Saturday, April 5, 2014

நூறு தந்திரங்கள்

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.


சொர்க்கமும் நரகமும்!

ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு சொர்க்கத்தையும்நரகத்தையும் காண ஆசை வந்தது.

ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார். அவனும் அவருடன் சென்றான்.
முதலில் அவனை நரகத்துக்குக் கூட்டிச் சென்றார். அங்கு உணவு நேரத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும்இருந்தன. அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு,சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.
எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால்….
அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி, வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்ல முடியவில்லை!

எனவே அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்குப் பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது.
அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு, அவற்றிலுள்ள உணவை வீணாக்கினர்.
பின்னர், தாங்க முடியாத பசியானால் உட்கார்ந்து அழுதனர். இப்படி அழுதுகொண்டே இருந்தனர்.
பின்னர், அந்தப் பெரியவர் அந்தக் கருமியை சொர்க்கத்துக்குஅழைத்துச் சென்றார்.
அங்கும் அதோபோல அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டிருந்தது.
அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கருகே கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை.

ஆனால், அவர்களில் ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாயருகில் நீட்டினார். மடக்கத்தானே முடியாது? கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டமுடியுமல்லவா?

இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர்ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது.
கருமி கனவிலிருந்து மீண்டான்.

ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான். தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை
உணர்ந்தான். அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்.


கோபத்திற்கும் கொலைவெறிக்கும் உள்ள வித்தியாசம்..

பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.

“அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!”
அப்பா ஒருகணம் யோசித்தார்.

“மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார்.

“இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார்.
மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார்.
“சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…”

போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’
“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது.
“சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…”
போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா… இதுதான் கோபமா…?’

“இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது.
“ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…”
போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார்.
“மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார்.
“ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…”
மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது.
“டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!”
மகன் அப்பாவிடம் சொன்னான்.

“அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?”

“இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார்.
ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்...
... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார்.

“ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”.


தன்னை தானே முடியாதென்று தாழ்த்த கூடாது

ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும்
கலந்துரையாடலுக்கு அழைத்தார்.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.

பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம்
கொண்டு வந்தன.

ஆசிரியர், ""ஏன் ஒளிந்து கொண்டாய்?'' என்று கேட்டார்.

""நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்?
எனக்கு மதிப்பே இல்லையே,'' என்று வருத்தமாக கூறியது.

புன்னகைத்த ஆசிரியர், "ஒன்று' என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார்.

குழுவினரைப் பார்த்து, ""இதன் மதிப்பு என்ன?'' என்றார்.

""ஒன்று!'' என்றன மற்ற எண்கள்.

அடுத்து பூஜ்யத்தை அதன் அருகில் நிற்கச் சொன்னார்.

""இப்போது?''

""பத்து!'' என்று மற்ற எண்கள் உரக்கக் கத்தின.

அடுத்து பூஜ்யத்தைப் பார்த்து, ""இப்போதுதெரிந்து கொண்டாயா உன்
மதிப்பு? "ஒன்று' என்ற சாதாரண எண் உன் சேர்க்கையால்
பன்மடங்கு அதிக மதிப்பு அடைந்ததைப் பார்த்தாயா?'' என்றார்.

எல்லா எண்களும் மகிழ்ச்சியுடன் கை தட்டின.

""ஆமாம்... நான் சரியான இடத்தில் இருந்தால், நானும் பயனுடையவன்தான்.

நான் மற்றவருடன் சேர்ந்தால் நாங்கள் அனைவருமே அதிக
மதிப்பு வாய்ந்தவர் ஆகிறோம்,'' என்று பூஜ்யம் மகிழ்ந்தது.

இது போலதான் நாமுமம்..

நம்மிடம் ஏதாவது ஒரு திறமை இருக்கும்
அதை சரியான நேரத்தில்.,சரியான இடத்தில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்

புகழ் நம்மை தேடி வரும்.

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது.

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!

நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!


வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே..! மீண்டும் இந்த வழக்கை முதலிலிருந்து விசாரணை செய்ய அனுமதி வேண்டுகிறேன்.

நீதிபதி : எதற்காக மீண்டும் விசாரணை செய்ய அனுமதி கேட்கிறீர்கள்..?

வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே..! எனக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதனால்தான்...

நீதிபதி : என்ன ஆதாரங்கள்...?

வழக்கறிஞர் : என் கட்சிக்காரரிடம் இன்னும் ஒரு லட்ச ரூபாய் பணமும், ஒரு ஏக்கர் நிலமும் இருப்பது இப்போதுதான் எனக்கு தெரியவந்தது...!"

நீதிபதி : ஆக.. .கடன்காரனா..உள்ள அவர...பிச்சக்காரனாக்கனும்னு...முடிவு பண்ணிட்டீங்க...ஓக்கே...PROCEED...


மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…

நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்சி...)


தாலுகா அலுவலகத்தில் பார்க்காத வேலைக்கு ராஜினாமா கடிதம் கொடுத்த ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியை பற்றி நாகேஷ் கூறியதாவது:-
-
‘தாலுகா அலுவலகத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடிச்சென்றேன். அங்கு ஒரு நாற்காலி காலியாக இருந்தது.
அதில் போய் உட்கார்ந்து கொண்டேன். அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை.
-
எனவே, எனக்கு எதிரே இருந்த டைப்ரைட்டர் மிஷினில் சும்மா
பொழுதுபோக்காக `டைப்’ செய்ய ஆரம்பித்தேன். அப்போது ஒரு
பெண் வந்து ‘இதை டைப் செய்து கொடுங்கள்’ என்றார். நான் உடனே ‘ஐயம் சாரி! நான் கொஞ்சம் பிஸி’ என்றேன். ‘
இது ரொம்ப அவசரம்’ என்று அந்த பெண் கூற, நான் ‘முடியாது’ என்று மறுத்து விட்டேன். அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெரியவர்
வந்தார். ‘நான் யார் தெரியுமா? தாசில்தார்! என் பெண் இங்கே
வந்து ஏதோ டைப் செய்யும்படி உன்னிடம் கேட்டுக்கொண்டாளாம்.
-
`டைப்’ செய்து தரமுடியாது என்று நீ திமிராக பதில் சொன்னாயாமே’ என்றார், தாசில்தார். உடனே நான் ‘அது அவங்களோட பெர்சனல்
மேட்டர் போலிருக்கு. அதை நான் ஏன் டைப் செய்து தரவேண்டும்?
அதனால்தான் மறுத்தேன்!’ என்றேன்.
‘உனக்கு ரொம்ப திமிர்! உன் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறேன்’ என்றார், தாசில்தார். உடனே நான், டைப்ரட்டரில் 4 வரியில்
ராஜினாமா கடிதம் அடித்து கொடுத்தேன். அதை பார்த்தவுடன்
தாசில்தார் உள்பட அனைவரும் குழம்பிப் போனார்கள்.
-
ஏனென்றால் இல்லாத வேலைக்கு அல்லவா நான் ராஜினாமா கடிதம் கொடுத்தேன்!’ இவ்வாறு நாகேஷ் கூறினார்.
ஒரு மந்திரவாதி, ஒரு டம்ளர் நீரைக் கவிழ்த்து அதிலிரந்து ஒரு கைக் குட்டை வரவைத்தான்..

கூட்டத்தில் எல்லோரும் மகிழ்ந்து கை தட்டினார்கள்..

ஒருவன் மட்டும் கை தட்டாமல் உம்மென்று இருந்தான். அவனிடம் ஒருவன் “நீ ஏன் சிரிக்கவில்லை...உம்மென்று இருக்கிறாய்” என்று கேட்டபொழுது, அவன்,”இது ரொம்ப சாதாரணம்...

இவன் ஒரு டம்ளர் நீரிலிருந்து ஒரு கைக்குட்டை தானே எடுத்தான்...

என் மனைவி இரண்டு சொட்டு கண்ணீரில் ஒரு பட்டுப் புடைவையே எடுத்துடுவாள்” என்றான்..
பேரன் : தாத்தா தூக்கம் வரல ஏதாவது பேசிகிட்டு இருக்கலாம் ? . . .

தாத்தா : சரிடா, என்ன பேசலாம் ? . . .

பேரன் : இல்லை நாம் எப்போதும் 5 பேர் தான் இருப்போமா நம்ம வீட்டுல,...
நான் நீங்க, அம்மா, அப்பா, தங்கச்சி . . .

தாத்தா : உனக்கு கல்யாணம் ஆனா 6
பேர் ஆகிவிடுவோம்ல . . .

பேரன் : அப்ப தங்கச்சி கல்யாணம் பண்ணி போய்விடுவா அப்ப நாம் 5 பேர் தானே . .

தாத்தா : உனக்கு குழந்தை பிறக்கும்ல 6 பேர் ஆகி விடுவோம்ல . . .

பேரன் : அப்ப நீ செத்துடுவியே தாத்த 5
பேர் தானே . . .

தாத்தா : உருப்படாதவனே , போய் ஒழுங்கா தூங்குடா . . . !
ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே,

என்னாச்சு..?

அத ஏன் கேக்குறப்பா..?

.
.
.
எனக்கு பயந்து
எல்லா பசங்களும்
எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!
ஒரு கிராமத்தானுக்கு லாட்டரியில பரிசு விழுந்தது. அந்த பணத்தை எடுத்து கொண்டு தனக்கு காரும், கோட்டு சூட்டும், தொப்பியும் வாங்கி கொண்டு கிராமத்திற்கு வந்தார்.

அந்த கிராமத்தில் யாரும் காரையே பார்த்தது இல்லை.இவர் வருவோர் போவோரிடம் எல்லாம் பார்த்து கையை அசைத்து கொண்டே சென்றார்.
அந்த கிராமத்தையே சுற்றி வந்தார் ஆனால் ஒருவரை கூட அவர் இடிக்கவில்லை.

ஏன்னா அந்த காருக்கு முன்னாடி இரண்டு குதிரைகளை கட்டி ஓட்டிக்கிட்டு இருந்தார். அவருக்கு கார் இஞ்சின் ஸ்டார்ட் பண்ண தெரியாதாம். காருக்குள்ள 100 குதிரை சக்திகள் இருக்கிறது ஆனால் இவர் வெளியே 2 குதிரையை கட்டி ஓட்டிக் கொண்டு இருந்தார்.

நம்ம எல்லாருமே இவரைப் போலத்தான்.நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது ஆனால் நாம் யாரும் அதை பயன்படுத்தாமல் இருக்கிறோம்.
பாரில் ஓரத்தில் தனியாக உட்கார்ந்து மூன்று கிளாஸ்களில்பீர் வாங்கி நாராயணசாமி உள்ளே தள்ளிக் கொண்டிரு­ந்தார் ­.

அடித்த சரக்கு பத்தாமல் மீண்டும் ஒரு முறை எழுந்து சென்று சரக்கு ஊற்றித் தருபவரிடம் மூன்று கிளாஸ்களில் பீர் கேட்டார்.

சரக்கு ஊற்றித் தருபவர் சற்று நேரம் பார்த்து விட்டு,"ஸார், நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒன்னு கேக்கறேன்,

ஒவ்வொரு கிளாஸா வாங்கி குடிச்சா இன்னும் நல்ல இருக்குமே.
நா கிளாஸ்ல ஊத்தும் போதே நுரை அடங்கி உள்ள போய்டுதே ஆனா நீங்க மூணு மூணு கிளாஸா வாங்கி குடிக்கிறீங்களே ­­..

இதில இதோட நிஜ டேஸ்டே இல்லாம போய்டுமே" என்றான்.

"இல்லப்பா, நாங்க அண்ணன் தம்பி மூணு பேர். அண்ணன் துபாய்ல இருக்கான், தம்பி
கனடாவில இருக்கான்,
நான் இங்க லண்டன்ல இருக்கேன். சின்ன வயசிலேர்ந்தே நாங்க மூணு பேரும் ஒன்னாதான் சரக்கடிப்போம்.

நாங்க மூணு பேரும் ஆளுக்கு ஒரு மூலையா பிரிஞ்சு போனதால, சரக்கு சாப்பிடறதா இருந்தா மூணு கிளாஸ்ல வாங்கி,
மத்தவங்க ஞாபகார்த்தமா அந்த சரக்கை சாப்பிடனும்னு ஒரு சத்தியம் பண்ணிருக்கோம்.

என் தம்பி அண்ணன் ரெண்டு பேருமே இதை செஞ்சுட்டுதான் குடிப்பாங்க.
அதனாலதான்" என்றார் அந்த குடிமகன். ஆச்சர்யமாக பார்த்தான் அந்த 'சரக்கூற்றி '.

ஒரு நன்னாளில், இரண்டு கோப்பையில் மட்டும் பீர் தரச்சொல்லி வாங்கி குடித்தார் நாராயணசாமி .

இதைக்கண்ட சரக்கூற்றி சரக்கப்பன் மிகவும் சங்கடப்பட்டான். ­­ நேரே அவரிடம் சென்று "ரொம்ப ஸாரி ஸார், இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கலை" என்றுவருத்தப்பட்டான் ­­.

"ஏம்ப்பா என்னாச்சு" என்றார் அந்த குடிமன்னர் சகஜமாக."இல்லை எப்போதும் நீங்க உங்க பிரதர்ஸ் ஞாபகார்த்தமா மூணு கிளாஸ்ல வாங்கிக் குடிப்பீங்க.

உங்க பிரதர்ல ஒருத்தர் இறந்துவிட்டாங்க ­­ போலிருக்கு இன்னிக்கி இரண்டு கிளாஸ்ல மட்டும் ஊத்தி குடிக்கிறீங்க" என்றான்.

அந்த இரண்டு கிளாஸ் பீரையும் நிதானமாக சிப் பண்ணி குடித்துவிட்டு முழு போதையுடன் சொன்னார் நாராயணசாமி ..

"யாருக்கும் எதுவும் ஆகலை, நேற்றையோடு நான் தான் குடியை நிறுத்திட்டேன்பா, அதான் என் பிரதர்ஸ்க்காக இரண்டு கிளாஸ் மட்டும் குடிக்கிறேன்".! !

இதை கேட்ட சரக்கூற்றிக்கு போதை தெளிய ரெண்டு நாள் ஆனது.!!!!!
" 'நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு' என்ற தலைப்பில் ஆசிரியர் தன் மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். அந்த வகுப்பில் உடல் ஊனமுற்ற ஒரு சிறுமியும் இருந்தாள்.

கட்டுரைக்கான தலைப்பே அவளுக்கு பிடிக்கவில்லை. தவிர, சக மாணவர்கள் அந்தச் சிறுமியின் ஊனத்தைச் சொல்லி கிண்டல் செய்ய..

அன்றைய வகுப்பு பாவம் அவளுக்கு நரகமாகக் கழிந்தது.

மாலை வீடு திரும்பியதும் அந்தச் சிறுமி தன் அம்மாவின் தோள்களில் சாய்ந்து அழுதபடியே கேட்டாள்..

"நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எதும்மா?"

"உடம்பிலே கண் தான் மா முக்கிய உறுப்பு! ஏன் என்றால், கண் இல்லையெனில் உலகமே இருட்டாகிவிடுமே" என்று சொன்னாள் அம்மா. ஆனால், அதைச் சரியான பதிலாக அந்தச் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"அப்படியானால் கைகள் தான் முக்கியமான உறுப்பு.

அது இல்லையென்றால் நம்மால் எழுதவோ, வேறு எந்த வேலையும்
செய்ய முடியாது இல்லையா" ..

அம்மாவின் இந்த பதிலையும் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடைசியில் அந்தச் சிறுமியே ஒரு பதிலைச் சொன்னாள்.."

நம் உடம்பில் தோள்கள்
தான்மா முக்கியமான உறுப்பு. மற்ற
உறுப்புக்கள் எல்லாம் நமக்கு உதவியாக
இருக்கும். ஆனால், தோள்கள் தான்
ஆதரவு தேடும் அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும்.

இதோ, நான் கூட இப்போது உன் தோள்களிலே முகம்
புதைந்து அழுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவதற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் உடம்பிலே முக்கியமான உறுப்பு!"

யானையின் அடக்கம்:

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

புத்திசாலித்தனம்.

ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார்.சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார்.மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது.

அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார் .பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது.

கப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான்,அதில்

1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய்.
2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய்

என்று எழுதி இருந்தது.

மண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும்…

24 மணி நேரத்துக்குள்ள குற்றவாளியை கண்டுபிடிக்கணும்

ஒரு இளம் பெண் காவல்துறையில் வேலை செய்ய ஆசைப்பட்டு நேர்முக தேர்வுக்கு செல்கிறாள்

அதிகாரி: 2+2
பெண்: ம்ம்ம்... 4
அதிகாரி:அமெரிக்க ஜனாதிபதி யார்?
பெண்:ம்ம்ம்.. பராக் ஒபாமா
அதிகாரி:வெரி குட்,மகாத்மா காந்தியை கொன்றது யார்?
பெண்:ம்ம்ம்...தெரியல சார்
அதிகாரி:சரி நீங்கள் வீட்டுக்குபோய் யோசித்துவிட்டு நாளை வந்து சொல்லுங்க

அந்த பெண் வீட்டுக்கு சென்றதும் நண்பியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது

நண்பி: நேர்முக தேர்வுக்கு சென்றியே,வேலை கிடைத்ததா??
பெண்: (உற்சாகமாக) ஆம் வேலை கிடைத்துவிட்டது.

முதல் வேலையே ஒரு கொலை கேஸ். 24 மணி நேரத்துக்குள்ள
குற்றவாளியை கண்டுபிடிக்கணும்

உன் ரத்தம்தான் எனக்குள்ள ஓடுது !

நார்வேகாரர் ஒருவர் விபத்தில் சிக்கினார் .அருகில் இருந்த நம்மூர்க்காரர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ரத்தமும் கொடுத்து காப்பாற்றினார் .

பிழைத்து எழுந்துவந்த நார்வேகாரர், நம்மூர்க்காரருக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றைப் பரிசளித்தார் .

நார்வே ஆளின் துரதிருஷ்டம் பாருங்கள், ஆறு மாதம் கழித்து அவர் மறுபடியும் விபத்தில் மாட்டினார்.

அதே நம்மூர் ஆசாமி மறுபடியும் காப்பாற்றினார் . ஆஸ்பத்திரியில் சேர்த்தார் .

உயிர் பிழைத்து வந்த நார்வேகாரர், நம்மூருக்கு நன்றி சொல்லி அரை கிலோ திருநெல்வேலி அல்வா கொடுத்தாராம் .

நம்மூர்க்காரர் ஏமாற்றமாகப் பார்க்க, நார்வேகாரர் சொன்னார்,

-

-


“‘ங்கொய்யால …. உன் ரத்தம்தான் எனக்குள்ள ஓடுது !

இரயில் பயணத்தில்.......

ஒரு நாள் தந்தையும் , அவரின் 14 வயது மகனும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.

அந்த சிறுவன் ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்து,

"மேகம் நம் கூடவே வருகிறது", என அவர் தந்தையிடம் கூறினான்.

அதற்கு தந்தையும், "ஆமா "என்று சொன்னார் .

கொஞ்ச நேரம் கழித்து,

" அப்பா மரம்,செடியெல்லாம் நம்மை கடந்து செல்கின்றன !!!" என்று சொன்னார். அதற்கும் தந்தை "ஆமாம்" என்று சொன்னார்.

இதை கவனித்து கொண்டிருந்த எதிரில் இருந்த தம்பதியினர்,

"இவனை கொஞ்சம் மருத்துவ மனையில் சென்று காண்பிக்க கூடாதா? ... நீங்களும் அவன் சொல்வதை சரி என்று ஒப்புக்கொள்கிறீர்களே .. இது தவறு இல்லையா" என்று கேட்டனர்.

அதற்கு அந்த தந்தை சொன்னார்,

"ஆமாம்! நாங்கள் மருத்தவமனையில் காட்டி விட்டு தான் இப்போது வருகிறோம். அவருக்கு பிறவியில் இருந்து கண் பார்வை கிடையாது அந்த குறைபாடு இப்பொழுது தான் சரி செய்ய பட்டது."

==="ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்கையில் ஒரு விதமான கஷ்டம் இருக்கும். நாம் அதை தெரியாமல் விமர்சிக்க கூடாது!!!"