Wednesday, March 26, 2014

ஒரு விவசாயி தோண்டிய பாதி கிணறில் \"பசு \" ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது ...!

பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சியை விவசாயி தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன ..!
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர் ..?
அந்த பசுவை பாதி கிணறுக்குள் மண்னை போட்டு மூடி விடுவதாக ..

பசுவின் மீது மண்னை போட்டனர். பசு சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தது
விவசாயிகள் மண்னை அதன் மீது போட போட யாது உடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் சேர்த்து இறுதியில் தானாகவே வெளியே வந்தது ..
.

நீதி: \"மற்றவர்கள் உன்னை ஒரு முடிவுக்கு கொண்டு வர சூழ்ச்சி செய்வதற்காக ஏளனம் நையாண்டி பழிசுமத்தல் சேறு பூசுதல் \" என்று பலவிடையத்தில் வருவர்
நீயோ அவற்றை நீ அடித்தளமாக வைத்து முன்னேறிவா இந்த பசுவை போல்

ரொம்ப‬ பாசக்காரியா இருக்காளேய்யா!!

நேற்று ஆபிஸ் முடிந்ததும் வீட்டுக்குப் போனேன்.

நல்ல பசி....

சாப்பிட உட்கார்ந்தால் ... உணவு தயாராகவில்லை.

எனக்கு வந்ததே கோபம்....

"பளார்" என என மனைவியின் கன்னத்தில் அறைந்து விட்டேன்.

அவள் அழ ஆரம்பிக்க ...

பக்கத்து வீட்டுக்காரகளெல்லாம் என் வீட்டை எட்டிப் பார்க்கும் படி ஆயிற்று.

விளைவு ... பசியுடனேயே தூக்கம்....

இன்று காலை 6 மணி இருக்கும்...

என் மனைவியும், பக்கத்து வீட்டுக்காரியும் பேசும் சத்தம் என் தூக்கத்தைக் கலைத்தது.

"ஏண்டி...இப்படி மாட்டை அடிச்ச மாதிரி அடிக்கிறாரு ... இவர்கூடல்லாம் எப்படி குடும்பம் நடத்துற? ... போ... போய் போலிஸ் ஸ்டேடன்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்து நாலு சாத்து சாத்த சொல்லு ... அப்பதான் இந்த மாதிரி ஆளுங்கல்லாம் திருந்துவாங்க"

சிறிது நேர மவுனத்திற்கும் பின் என் மனைவி சொன்னாள்,

" நானும் அப்படித்தான் நெனச்சேன் ... ஆனா, நான் பூரிக்கட்டையால அடிச்சதுல அவரு உடம்பெல்லாம் வீங்கியிருக்கே ... அதை போலிஸ்காரங்க பார்த்தாங்கன்னா ... நானும்ல மாட்டிப்பேன்"

ரொம்ப‬ பாசக்காரியா இருக்காளேய்யா!!
ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்.. ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு .. . .

"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !! .

"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ? .

"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் போட்டிங்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!"

"கோவப்படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா ?" "இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?" . "இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.." .

".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! " .

"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்னை லவ் மேரேஜ் பண்ணா... ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்... அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்!! .

"சார்..!! நான் தான் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல .. என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..? .

இப்ப புரிதா !!.. நான் இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!..

அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!!!

+) கற்பனை கதையே சிரிப்பதர்க்கு மட்டும்.!

ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள்

சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.

இரக்கப்பட்ட முதலாளி, இங்கு உனக்குத் தருவது போல வேலை எதுவும் இல்லை. சர்க்கசில் இருந்த கொரில்லா குரங்கு ஒன்று இறந்து விட்டது.

அந்தக் கொரில்லாவின் தோலை போர்த்திக் கொண்டு நீ கொரில்லா போல நடி சர்க்கசைப் பார்க்கும் எல்லாரும் உன்னை உண்மையான கொரில்லா என்றே நினைத்துக் கொள்வார்கள்.

நான் உனக்கு சம்பளம் தருகிறேன். நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்டார்.

அவனும் ஒப்புக் கொண்டான்.

சர்க்கஸ் நடந்து கொண்டிருந்தது. கொரில்லாவைப் போல வந்த அவன் கம்பிகளில் தாவி விளையாடினான்.
பிடி தவறிய அவன் சிங்கத்தின் கூண்டருகே விழுந்தான். சிங்கம் அவனை நெருங்கியது.
பயந்து போன அவன், ஐயோ! சிங்கம்! என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறினான்.

உடனே அந்தச் சிங்கம், முட்டாளே! வாயை மூடு. இப்படி நீ அலறினால் நாம் எல்லோரும் வேலையை இழக்க வேண்டி இருக்கும் என்று மெல்லிய குரலில் சொன்னது...

மனைவியின் பிறந்தநாள் அன்று ...

கணவன் குடித்து விட்டு வருகிறான் வீட்டிற்கு ....
வந்தவன் தன்னிலை அறியாமல் பொருட்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு உடைக்கிறான் ...
நடுவீட்டில் வாந்தியும் எடுக்கிறான் ...
மனைவிக்கு கோவம் பொறுக்கவில்லை ......

மறுநாள் காலை கணவன் எழுந்தபோது மனைவி வீட்டில் இல்லை .....
ஒரு துண்டு காகிதம் தலையணை பக்கத்தில் இருந்தது ...
அதில் மனைவி எழுதி இருந்தால் ....

" ஏங்க உங்களுக்கு பிடிச்ச டிப்பன் செஞ்சி வச்சி இருக்கேன் ... மறக்காமே சாப்டுங்க ... நா கொஞ்சம் அவசரமா வெளிய போகணும் ... நேத்து உடைஞ்ச பொருள் எல்லாம் வாங்கணும்... சீக்கிரமா வந்துடுவேன் ... லவ் யூ "

இதை படித்த கணவனுக்கு அதிர்ச்சி ...
கோபாமாக சண்டை போடுவாள் என்று எதிர் பார்த்த மனைவி இவ்வளவு அன்பாக கடிதம் எழுதி வைத்து இருக்கிறாளே ....

மகனை அழைத்து கேட்டான் நேத்து என்ன நடந்தது என்று ....

மகன் : "அம்மா உன்ன பெட்ல படுக்கவச்சி.. உன் பேன்ட் பெல்ட் கலட்டுனாங்க... அப்போ நீ... ஏய் கையை எடு எனக்கு ஏற்க்கனவே கல்யாணம் ஆகிடுச்சி போதைலயே சொன்ன பா "

# உண்மையான அன்பு புனிதமானது ...

அவ பேரு சுபா?

கல்யாண வீட்டில் ரொம்பவே அழகாய் இருந்த அந்த பெண் அடிக்கடி அவனது கண்ணில்பட்டாள். ஓரிரு முறை அவனை பார்த்து மெலிதாய் சிரிக்கக்கூட செய்தாள். ‘போறதுக்குள்ள அவளை எப்படியாவது தூக்கிற(?) வேண்டியது தான்’ என்று முடிவுசெய்தான் அவன் ...

பந்தி முடிந்து வரும் வழியில் தனியே மாட்டினாள் அந்த பெண் அவனிடம் .

“ஹாய்.. ஐ ம் அருண்..” என்றபடி அவளிடம் கையை நீட்டினான் ..

“ம்..” என்றாள் கேள்வித் தோரணையில்.

“ ஓ.. இங்கிலீஷ் தெரியாதா.. உன் பேரு என்னன்னு கேட்டேன்”

“ அதற்கும் “ம்..” என்றே பதில் தந்தாள்..

“ச்.. தமிழுமா.. ஆப்கா... நாம்..க்யா ஹே..” என்ரான் அவனது ப்ராத்மிக் ஹிந்தியை மனதில் கொண்டு வந்து...

“ ஹிந்தியும் இல்லைனா என்ன... தெலுங்கா...” எனக்கு தெலுங்கெல்லாம் தெரியாது.. டி.வி.டியில படம் பாக்குறதோட சரி...

இதற்கு அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. தலையை திருப்பி யாரையோ தேடினாள்..

கொஞ்ச நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன் ..

“ஆங்.. கண்டுபிடிச்சுட்டேன்.. கேரளா... மலையாளம்.. கலரா இருக்கும் போதே நினைச்சேன்... இப்போ சொல்லு.. நிண்ட பேரு எந்தா?”

இப்போது அவள் மெதுவாய் அவனைப்பார்த்துப் புன்னகைத்தாள்..

“என் நிலைமை சிரிப்பா இருக்குதா.. இதப்பாரு எனக்கு வேற மொழியெல்லாம் தெரியாது அதனால நீயே சொல்லிடு.. அட்லீஸ்ட் ஏதாவது பேசு அதவச்சாது நீ எந்த மாநிலம்னு தெரிஞ்சுக்கறேன்” என்ரான்
“..............”

அப்போது அங்கு வந்த அவனது மனைவி “ஐயோ.. அருண்.. அவளுக்கு இன்னும் ஒரு வயசு கூட ஆகலை.

பேச்சு வராத குழந்தைய கேட்டா எப்படி பதில் சொல்லுவா? அவ பேரு சுபா” என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள்.

எங்க கொண்டு வச்சான் பாருங்க டிவிஸ்ட... அவ்வ்வ்வ்
மஹாபாரத போர் துவங்கிவிட்டது..

பகவான் கிருஷ்ணர் துரியோதனுக்கும் உறவினர்.
.பஞ்சபாண்டவருக்கும் உறவினர்..

கிருஷ்ணனிடம்உதவிகேட்டு துரியோதனும் வருகிறான்..
அர்ஜூன்னும் வருகிறான்..
.
இருவருக்கும் உதவிசெய்ய வாக்களிக்கிறார்.கண்ணன்...

யார் முதலில் உதவிகேட்பது என்ற நிலையில் துரியோதனுக்கே வழங்கபடுகிறது..

கண்ணனிடம் உள்ள பல்லாயிரகணக்கில் ஆன சேனையை கேட்கிறான்.துரியோதன்னஃ
.தந்துவிடுகிறான்..

அடுத்து அர்ஜூன.ன்..கண்ணன் மட்டும் போதும் எனகிறான்..
சரி..எனகி்கிறான்றான்கண்ணன்..

பல்லாயிரகணக்கான சேனையைவிட கடவுள் இருக்கும் இடமே வெற்றியின்இடம் என புரிந்துகொள்கிறான் துரியோதன்னன்...போர்க்களத்தில்..
...................................................................................................
அப்படியெனில் கோயிலுக்கு போனால் கடவுளையே எனக்கு வேண்டும் எனக்கேட்பதை தவிர என்ன இருக்கிறது..
அன்புடன் அழைத்தால் வரமால இருப்பார்..?

கோயிலுக்கு சென்றால் வேண்டப்படுவது கடவுளையே தவிர வேறு எதுவும் இல்லை..

தூங்கனது போதும் எந்திரிங்கப்பா

ஒரு கிராமத்தானுக்கு லாட்டரியில பரிசு விழுந்தது.அந்த பணத்தை எடுத்து கொண்டு தனக்கு காரும்,கோட்டு சூட்டும், தொப்பியும் வாங்கி கொண்டு கிராமத்திற்கு வந்தார்.

அந்த கிராமத்தில் யாரும் காரையே பார்த்தது இல்லை.இவர் வருவோர் போவோரிடம் எல்லாம் பார்த்து கையை அசைத்து கொண்டே சென்றார்.
அந்த கிராமத்தையே சுற்றி வந்தார் ஆனால் ஒருவரை கூட அவர் இடிக்கவில்லை.

ஏன்னா அந்த காருக்கு முன்னாடி இரண்டு குதிரைகளை கட்டி ஓட்டிகிட்டு இருக்கார். அவருக்கு கார் இஞ்சின் ஸ்டார்ட் பண்ண தெரியலையாம்.காருக்குள்ள 100 குதிரை சக்திகள் இருக்கிறது ஆனால் இவர் வெளியே 2 குதிரையை கட்டி ஓட்டிக் கொண்டு இருக்கிறார்.

நம்ம எல்லாருமே இவரைப் போலத்தான்.நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது ஆனால் நாம் யாரும் அதை பயண்படுத்தாமல் இருக்கிறோம்.தூங்கனது போதும் எந்திரிங்கப்பா...

Friday, March 21, 2014

3 மருமகன்கள்..

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..

அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்..

நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ,

மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.

.அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..

” மாமியாரின் அன்புப் பரிசு..”

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது..

அவரும் ஒரு மாருதி கார் வென்றார்..” மாமியாரின் அன்புப் பரிசாக..”.

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது..

அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..
மாமியார் கடைசியா பரிதாபமா ‘லுக்கு’ உட்டப்ப சொன்னான்..

“போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.

சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்

பொண்ணா வளர்த்துவச்சிருக்க..?”
மாமியார் செத்துட்டுது

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே

ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு..”

மாமனாரின் அன்புப் பரிசு” என்ற அட்டையோட…!
கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.

கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.

தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான்.

“இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.

ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.

“அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!

இன்னும் 8 மணி நேரம் தான்?

டாக்டர் கணவன் உடம்பை சோதித்துவிட்டு - "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."

மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.

எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கட்டி சட்னியும் செஞ்சி குடும்மா, இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

இரவு 10 மணி : நல்ல பசும்பால்ல, உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.

அவள் : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....
உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!!

எப்படி மைலார்ட்?

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”





நம்பிக்கை

நடைபாதை...
ஓர் இளைஞன். கையில் பாட்டில்.

”இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!” என்று கூவி விற்றான்.

நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்…

சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரியைத் தேடினார்கள். கிடைக்கவில்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.

“அடடா! உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… எங்கே இருந்தீர்கள் இதுவரைக்கும்….?”

”சிறையிலே இருந்தேன்!”

”ஏன்?”

”போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் தண்டனை!”

”உங்க மருந்து போலி மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான் சுறுசுறுப்பு பெற்றது உண்மை!”

”அப்படி இல்லே! நான் வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து வித்தேன்.”

”அப்படின்னா… எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது…?”

"அது உங்கள் நம்பிக்கை! நம்பிக்கை தான் வாழ்க்கையின் உந்து சக்தி, மருந்து மாத்திரை அல்ல‌!”


Wednesday, March 19, 2014

இரவு 11 மணி சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார்.

"தம்பி ஆஸ்பத்திரி போகனும்"

"நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்"

"என் மகளுக்கு பிரசவ நேரம்ப்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி.

"நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.

அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.

டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை. இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.

இப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது. நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.

அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.

"தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்" என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.

"வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்கு புரிய வச்சிட்டார்.
பணத்தை நீங்களே வைங்க" என்று சொன்னபடி நடக்க
ஆரம்பித்தான்.

ஏதோ யோசிக்க மொபைலை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பண்ணினான்.

"ஹலோ முதியோர் இல்லமா?"

"ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?"

"மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன்.. இல்லையா? அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக"

முதியோர் இல்ல பொறுப்பளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பண்ணி விட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான்.

ஆம். நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது.


நீங்க கேளுங்க

ஒரு டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்தாங்க....

"திமிங்கலத்தால மனுஷன முழுங்க முடியாது அது பெரிசு தான் ஆனா வாய் சின்னது அதனால மனுஷன முழுசா முழுங்க முடியாது"

உடனே ஒரு பொண்ணு கேட்டுச்சு,"இல்லையே எங்க பக்கத்து வீட்டு ஜானை ஆறு மாசம் முன்னாடி திமிங்கலம் முழுங்கிச்சே"

டீச்சருக்கு கடுப்பு திரும்பவும் சொன்னாங்க,

"இல்ல கண்டிப்பா திமிங்கலத்தால முழுங்க முடியாது"

அந்தப்பொண்ணு,

"சரி ... நான் சொர்க்கத்துக்கு போனா ஜான் கிட்ட கேப்பேன்"

டீச்சர்,

"ஒரு வேளை ஜான் நரகத்துக்கு போயிருந்தா...."

" நீங்க கேளுங்க"

எவ்வளவு வெயிட்?

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார்.

மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

# இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.

அய்யய்யோ

(கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...)

மனைவி : வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்!

கணவன் : ஏன்? என்னாச்சு..?

மனைவி : இன்னைக்கி ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்!

கணவன் : சரி...!

மனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது...!அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி!

கணவன் : (கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சுவிட்டுட வேண்டியதுதானே!

மனைவி : மன்னிக்கிறதா?அந்தப் பேச்சுக்கே இடமில்ல.எங்க அந்த உருட்டுக்கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)

(வாசலிலிருந்து வந்த மகன்...)
மகன் : யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா!

அப்பா : ஏண்டா..?

மகன் : நான்தான் கோவத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா!!

அப்பா : அடப்பாவி மகனே! வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே.,அய்யய்யோ ...இப்ப நான் என்ன செய்வேன்..!எங்க போவேன்..!செய்யாத குத்தத்துக்கு நாயா, பேயா அலைய வெக்கிறாங்களே.....இத கேட்க நாதியில்லையா....

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது

ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்.

அவை மேலே பறக்கும் பலூன்கள்.

அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக் கொண்டிருந்தாள்.

மெல்ல பலூன்காரரிடம் வந்தாள்.

‘‘இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா?’’ என்று கேட்டாள்.

‘‘ஓ… பறக்குமே. என்ன விஷயம்?’’

‘‘பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?’’ என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி.

சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.

‘‘ஏம்மா கேக்குற?’’

‘‘இல்ல, பலூன் கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா?’’

பலூன்காரருக்கு இப்போது விஷயம் புரிந்தது. அந்தச் சிறுமியின் நிறம் கறுப்பு.

‘‘பலூன் மேல போறதுக்குக் காரணம் அதோட கலர் இல்லம்மா. உள்ள இருக்கிற வாயுதான். என்ன கலர்னாலும் உள்ள இருக்கிறது சரியா இருந்தா, யார் வேண்டுமானாலும் உயரலாம்’’ என்றார்.

வெளித்தோற்றங்கள் உயர்வைத் தராது.

Friday, March 7, 2014

காது கேட்காத தவளை

மூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகின.

அவை மலையேற ஆரம்பிக்கும் போது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவுதான்" என்றார்.

உடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்தி விட்டது.

சிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றன " என்றார்.

உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கிவிட்டது.

ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது.

பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார்.

அதற்கு அந்தத் தவளை "எனக்குக் காது கேட்காது " என்றது.

நாமும் வாழ்வில் இந்த தவளையை போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.

எதில் மகிழ்ச்சி!!!

ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.

’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.