற்ற என்ன செய்வீர்கள்?
இதோ இந்த பக்கெட் கொண்டு தண்ணீரை கீழே ஊற்றி தொட்டியை காலி செய்வேன்.
டாக்டர் தன் உதவியாளரை அழைத்து இவரை ரூம் நம்பர் எட்டில் அட்மிட் செய்து விடு. நாளை முதல் சிகிச்சை ஆரம்பம் என்றார்.
டாக்டர் நான் பைத்தியமில்லை.
டாக்டர் பதில் சொன்னார் : இவ்வளவு பெரிய தொட்டியை காலி செய்ய இந்த சின்ன பக்கெட்டை உபயோகித்தால் அரைநாள் ஆகும். கீழே உள்ள outletஐ அடைத்திருக்கும் அடைப்பை எடுத்தால் பத்து நிமிடங்களில் தொட்டி காலி ஆகிவிடும். சற்று மந்தமாக உள்ள உங்கள் மூளைக்கு சிகிச்சை தரவேண்டும். உள்ளே போங்கள்.


நீங்களும் பக்கெட்டை உபயோகிக்கலாம் என்றுதானே நினைத்தீர்கள். உங்களுக்கு ஒன்பதாம் நம்பர் பெட் காலியாக உள்ளது.

யாரும் அடிக்க வராதீர்கள்! அப்புறம் நான் சிகிச்சைக்கு வேறு ஆஸ்பத்திரிக்கு போகவேண்டும்!!