Thursday, October 9, 2014

நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கும்போது செய்கிறோம். உ‌ங்களா‌ல் அது முடியுமா என்றார்.

ஒரு முறை மெக்கானிக் கடைக்கு ஒரு பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவர் தனது காரை சரி செய்ய வந்திருந்தார்.

தனது காரை கடையில் விட்டுவிட்டு காத்திருந்தார்.

அப்போது மற்றொரு கார் ஒன்றை சரி பார்த்துக் கொண்டிருந்த ஒரு மெக்கானிக், அந்த மருத்துவரை அழைத்து ஒரு நிமிடம் பேச வேண்டும் என்றார்.

மருத்துவரும் மெக்கானிக் அருகில் வந்தார்.

மெக்கானிக் தான் சரி செய்து கொண்டிருந்த கார் எஞ்சினைக் காண்பித்து, பாருங்கள் நாங்களும் காரின் இதய‌ம் போ‌ன்ற எ‌ஞ்‌சினை திறந்து அதில் உள்ள வால்வுகளை சரி செய்து கொடுக்கிறோம். அதுவும் புதிது போல் இயங்குகிறது. இதையேத் தான் நீங்களும் செய்கின்றீர்கள். ஆனால் உங்களுக்கு நிறைய பணம், புகழ், பெயர் கிடைக்கிறதே என்றார்.

அதற்கு அந்த மருத்துவர், மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும், புத்திசாலித்தனமாகவும் பதிலளித்தார்.

இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும்போது செய்கிறோம். உ‌ங்களா‌ல் அது முடியுமா என்றார்.

Tuesday, October 7, 2014

அது வேற ஒன்றுமில்லை

ஒரு பெண் ஒருத்தி கோக் பாட்டிலின்
மூடியை திறந்து
ஓர் மரத்திற்கு அடியில் நின்று குடித்துக்
கொண்டிருந்தாள்.


அப்போது மரத்தின் மேல் ஒரு அப்பா எறும்பும்
ஒரு
மகன் எறும்பும் நின்று வேடிக்கை பார்த்து
கொண்டிருந்தார்கள் .

மகன் எறும்பு கொஞ்சம்
உணர்ச்சிவசப்பட்டு,
எட்டிப்பார்த்ததில் சரியாக அந்த கோக்
பாட்டினுள்
விழுந்து விட்டான்.

உடனே அந்த பெண் அதை
கவனிக்காமல் அந்த மகன் எறும்பையும்
சேர்த்து
குடித்து விட்டாள்.

உடனே அப்பா எறும்பு மரத்தை விட்டு
கீழ் இறங்கி அப்பெண்மணியிடம் ஒரு கேள்வி
கேட்டதாம்.

உடனே
அப்பெண்மணி மயங்கி தரையில்
விழுந்து விட்டாளாம்.

அப்படியென்ன
அப்பா எறும்பு
கேட்டிருக்கும்?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
அது வேற ஒன்றுமில்லை? என் மகன் உன்
வயிற்றில் உள்ளான்
என்று அப்பா எறும்பு சொன்னதாம் .....

Monday, October 6, 2014

கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?

ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம்
பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு. அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிகிட்டே தன்னோட வேலையையும் பார்க்கறாரு. அப்ப அவங்க பேச்சு கடவுள்
இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்குள்ள போச்சு.

அப்ப அந்த
முடி திருத்துபவர்,
"கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை.."
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"
"ஓகே...நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க.......அப்ப
உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு. கடவுள்
இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்? ஏன்
இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால் நோயும்
இருக்காது வலியும் இருக்காது. கடவுள்
அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக
இதனை அனுமதிக்க வேண்டும்?"


இதற்கு பதில் சொன்னால் அது பெரிய வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த கஸ்டமர் பதில் எதுவும்
சொல்லாமல் கடையை விட்டு வெளியேறுகிறார். அவர்
கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான
தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும்
ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குள்
சென்று அந்த முடி திருத்துபவரிடம்,
"உங்களுக்கு ஒன்று தெரியுமா? முடி திருத்துபவர் கூட
இந்த உலகத்தில் இல்லை"
அதிர்ச்சியான முடி திருத்துபவர்,
"அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்குதான் உள்ளேன்.
உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான்
இருக்கிறேன்."

"இல்லை....அப்படி முடி திருத்துபவர் என்பவர்
இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் ட்ரிம்
செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல ஒருவன் இந்த
ஊரில் இருக்க மாட்டான்."

"முடி திருத்துபவர் நாங்கள் இருக்கிறோம். ஆனால்
எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான்
இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?"

"மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதே போலத்தான் கடவுள்
என்பவர் இருக்கிறார். மக்கள் அவனைச் சரணடையாமல்
கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?"
இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப்
போனார்.

Saturday, October 4, 2014

அழகு !!

தரகர் கொண்டு வந்து கொடுத்தப் படத்தில் இருந்ததை விட நேரில் இன்னும் சுமாராகத்தான் இருந்தாள் மேனகா. மாதவன், திருப்தி இல்லாதவனாய் நிமிர்ந்து தன் அம்மா அப்பாவைப் பார்த்தான். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெண் வீட்டாரிடம் மேற்கொண்ட செய்திகளைப் பேசுவதுமாக இருந்ததைப் பார்க்கும் பொழுது இந்த இடம் மிகவும் அவர்களுக்குப் பிடித்துவிட்டது என்பதைப் பறைசற்றியது.

என்ன செய்யலாம் ... என்ற யோசனையுடன் தாயைத் தனியாக வெளியில் அழைத்து வந்தான்.

“அம்மா... தரகர் இன்னொரு பெண்ணோட படத்தைக் காட்டினார் இல்லையா...? அந்தப் பெண்ணையும் பார்த்து விடலாம்“ என்றான் மாதவன்.
அம்மாவிற்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் சமாளித்துச், “சரிப்பா பாத்திடலாம்... ஆனால் இந்தப் பெண்ணே நல்ல குடும்பப் பாங்கா இருக்கிறாள். குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது. உனக்கும் ஏத்த சோடியா தெரியுது. மற்றபடி மீதி எல்லாமே பொருந்தி வருது......

“ அவள் பேச்சை இழுக்க, “நான் அந்தப் பெண்ணையும் பார்க்கனும். அவ படத்துலே இவளை விட அழகா இருந்தாள்... 
எனக்கு அவளைக் காட்டுங்கள்“ என்றான் பிடிவாதமாக மாதவன்.
வேறு வழியில்லை. அனைவரும் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தார்கள். உண்மையில் மேனாகவை விட இந்தப் பெண் மதுமிதா அதிக அழகு. மாதவனுக்குப் பார்த்ததும் இவளைப் பிடித்துவிட்டது. பெண் வீட்டாரும் நல்ல கலகலப்பாக பழகினார்கள். கிளம்பும் போது “வீட்டிற்கு போய் பேசிவிட்டு தரகரிடம் பதில் சொல்லி அனுப்புகிறோம்“ என்று சொல்லிவிட்டு வந்தார்கள்.
வீட்டிற்கு வந்ததும் “அப்பா... எனக்கு இந்த மதுமிதாவையே பேசி முடியுங்கள்“ என்றான் மாதவன்.

“சரிப்பா... ஆனால் அந்த பெண் மேனகாவிற்கு என்ன காரணத்தைச் சொல்வது...?“ யோசனையுடன் கேட்டார் அப்பா.
“பிடிக்கலை என்ற பிறகு என்ன காரணம் சொன்னால் என்ன? ஜாதகம் சரியில்லை... இல்லையென்றால் பொருத்தம் பத்தலைன்னு ஏதாவது சொல்லிடுங்கள். ஆனால் எனக்கு இந்தப் பெண்தான் வேணும்“ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றான்.
உடனே தரகரை வரவழித்தார் அப்பா. தரகரிடம், “மதுமிதா வீட்டிற்குப் போய் எங்களுக்குச் சம்மதம்ன்னு சொல்லிடுங்கள்“ என்றார்.
அவர் கொஞ்சம் தயங்கி நிற்கவும்... “என்ன தயக்கம்?“ என்று கேட்டார்.
“அது வந்துங்க.... அந்த மதுமிதா வீட்டு சம்மந்தம் வேண்டாங்க. தம்பிக்கு வேற இடம் காட்டுறேங்க.“ என்றார் தரகர் தலையைச் சொறிந்தபடி.
“இல்லப்பா... தம்பிக்கு இந்த இடம் பிடிச்சிருக்காம். இதையே முடிக்கலாம்...“ என்றார் அப்பா.
“அது முடியாதுங்க.“
“ஏன்...?“
“ஏதோ பொருத்தம் பத்தலைன்னு சொன்னாங்க“
இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத அப்பா யோசித்தபடி.... “இது உண்மையான காரணமா இருக்க முடியாது. ஏற்கனவே ராசி நட்சத்திரம் எல்லாம் பொருந்தி வந்த ஜாதகம்ன்னு தானே சொல்லி பொண்ணோட படத்தைக் காட்டினீங்...? பிறகென்னவாம்...?“ சற்று காரமாக கேட்டார்.

“அது வந்துங்க....“ திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டு மெதுவாக அவர் காதருகில் வந்து “உங்க பிள்ளை... அந்த பொண்ணுக்கேத்த அழகு இல்லையாம். அதனால பொண்ணுக்குப் பிடிக்கலையாம்“ என்று கிசுகிசுப்பாகச் சொன்னார் தரகர்.
அப்பா பெருமூச்சுடன் அமர்ந்தார். தன் அறைக்குள்ளிருந்து இதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த மாதவன் நிலைகண்ணாடியைப் பார்த்தான்.
அடுத்தவர் வந்து சொல்லும் வரையில் ஒவ்வொருவரும் அவரவருக்கு அழகு தான்!!

Friday, October 3, 2014

நீங்க என் கைய புடிச்சிகிங்க பா

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்.தந்தை சொல்கிறார் " என் கையை கெட்டியமாக பிடித்துக் கொள் மா ", ஆற்றில் தண்ணீர் நிறையப் போகிறது, பத்திரம் மா " என்று.

உடனே,மகள் சொல்கிறாள் அப்பனா "நீங்க என் கைய புடிச்சிகிங்க பா".

இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம் என்று தந்தை கேட்கிறார்.


நான் உங்கள் கையை பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது. நீங்கள் பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என் கையை விடமாட்டீர்கள் பா என்றாள் மகள்.

Thursday, October 2, 2014

அன்பை முறிக்கும்

ஒரு குடிகாரனின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன..
எல்லாம் முடிந்து சவப்பெட்டி வீட்டை விட்டு வெளியே கொண்டுவரப்படும் போது நிலை வாசலில் இடித்து விடவே " அம்மா" என்றொரு முனகல் சப்தம் கேட்டது.
உடனே பெட்டியை இறக்கி திறந்து பார்த்தால், குடிகாரன் உயிருடன் இருப்பது தெரிந்தது.
பிறகு அவன் 10 வருடங்கள் உயிருடன் இருந்தான்.
பின்னர் அவன் இறந்து ஈமச் சடங்குகள் நடந்து மறுபடியும் சவப்பெட்டி வெளிக் கொணரப்படும் போது மனைவி அலறினாள்..


"இந்தத் தடவையாவது இடிக்காமக் கொண்டு போங்கடா''


குடி குடியை கெடுக்கும் .அன்பை முறிக்கும்

Wednesday, October 1, 2014

ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

" இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "
" என்ன சொல்றே?
நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?


அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.

எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.

கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன்.
அப்பா...
என்னம்மா... யார் இந்த பையன்
இவர்தாம்பா அவர்
அவர் ...ன்னா
அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.

அப்படியா வாப்பா..உட்கார்.
உட்கார்ந்தான்.
உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா
தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன்.

இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே
கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ?
கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார்.

சரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் என்ன செய்வே ?
அதையும் கடவுள் கவனிச்சுக்குவார்.

சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான்.

அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... பையன் எப்படி?

அப்பா சொன்னார். இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்.*