Friday, February 21, 2014

MBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்...

அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது....

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது

பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக்
கொண்டிருந்தார்... அவரிடம் கேட்டான்…

MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?

விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்...

MBA : நீங்க உள்ளே வந்த உடனே ,அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டாஅந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்...

MBA : அது சுத்தறதை நிறுத்திட்டு,ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி: இதுக்குதான் தம்பி. நான் என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை...!

Thursday, February 20, 2014

ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண் தன தோழியிடம் ,''என் மேனேஜர் கோபக்காரர்.

எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு குறையைச் சொல்லித் திட்டிக் கொண்டிருக்கிறார். எப்படி வேலை பார்த்தாலும் பயனில்லை.''என்று வருத்தப்பட்டு சொன்னாள்.

தோழி ஆறுதலாகக் கூறினாள்,''அவர் எப்படிக் கோபப்பட்டாலும் நீ மட்டும் அவரிடம் நீ காணும் சிறப்பம்சங்களை தினமும் ஒன்றாகக் கூறி வா. ''அந்தப் பெண்ணும் அதே போல் ஒரு நாள் ,''இவ்வளவு டென்சனான நேரத்திலும் குழப்பம் இல்லாமல் எப்படி சார் முடிவெடுக்கிறீர்கள்?'' என்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் பாராட்டி வந்தாள்.

சிறிது நாள் கழித்து தோழி கேட்டாள், ''ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா?''

அந்தப் பெண் கூறினாள், ''ஆம்,இப்போது நான் அவரது மனைவி.''
அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

Wednesday, February 19, 2014

ஐ லவ் யூ அப்பா

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள்.
.
.
அப்பொழுது அந்த சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான்.
.
.
சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..
.
கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார்.
.
அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை (Spanner) கொண்டு என்பதை.வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்.
.
.
"எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க முடியாது" என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.
.
மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து “அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார்.
.
.
வெளியில் நின்றிருந்த தன் காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துக் கொண்டு காரின் முன்பு உக்கார்ந்துவிட்டார்..
.
.
அப்பொழுதுதான் தன் மகன் கீரிய அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்” ஐ லவ் யூ அப்பா”.

மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!!

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்?

Tuesday, February 18, 2014

மூணு பசங்க பரீட்சைக்கு ரொம்ப லேட்டா வந்தானுங்களாம்..

ஒரு முறை மூணு பசங்க பரீட்சைக்கு ரொம்ப

லேட்டா வந்தானுங்களாம்..

Teacher : ஏன்டா லேட்டு..

Student : சார் , வரும் போது கார் டயர் பஞ்சர்
ஆயிடுச்சி சார்.. தள்ளிகிட்டே வந்தோம் சார்..

அதன் சார் லேட்டு..எங்களை பரீட்சை எழுத

விடுங்க சார்..ப்ளீஸ் சார்..

Teacher : சரி..ஆனா வேற கொஸ்டின் பேப்பர்

தான் தருவேன்..நாளைக்கு காலையில வாங்க..

பசங்களை தனித்தனியா ,வேற வேற ரூம்ல

உட்கார வச்சி..

பசங்களுக்கு கேட்கப்பட்ட ஒரே கேள்வி :

காரோட எந்த டயர் பஞ்சர் ஆச்சு..?

1.முன்பக்க வலது டயர்..

2.முன்பக்க இடது டயர்..

3.பின்பக்க வலது டயர்..

4. பின்பக்க இடது டயர்..

நீதி : இதுக்கு பேரு தான் ஆப்பு..

பசங்க எழுதிய பதில்..
.
.
.
.
.
.
.
.
.

5 . ALL THE ABOVE ...
( ஒரு டயர் பஞ்சர் ஆயிருந்தா ஸ்டெப்னி

மாட்டி ஓட்டிகிட்டு வந்து இருப்போம்..

பஞ்சர் ஆனது எல்லா டயரும் தான்.. )

நீதி : இதுக்கு பேரு தான் ரிவிட்டு.

பகிர்வதே பழக்கம்

ஒரு வயதான தம்பதி ஓட்டலுக்குள் நுழைந்தனர்;

கணவனுக்கு வயது 85க்கு மேலும்,மனைவிக்கு 80க்கு மேலும் இருக்கலாம்.

ஒரு மேசையின் முன் அமர்ந்தனர்.

பணியாளிடம் இரண்டு இட்லி,ஒரு வடையுடன் இன்னொரு தட்டும் கொண்டு வரச் சொன்னார்கள்.

இட்லி வடையும் காலித்தட்டும் வந்தன.

கணவன் ஒரு இட்லியையும்,வடையில் பாதியையும் காலித்தட்டில் வைத்து, சாம்பார், சட்னியிலும் பாதி ஊற்றி,மனைவி முன் வைத்து விட்டுச் சாப்பிடத்தொடங்கினான்.

அவன் சாப்பிடுவதைப் பார்த்தவாறே மனைவி அமர்ந்திருந்தாள்,அவ்வப்போது தண்ணீரைக் குடித்தவாறு.

ஓட்டலில் இருந்த மற்றவர்கள்,இவர்கள் வசதியற்றவர்கள்,எனவே கொஞ்சமாக வாங்கிப் பகிர்ந்துகொள்கின்றனர் என எண்ணினர்.

ஒரு இளைஞன் அவர்களிடம் வந்து,இன்னொரு தட்டு இட்லி வடை தான் வாங்கித்தருவதாகக் கூற அவர்கள் மறுத்து விட்டனர் ,தாங்கள் எப்போதுமே பகிர்வதே பழக்கம் எனக் கூறி.

கணவன் சாப்பிட்டு முடித்தான்.

கை கழுவப்போனான்.

இளைஞன் மீண்டும் வந்து மனைவியிடம் கேட்டான்”ஏன் நீங்கள் சாப்பிடவேயில்ல?”

அவள் கூறினாள்”பல் செட்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்!!”

பேச்சிலர்கள் மட்டும் இந்த குறுங்கதையை வாசிக்கவும்

பொண்ணு,, போட்டோவுல பாக்குறது ஓரளவுக்கு இருந்தாலும் பையனோட எதிர்பார்ப்புகள்,, ஏதோ 'திரிஷா மாதிரி இல்லன்னாலும் அட்லீஸ்ட் நமீதா மாதிரி' என்ற வகையில் இருப்பதால் அவனுக்கு இதில் அவ்வளவாக நாட்டமில்லை, போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்ற சொந்தகாரர்களின் குடைச்சல் தாங்க முடியாததால் அவர்களுடனே பெண் பார்க்க கிளம்பி போனவன் அவன்'. மாப்பிள்ளைக்கு இருக்கும் ஒரே கெட்டப்பழக்கம் அவன் ஒரு 'காபி பிரியன்'. இதை ஏற்கனவே சொந்தகாரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார், என் பொண்ணு அவள் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியை பறிமாற வைத்து விட்டார்கள், சிறிது பதட்டத்தில் இருந்த நம்ம மாப்ள பொண்ண சரியா கூட பார்க்காம காப்பிய எடுத்து குடிக்க ஆரம்பித்து விட்டான், அப்படி ஒரு காபியை அவன் இதுவரை குடித்ததே இல்லை அவ்வளவு சுவை, அவன் மெய்மறந்து குடித்து கொண்டிருக்கும் போது,,,

'என்ன மாப்ள காபி புடிச்சிருக்கா ??' என்று பெண்ணின் தகப்பனார் கேட்க, அதே நேரத்தில் 'என்ன தம்பி பொண்ண புடிச்சிருக்கா' எ...ன்று பையனின் சித்தப்பா கேட்க , "ரொம்ப புடிச்சிருக்கு,, சான்சே இல்ல,," என்று நம்ம மாப்ள பெண்ணின் தகப்பனாருக்கு பதில் சொல்ல, அப்புறம் என்ன,,, 'பையனே பொண்ண ரொம்ப புடிச்சிருக்குன்னு சொல்லிட்டன்' என்று சொல்லி சித்தப்பா தட்டை மாற்றிவிட்டார், இருந்தாலும்,, இந்த காபி ஒன்றே போதும்,, அவளுடன் ஆவலுடன் வாழ,,, கலக்கிட்டடி காப்பி,, என்று மாப்பிள்ளையும் மனதுக்குள் கவிதை கிறுக்க ஆரம்பித்து விட்டான்,,

கல்யாணமும் முடிந்து விட்டது,, முதலிரவில்,, நம்ம மாப்ள தன் மனைவியின் கையை பிடித்து கொண்டு,,
"எனக்கு சுவையான காபியை போட்டுத்தந்த இந்த கைக்கு அன்னைக்கே முத்தம் குடுக்கனும்னு நெனச்சேன்,, ஆனா உங்க அப்பா திட்டுவாருன்னு பேசாம போயிட்டேன்" ,,

(சிரிப்பு தாங்க முடியாமல் மனைவி கூறினாளாம்,,)

"நீங்க அன்னைக்கே முத்தம் குடுத்திருந்தாலும் எங்க அப்பா ஒன்னும் சொல்லி இருக்க மாட்டாரு, ஏன்னா அந்த காப்பிய போட்டதே எங்க அப்பா தான்,, அதனால தான் காபி எப்படி இருக்கு மாப்ளன்னு ரொம்ப ஆர்வமா உங்க கிட்ட கேட்டாரு,,,

மாப்பிள்ளைக்கு கோபம் தலைக்கேற,, "அப்புறம் எதுக்கு நீ போட்டதுன்னு உங்க அம்மா பொய் சொன்னாங்க ??"

மனைவியும் பயங்கர கோபத்துடன்..

"அந்த பொய்ய சொல்ல சொன்னதே உங்க அம்மாவும் உங்க சித்தியும் தான்,,எனக்கு பொய் சொல்ல தெரியாது,, எனக்கு அடுப்பு கூட பத்த வைக்க தெரியாதுன்னு அப்பவே அவங்க கிட்ட உண்மைய சொல்லிட்டேன்"

நீதி : திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவதில்லை, சொந்த காரர்களால் நிச்சயிக்கப்படுகிறது.

காளை மாட்டை விற்பனைக்குத் தர முடியுமா?

ஒருவருடைய மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதிச் சடங்கின்போது அதை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு சம்பவத்தைக் கவனித்தார்.

துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெருங்கி வந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு "ஆமாம்" என்று தலை அசைத்தார். ஆனால், துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கிவந்து ஏதோ சொல்கிறபோது "இல்லை" என்று தலை அசைத்தார்.

அது தொடர்ந்து கொண்டே இருந்தது. எனவே இறுதிச் சடங்கெல்லாம் முடிந்த பிறகு புரோகிதர் அந்த விவசாயிடம் வந்து, "பெண்கள் வந்தால், ஆமாம் என்று தலையாட்டினிர்கள். ஆண்கள் வந்தால், இல்லை என்று தலையாட்டினிர்களே, ஏன்..?! என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி, பெண்களெல்லாம் வந்து என் மனைவியைப் பற்றி நல்லவிதமாகச் சொன்னார்கள். "எவ்வளவு அழகாய் இருந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்யும் குணம் அதிகம்" என்று, அதற்கு ஆமாம் என்று நானும் தலையசைத்தேன்.

சரி ஆண்கள் வந்து கேட்டால் "இல்லை" என்று தலையசைத்தீர்களே ஏன்..?! ஒ.. அதுவா, அவர்கள் அந்த 'காளை மாட்டை விற்பனைக்குத் தர முடியுமா?" என்று கேட்டார்கள். நான் இல்லை என்று சொன்னேன் என்றார்.


நம்மாளு

நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"
"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"
"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.

பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"
மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"

அவள் உன்னைக் காதலிப்பாள்..

உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி Mr. Bean கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடவுளே.. .!
என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக்
காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவர் கேட்டார் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக
அவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு
ஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.

எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?-
லேசான நகைப்போடு இவர் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -

அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்..

நம்ம கிட்டேயேவா ??

"Madam, உங்க retirement க்கு அப்புறம் எக்கசக்க பணம் வரா மாதிரி ஒரு plan வெச்சிருக்கேன்"

"எனக்கு retirement லாம் இல்லீங்க"

"ஏன் மேடம்?"

"ஏன்னா எனக்கு தான் வேலையே இல்லையே..ஹிஹிஹ்"

"சரி உங்க கணவருக்கு எடுத்துக்கலாம் இந்த plan ஐ"

"சரி சொல்லுங்க"

"மாசா மாசம் 5999 கட்டினா போதும் இப்ப 40 வயசு ன்னு வெச்சுக்கோங்க..25 வருஷம் கட்டுங்க...65 வயசுல ஒரு கோடி பணம் உங்களுக்கு கிடைக்கும்"

"அதென்னா 5999 ..6000 ன்னு சொல்லுங்க..ஏதோ 5000 சொச்சம் கட்டினா போதும்னு பில்டப் தர தானே இந்த gimmicks ?"

"ஹிஹி"

"65 வயசுல கோடி பணத்த வெச்சிகிட்டு என்னங்க பண்ண போறேன்..பல் இல்லாத காலத்துல பக்கோடாவா?"

"என்ன மேடம் அப்ப வர வியாதிக்கு ஒரு கோடி இல்ல ரெண்டு மூனு கோடி கூட மருத்துவ செலவுக்கு பத்தாது"

"அதெல்லாம் வேணாங்க..நான் வேணா ஒரு plan சொல்றேன்.."

"சொல்லுங்க மேடம்"

"நீங்க இப்பவே அந்த ஒரு கோடிய என் கிட்ட குடுத்துடுங்க ..மாசா மாசம் 25 வருஷம் அந்த 5999 ரூபாவ நான் கட்டறேன்.. வேணும்னா 6000 ரூபாவா கட்டிடறேன்..இந்த ஒரு கோடிய வெச்சு நான் வியாபாரம் பண்ணி 2 மூனு கோடியாக்கி 65 வயசுல அமோகமா retire ஆயிடறேன்..எப்படி இந்த plan?"

# நம்ம கிட்டேயேவா ??

நம்ம ஆளு ஒருத்தர்,

பாலஸ்தீன நாட்டுக்கு உல்லாசப் பயணம் சென்றார்.

அங்கு ஒரு ஏரியில் படகுச் சவாரி நடந்து கொண்டிருந்தது. இந்த மனிதருக்கு படகுச்சவாரி செய்ய ஆசை....

"படகுச்சவாரி செல்ல எவ்வளவு பணம் தர வேண்டும்?" என்று ஒரு படகோட்டியிடம் கேட்டார்.

"இருபது டாலர்" என்று அவன் சொன்னான்.

"இந்த தொகை மிகவும் அதிகம்" என்று வாதிட்டார் நம்ம ஆள்.

”அய்யா,இந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது என்பதை மறந்து விடாதீர்கள்”என்றான் படகோட்டி.

’நீ என்ன சொன்னாலும்நீ கேட்கும் பணம் அதிகம் தான்’என்றார் நம்ம ஆள்.

”ஏசுபிரான் இந்த ஏரியில் தான் நடந்து சென்றார், தெரியுமா?”என்று கேட்டான் படகோட்டி.

அதற்கு நம்ம ஆள் சொன்னார்,

"ஆமாம் ... நீங்கள் படகில் செல்ல இவ்வளவு அதிக தொகை கேட்டால், ஏசு நடந்து தான் சென்றிருப்பார்.இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லையே!"

தந்திரம் !!!

வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு, இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவருக்கு அது மிகத் தொந்தரவாக இருந்தது. ஒரு நாள் இளைஞர்கள் சப்தம் போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது பெரியவர் அவர்களிடம் போய்,”நான் ஓய்வு ஊதியம் வாங்குபவன். எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை நீங்கள் எல்லோரும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் தினசரி விளையாடினால் நான்உங்களுக்கு வாரம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன்,” என்றார்.

இளைஞர்களுக்கு மிகவும் ஆச்சரியம்!தாங்கள் விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பணமா! அவர்கள் தினசரி விளையாடினார்கள்.

ஒரு வாரம் முடிந்தவுடன் பெரியவர் அவர்களிடம் ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார்.

இரண்டாவது வாரம் அவர்கள் பணம் கேட்ட பொது, திடீரென செலவு வந்து விட்டதாகக் கூறி இருபது ரூபாய் தான் கொடுத்தார்.

மூன்றாவது வாரம் ஓய்வு ஊதியம் இன்னும் வரவில்லை எனக் கூறி பத்து ரூபாய் கொடுத்தார்.

நான்காவது வாரம், தன்னால் இனி வாரம் ஐந்து ரூபாய் தான் கொடுக்க இயலும் என்றார்.

இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.”வாரம் முழுவதும் விளையாடுவதற்கு வெறும் ஐந்து ரூபாயா? இனி நாங்கள் இங்கே விளையாட வரமாட்டோம்.”என்று கூறிச் சென்று விட்டனர்.

பெரியவருக்கு இப்போது பரம திருப்தி !!!

Monday, February 17, 2014

டாய்லெட்ல mobile phone பயன்படுத்தாதீங்க ப்ளீஸ்

ஒருவர் டாய்லெட்டில் அவருடைய விலையுயர்ந்த ஆப்பிள் ஃபோனை உள்ளே போட்டுவிட்டார். ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சே!
குய்யோ முறையோ என அலறி அழ ஆரம்பித்தார்..

இந்த ஆளின் கத்தல் தாங்காத டாய்லெட் தேவதை, அவர் முன்னே தோன்றி, "ஏன் இப்படி ஊளையிடுகிறாய்" என்றது?.
இவரும் கதையைச் சொன்னார். 

படக்கென மறைந்த தேவதை, ஒரு சில நிமிடங்களில் தகிக்கும் தங்க
நிறத்தில் ஒரு ஃபோனைக்கொண்டு வந்து கொடுத்து.
இவர் ஏற்கனவே விறகுவெட்டி (தங்கக்கோடாரி) கதைகளை கேள்விப்பட்டிருந்ததால் மிகவும் நேர்மையாகவும், நியாயமாகவும் இருப்பதற்காக "தேவதையே, என்னுடையது சாதாரண ஃபோன் தான்.
தங்கத்தால் ஆனது அல்ல" என்றார் பவ்வியமாக!
உடனே அந்த தேவதை,"ஏ மூதேவி.. இது உன்னுடைய ஃபோன் தான், நன்றாக கழுவி விட்டு உபயோகப்படுத்து"என்று கூறிவிட்டு மறைந்தது.!!??
கதை கருத்து: யாரும் டாய்லெட்ல mobile phone பயன்படுத்தாதீங்க ப்ளீஸ்

எவ்வளவோ மேல்

"கடன்காரான் " ஆவதை விட "பிழைக்கத் தெரியாதவன் " எவ்வளவோ மேல் .

"டை " கட்டிய பணக்காரனை விட "கை " கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .

"கெட்டவன் " ஆவதைவிட "கையாலாகாதவன் " எவ்வளவோ மேல் .

"வல்லவன் " ஆவதைவிட " நல்லவன் "எவ்வளவோ மேல் .

குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .

"காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .

புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ "வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன் " எவ்வளவோ மேல் .

மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை "விட நெறி தவறாத "எறும்பு " எவ்வளவோ மேல் .

வெற்றிகளி ன் "கர்வங்களை " விட தோல்வியிலும் "நம்பிக்கை " எவ்வளவோ மேல் .

பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல் .

எழுத்தாளர் எஸ்,ராமகிருஷ்ணன் சொன்ன ஜப்பானியக் கதை

ஒரு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள். கண்ணில் பட்டவர்களை யெல்லாம் வெட்டிச்சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.

தெருவில் இரண்டு கைக் குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.

ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது.இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும்.இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள்.சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.

இறக்கி விடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார்,''ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே!அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பழி கொடுக்கத் துணிந்தாய்?''என்று.

அந்தப்பெண் கண்ணீருடன் சொன்னாள்,''என் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் ராணுவம் வந்தது.

பக்கத்துவீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது.அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்.

''அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.

எழுத்தாளர் எஸ்,ராமகிருஷ்ணன் சொன்ன ஜப்பானியக் கதை. இது. ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் கதை

ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள்

ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி'பத்தடி ஆழம்..பத்தடி அகலம்கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?' என்பதுதான்.

கத்திக் கூப்படு போடுவேன் என்றான் ஒருவன்..

தத்தி தத்தி ஏறிடுவேன் என்றான் ஒருவன். இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.

கடைசியில் ஒருவன் கேட்டான்.
'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?'.
'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்.

'நான் விழுந்தது..பகலிலா..அல்லது இரவிலா'
'ஏதற்குக் கேட்கிறாய்?'-தேர்வுக்குழுவினர்.

இவன் சொன்னான்'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை.. அஜாக்கிரதையானவனும் அல்ல. அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை. அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'

அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினர்க்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

ஒரு மனிதனின் வெற்றி அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை.ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.

Sunday, February 16, 2014

இன்று நீ ஆறாவது...!!

மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன்ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான்.

அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான். அதற்கு மீன் பிடிப்பவன், தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும் இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான்.

'அது எப்படி செயல் படுகிறது..??' என்று கேட்டான்.

''சொல்கிறேன். ஆனால் அதற்கு நீ ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்...!'' என்றான். வந்தவனும் ஆர்வ மிகுதியால் ஆயிரம் ரூபாயை அவனிடம் கொடுத்தான்.

இப்போது மீனவன் சொன்னான்,''நான் கையிலிருக்கும் கண்ணாடியை மீன்கள் நீரில் ஓடும் பக்கம் திருப்பி வைத்து சூரிய ஒளியின் பிரதிபலிப்பான வெளிச்சம் ஓடும் மீன்களின் மீது படுமாறு செய்வேன். உடனே ஓடும் மீன்கள் குழப்பத்தில் நிற்கும். அப்போது நான் அவற்றை இலகுவாகப் பிடித்து விடுவேன்.

வந்தவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் கேட்டான், 'இது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது. இப்படி தான் நீ மீன் பிடிப்பாயா..? அது சரி, இன்று இந்த முறையில் எத்தனை மீன்கள் பிடித்திருக்கிறாய்..?

மீனவன் சொன்னான்....

''இன்று நீ ஆறாவது...!!''

இப்படித்தான் நம்மில் பலர் “பணம் சம்பாதிப்பது எப்படி..??” கோடீஸ்வரர் ஆவது எப்படி..??” சிறப்பாக தொழில் செய்வது எப்படி..??” என்று எழுதப்பட்ட புத்தகங்களை வாங்குகின்றனர்...!!!

பிசினஸ் தந்திரம்

பிசினஸ் தந்திரம்
-----------------------

இளைஞன் ஒருவன் நிறைய கோழி முட்டைகளை ஒரு மூன்று சக்கர வண்டியில் வைத்து மக்கள் கூட்டம் மிகுதியாக உள்ள கடைத்தெரு வழியே சென்று கொண்டிருந்தான். ஒரு திருப்பத்தில் எதிர்

பாராதவிதமாக வண்டி கவிழ்ந்து விட்டது. முட்டைகள் அனைத்தும் உடைந்து சிதறி விட்டன. இளைஞன் அழ ஆரம்பித்து விட்டான், ''ஐயோ, என் முதலாளிக்கு என்ன பதில் சொல்வேன்? இவ்வளவு

முட்டைக்குரிய காசுக்கு நான் என்ன செய்வேன்?'' அங்கே பெரும் கூட்டம் கூடிவிட்டது. எல்லோருக்கும் அழுது கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது.

அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர், ''தம்பி, ஏன் அழுகிறாய்? உடைந்த முட்டைகளுக்கான காசை உன்னால் கொடுக்க முடியாது என்பதுதானே உன் வருத்தம்?'' என்று கேட்க இளைஞனும் ஆம்

என்றான். உடனே அப்பெரியவர் தன் துண்டை எடுத்தார்.'' இந்தக் கூட்டத்தில் இரக்க குணமுடையவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்,'' என்று சொல்லியபடியே அதில் தன் பையிலிருந்து எடுத்து ஒரு பத்து

ரூபாய் நோட்டைப் போட்டார்.

பின் அந்தத் துண்டுடன் அந்தக் கூட்டத்தை சுற்றி வந்தார். எல்லோரும் அதில் காசு போட்டார்கள். எல்லோர் முன்னிலையிலும் பணத்தை எண்ணினார். அதை அப்படியே இளைஞனிடம் கொடுத்துவிட்டு,''

இனியாவது கவனமாக நடந்துகொள்,'' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.

கூட்டத்திலிருந்த அனைவரும் அவரை பரோபகாரி என்று வாழ்த்தினர்.

கூட்டம் கலைந்தது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் இளைஞனிடம்,'' அவர் மட்டும் வரவில்லையென்றால் உன் கதி என்ன ஆகி இருக்கும்? என்ன நல்ல குணம் அவருக்கு? அவரை

உனக்கு முன்னரே தெரியுமா?'' என்று கேட்டார்.

அந்த இளைஞன் சொன்னான், ''அவர்தாங்க என் முதலாளி. இந்த முட்டைகளை ஏற்றி அனுப்பியவர்.''

கணவர்கள் விற்கப்படும்



ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.




அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..




அது என்னன்னா...!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."ப‌ச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது"

முதல் தளத்துல அறிக்கை பலகைல,

"முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் ..வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ... சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது... சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது .. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான்

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது..