Thursday, May 29, 2014

நிவாரணம்

அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக்கொண்டிருந்தது.

அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து
விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் "மன்னா! இதற்கு மருந்தே கிடையாது" என்று உண்மையைச் சொன்னான்.

அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம்
தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான்.

ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு
பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர்.

அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக்
கொண்டிருந்தார்கள்.

அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான்.

பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர்.

"வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா"
என்று கூறினர்.

நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.

அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் "என்னை
நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்" என்று கூறினான்.

வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள்.

அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.

அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான்.

"மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும்.

இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம்
முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்" என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "இப்போதே அந்தப்புரத்திற்குப் போய்
தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்" என்று கிளம்பினான்.

அப்போது மருத்துவன் "மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!" என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான்.

மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான்.

மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி
விட்டார்கள்.

அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான்.

அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. "குரங்கை நினைக்கக் கூடாது" என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான்.

என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.

மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை.

சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.

ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.

பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப்
பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.

நீதி -அதிகாரம், பலம் உள்ள சில முட்டாள்களின் முட்டாள்தனமான நடவடிக்கைகளை நேரடியாக எதிர்ப்பதைவிட அறிவைக்கொண்டு சாதுரியத்துடன் எதிர்கொள்வதே சிறப்பானதாகும்.

Wednesday, May 28, 2014

இரு சகோதரர்கள் !!!

சகோதரர்கள் இருவர் அவர்களின் குடும்பப் பண்ணையில் ஒன்று சேர்ந்து உழைத்தனர். சகோதரர்களில் திருமணமானவனுக்குப் பெரிய குடும்பம் இருந்தது.

மற்றவன் தனிக்கட்டை. ஒரு நாள் சகோதரர்கள் குடும்பசொத்துக்களை சரிசமமாகப் பிரித்துக் கொண்டனர். விளைச்சல், லாபம் எல்லாவற்றையும்.ஒரு நாள் பிரம்மச்சாரி சகோதரன் நினைத்தான், மகசூல் லாபத்தையெல்லாம்நாங்கள் சரிசமமாகப் பங்கீட்டுக் கொண்டது சரியல்ல.


நான் தனியாள். எனக்கான தேவைகள் குறைவு. ஆகவே, அவன் தினமும் இரவில் ஒரு மூட்டை தானியத்தைத் தூக்கி, சகோதரனின் தானியக்கிடங்கு பக்கமாகத் தள்ளிவிட்டான்.

அதேநேரம், திருமணமான சகோதரன் இப்படி யோசித்தான். ‘உற்பத்தி லாபத்தை எல்லாம் இருவரும் சமமாகப் பிரித்துக் கொண்டது முறையல்ல.

என்னை கவனித்துக் கொள்ள மனைவி, குழந்தை குட்டியென்று இருக்கிறார்கள்.சகோதரனுக்கு என்று யாரும் இல்லை. அவனுக்குத்தான் பங்கு அதிகமாகத் தேவை’. எனவே ஒவ்வொரு நாள் இரவும் ஒரு மூட்டை தானியத்தை தூக்கி பிரமச்சாரி சகோதரனின் தானியக்கிடங்கு பக்கமாகப் போட்டான்.

நாட்கள் பல கடந்தாலும் தத்தமது தானிய இருப்புக் குறையாமல் இருப்பதைப் பார்த்துக் குழம்பினர் சகோதரர்கள் இருவரும்.

இந்நிலையில் ஒரு நாள் இரவு சகோதரர்கள் தானிய மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு அடுத்தவர் பக்கமாக ஒரே நேரத்தில் போக, எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர்.

அதுவரை என்ன நடந்திருக்கிறதுஎன்பதையும் புரிந்து கொண்டனர். உடனே சகோதரர்கள் மூட்டைகளைப் போட்டுவிட்டு ஓடிப்போய் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர்.

# உடன்பிறப்புகளை உண்மையான மனசுடன் நேசியுங்கள்

Monday, May 26, 2014

பல்வேறு நாடுகளின் பழமொழிகள்...

* வெளியே வருவதற்கு வழியைத் தெரிந்துகொண்டு உள்ளே செல். -அரேபியா

* ஆயிரம் உபதேசங்களைவிட ஓர் அனுபவம் பாடம் கற்பிக்கும். -துருக்கி


* உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான். -அமெரிக்கா

* எது நன்மை என்பது அதை இழந்தால்தான் தெரியும். -ஸ்பெயின்

* சிரிக்கும் நேரத்தில் எல்லாம் ஓர் ஆணி உங்கள் சவப்பெட்டியில் இருந்து நீக்கப்படுகிறது. -இத்தாலி

* ஒரு திறமைசாலியின் பின்னணியில் பல திறமைசாலிகளின் உழைப்பு உள்ளது. -சீனா

* ஆத்திரத்தில் கத்துபவர்களுக்குச் சரியான பதிலடி நாம் மௌனமாக இருப்பதே. -ஜெர்மனி

* தூக்கி எறிகிற குதிரையைவிடச் சுமக்கிற கழுதை மேல். -ருமேனியா

* அதிர்ஷ்டம் செய்தவர்க்குத்தான் பிறக்கும் முதல் குழந்தை பெண்ணாக இருக்கும். -போர்ச்சுக்கல்

* அன்புக்கு உற்பத்தி ஸ்தானம் அன்னை. -ஆப்பிரிக்கா

Friday, May 23, 2014

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாகரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை.
நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு 'முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!





கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.

இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு நாய் கூறியது,
"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.

கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.

அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.

குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.

வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்...

இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு?


முதல் ஐந்து முட்டாள்கள் யார்?

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.


அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”


முயற்சிக்க மறந்தாலும் பகிர மறக்காதே ..!

ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த வழியே போன ஒருவன் யானைகளை பார்த்தபடியேச் சென்றான். ஒரே ஒரு கயிறு மட்டும் தான் யானைகளின் காலில்கட்டி இருக்கிறது,

இவ்வளவு பெரிய உருவம் கொண்டயானை அதை அறுத்து கொண்டு போகாதா என்று வியந்தான்.

அருகில் இருந்த பாகனிடம் இந்த
யானைகள் கயிற்றை அறுத்து கொண்டு போகாதா என்று கேட்டான்.

இந்த யானைகள் சிறியதாக இருக்கும் போது இந்த கயிற்றால் தான் கட்டினோம்.

அப்போது அது இழுக்கும் போது இந்த கயிறுகள் அறுகவில்லை.

யானைகள்
பெரிதாக பெரிதாக தன்னால் கயிற்றை அறுக்க முடியாது என்று எண்ணி கயிற்றை அறுக்க முயற்சி செய்வதில்லை என்று பாகன் சொன்னான்.

அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான், இந்த யானைகள் ஒரு நிமிடத்தில் இந்த கயிற்றை அறுத்து கொண்டு போகலாம் ஆனால் அவைகள் அதற்கான முயற்சி செய்வதில்லை அதனாலேயே அவைகள்
கட்டுண்டு கிடக்கின்றன.

இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் ஒரு முறை தோற்றதும் மீண்டும் முயற்சிக்காமல் துவண்டு போகின்றோம்.

தோல்வி என்பது நாம் வெற்றியடையப் போவதின் முதற்படியே தொடர்முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்...!

முயற்சிக்க மறந்தாலும் பகிர மறக்காதே ..!


நேரில் பார்த்ததில்லை

ரயில்வே வேலை ஒன்றிற்காக இண்டர்வியூக்கு சென்றிருந்தார் ஒருவர். அப்போது அங்கே கேட்கப் பட்ட கேள்விகளும், அதற்கு அவர் தந்த பதில்களும்!

தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதைக் காண்கிறீர்கள். எதிரே ஒரு ரயில் வந்து கொண்டிருக்கிறது. அப்போது என்ன செய்வீர்கள்?

உடனடியாக சிவப்புக் கொடிய ஆட்டி ரயிலை நிறுத்த முயற்சி செய்வேன் சார்...

சிவப்புக் கொடி இல்லை, அப்போது என்ன செய்வீர்கள்?

இரவு நேரமானால், டார்ச் அடித்து சிக்னல் காட்டுவேன்.
கையில் டார்ச்சும் இல்லை, அப்போது என்ன செய்வீர்கள்?

என்னுடைய சிவப்புச் சட்டையைக் கழட்டி கொடியாகப் பயன் படுத்துவேன்.

அன்று நீங்கள் சிவப்பு கலர் சட்டை அணியவில்லை என்றால்...?

உடனடியாக என் சித்தப்பாவிற்கு போன் செய்வேன்!

(ஆபிசருக்கு இந்தப் பதிலைக் கேட்கவும் மிகவும் ஆச்சர்யம்....)

ஏன் உங்கள் சித்தப்பா அவ்வளவு பெரிய ஜாம்பவானா? ரயிலைக் கைகளாளேயே தடுத்து நிறுத்தி விடுவாரோ..?

அதெல்லாம் இல்லை சார். அவர் இதுவரை ரயில் விபத்தை நேரில் பார்த்ததில்லை. அதான்!


இருக்காங்களா....?

"கீதா இருக்காங்களா....?"

"இல்லீங்க....அவங்க நேத்து நைட்டுதான் செத்து போனாங்க ....."

"ஓ...மை காட்....!"

"ஆமா...நீங்க யாருங்க...?"

"கீதாவும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்...
ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்....போன வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ குடுத்தாங்க ...அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே..."

"என்னது ப்ரண்ட்ஸா.....இப்படியொரு அழகான பையன் ப்ரண்டா இருக்குறதா...பாட்டி சொல்லவே இல்லையே...."

"என்னது பாட்டியா ....?????..





or





பெண்: "ரவி இருக்காங்களா....?"
ஆண்: "இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான்
இறந்து போனாரு....."

பெண்: "ஓ...மை காட்....!"
ஆண்: "ஆமா...நீங்க யாருங்க...?"

பெண்: "ரவியும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்...

ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்.... போன
வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ
குடுத்தாரு... அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே..."

ஆண்: "என்னது ப்ரண்ட்ஸா..... இப்படியொரு அழகான
பொண்ணு ப்ரண்டா இருக்குறதா... தாத்தா சொல்லவே இல்லையே...."

பெண்: "என்னது தாத்தாவா.....?????







Tuesday, May 20, 2014

வெட்னரி டாக்டரிடம் பார்க்ககூடாது

ஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்...
பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி..
நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் பார்க்ககூடாது என்றார்...
அதிர்ச்சி அடைந்த கணவன் உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார்
எனக்கென்றும் இல்லை உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு.
காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.
அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க,சயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க.
அதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்.
என்ன சொல்வதென்று கணவன் முழிக்க "என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க"என்று முத்தாய்ப்புடன் முடித்தாள்..

மனதில் உறுதி வேண்டும்...

ஒரு அரசனுக்கு தீடிரெனஇரண்டு கண்க ளும் குருடாகிவிடுகிறது..

அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவி லையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்..


அதறக்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான முடியும்..

அந்த அரசனுக்கு மூன்று குமார ர்கள்..

அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான்..

தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது..

''நான் உன்பின்னால் வருவேன்..நான் இடது பக்கம் திரும்பு என்றால்இடது பக்கம் திரும்ப வேண்டும்.. வலது பக்கம் திரும்பவேண்டும். வலதுபக்கம் திரும்ப வேண்டும்... நீ நடப்பதை நிறுத்தக்கூடாது..நடந்து கொண்டே இருக்கவேண்டும்.. எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது.''.எனகிறது..

முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது..

தீடிரென பின்னால்வரும் தேவதை யின் சலங்கை ஒலி கேட்கவில்லை ..

என்னாயிற்று.. என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான்..
நிபந்தனையை மீறிவிட்டான்.. கற்சிலையாகிவிடுகிறான்.

அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்..

கிட்டத்ட்ட நிபந்னைகளுக்கு உட்ப்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான்.
.தீடிரென சிரிப்பு ஒலிகேட்கிறது.
ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான்..அவனும் கற்ச்சிலையாகி விடுகிறான்..

மூன்றாமவன் அடுத்து வருகிறான்.
.இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது..
இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான்.. பின்னால் அலறல் சத்தம்.. சிரிப்பொலி.. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான்
..வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்..

# கதையின் நீதி.
.பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு.
நிபந்தனையை விதித்துவிட்டு
செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும்.
.அதை புறக்கணிப்பதில் நம் வெற்றி அடங்கி உள்ளது..

Monday, May 19, 2014

திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார்.அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர்.கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .


நாட்கள் உருண்டோடின, அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தது.

அவள் கணவரும் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார்.மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.
அன்று இரவு அவர் மனைவி நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே என்று கேட்டார்.அதற்கு அவள் கணவர் ...

”என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள் ” என்றார்.

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள். பெண்மையை போற்றுவோம்

Saturday, May 17, 2014

எப்படி இருக்கு …..??????

ஒரு பெரிய தொழிற்சாலை .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பார்க்கும் தொழிற்சாலை .. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்கொண்டிருந்தது....!
ஒரு நாள் அந்த முதலாளி தொழிற்சாலைகுள் வலம் வந்தாராம் … அப்போது ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான் ..


அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவனை எழுப்பினார் .. “தம்பி நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் “ அப்படின்னான்.

உடனே அவரு பைக்குள இருந்து பண முடிப்பினை எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு … “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு .. நான் இங்க சும்மா படுத்து கிட்டு இருக்குரவனுக்கு சம்பளம் கொடுக்கறதுக்கு இந்த பாக்டரிய நடத்தல..” அப்படின்னு சொன்னாரு..

அவன் ஒரு நிமிஷம் அவர குறு குருன்னு பார்த்தான் .. அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான் … எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க ..

அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து … “இனிமே எல்லாம் அப்படி தான் ” (தமிழ் பட டயலாக்) அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளய கூப்பிட்டு “யார்யா அவன் ??” அப்படின்னு கேட்டாரு…

அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான் … ” டீ கொண்டு வந்த பையன் மொதலாளி .. “

இது எப்படி இருக்கு …..??????

Friday, May 16, 2014

ஓரு வயதானபெரியவர் .

.பார்வை மயங்கிய நிலையில் அழுக்கடைந்த


பாத்திரத்தை வைத்து சில்லறை காசுகளை குலுக்கியபடி அந்த பெரிய கடைத்த்தெருவில் கடை கடையாய்
பிச்சை எடுத்து வந்தார்..

இவர் நிலையை பார்த்து சில்லரை காசுகளை போட்டனர் பரிதாப ப் பட்டு பலர்..

ஒரு கடைகார ர் இவரையும் அழுக்கடைந்தபாத்திரத்தையும் மாறி மாறி பார்த்து..''முட்டாளே..''என்றார்..

''உங்களால் முடிந்தால் சில்லரை போடுங்கள்..இல்லையென்றால்அநாவசியமாக ஏன் கோப்படுகிறீர்க்ள..''பெரியவர்கேட்டார்..

அவ்வுளவுதான்..

அந்த பெரியவரின் பாத்திரத்தை பிடுங்கி தரையில் அடித்தார்..சில்லரை காசுகள் ரோடில் உருண்டோடியது..

மக்கள் கூடினர்..

''எனய்யா..அறிவிருக்கிறதா..முடிந்தால் போடு இல்லையென்றால் உன்வேலையைபார்த்துகொண்டிருக்க வேண்டியதுதானே..''சண்டை போட்டு சில்லரையை அவர் பாத்திரத்தில் சேர்த்தனர்..

கடைகார ர் சொன்னார்...''நீங்களும் உண்மை தெரியாமல் பேசுகிறீர்க்ள..
இவருடைய இந்த அழுக்கடைந்த பாத்திரம் தங்கத்தினால் ஆனாது..
அதை வைத்து பிச்சை எடுக்கிறார்
.இந்த பாத்திரத்தை விற்றாலே இந்த கடைதெருவில் பாதியை வாங்கிவிடலாம்..''
என்றார்
...........................................................................................
கதையின் நீதி..
நமது உணமையான பலம் தெரியாமல் நாம் இயங்கிகொண்டிருக்கிறோம்...
ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி வந்திருந்தார்..

கணவன் மனைவியிடம் காபிபோட்டு கொண்டுவருமாறு சொன்னான்..
''இங்கே காபிபொடியும் இல்லை..சர்க்கரையும் இல்லை..''அடுப்பங்கரையிலிருந்து சத்தமிட்டார்..


''எப்போதும் உனக்கு பஞ்சப்பாட்டுதான்..''கணவன் சத்தமிட வாய்பேச்சு முற்றி அறைந்துவிடுகிறான்..

''இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லையா..'' என்று அழ ஆரம்பித்தாள்..

இந்த அமளி துமளியை கண்டு சொல்லிக்கொள்ளாமல் வெளியேறினார்..அந்த விருந்தாளி..

அவர் வெளியேறிவிட்டதும் ''கொல்'' என சிரித்தனர் கணவனும் மனைவியும்..

''எப்படி இருந்தது என் நடிப்பு..அடிப்பது போல்அடித்தேனே...''என்றான் கணவன்..

''ஆஹா..அழுவது போல் அழுதேனே..எப்படி இருந்தது. என் நடிப்பு...''என்றாள் மனைவி..

''பிராமாதம்..'' என்றான் கணவன்..

பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது..

''நானும் போவதுபோல் போய்விட்டு திரும்பி விட்டேன்..'' அந்த விருந்தாளிதான்..

கதையின் நீதி...நடிப்பு என்றுமே உதவாது

Thursday, May 15, 2014

புதிதாக பதவிக்கு வந்த ஒரு அமைச்சருக்கு ஒரு பெரிய தொழில் அதிபர் விருந்து வைத்தார்.

தனது தொழிற்சாலையில் தயாரான உயர்ந்த கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முன் வந்தார்.

உடனே அமைச்சர்

,''இது ஊழலுக்கு வழி வகுக்கும்.
நான் என்னுடைய பதவி காலத்திலேயே எதையுமே இலவசமாக வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.'' என்றார்.

தொழில் அதிபர் உடனே ''சரி, அப்படி நீங்கள் உறுதியாக இருந்தால் இந்தக் காரை இலவசமாகப் பெற்றுக் கொள்ள வேண்டாம்

.இந்தக் காரின் விலை ஒரு ரூபாய்.

ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு இந்தக் காரை வாங்கிக் கொள்ளுங்கள்.'' என்றார்.

உடனே அமைச்சர்,''ரொம்ப சந்தோசம்,''என்று சொல்லிக் கொண்டே

பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து,

''அப்படியானால் எனக்கு பத்து கார் கொடுங்கள்.''என்றாரே பார்க்கலாம்!.


நம்மூர் ஆசாமியா இருப்பாரோ..

Wednesday, May 14, 2014

வாங்க நாய கண்டுபிடிப்போம் !!!!!!!

பெண் : "என் கணவனை காணவில்லை"!

இன்ஸ்பெக்டர்: "அவருடைய உயரம் என்ன"?

பெண்: "தெரியாது"

இன்ஸ்பெக்டர்: "ஒல்லியா? இல்ல குண்டா இருப்பாரா"?

பெண்: "ஒல்லியா இருக்கமாடாருன்னு நினைக்கிறேன்".

இன்ஸ்பெக்டர்: "அவரோட கண்ணு என்ன கலர்"?

பெண்: "சரியா பாக்கல"

இன்ஸ்பெக்டர்: "முடி நிறமாவது தெரியுமா"?

பெண்: "ம்ம்ம்... கருப்புன்னு நினைக்கிறேன்"

இன்ஸ்பெக்டர்: "சரி, கடைசியா அவர் என்ன கலர் டிரஸ் போட்டிருந்தாரு"?

பெண்: "அதை சரியா கவனிக்கல"

இன்ஸ்பெக்டர்: "தொலைஞ்சு போறப்ப அவர் கூட வேற யாராவது இருந்தாங்களா"??????????

பெண்: "ஆமா! என்னோட ரோமியோ, தங்க சங்கிலில கட்டிருக்கும், உயரம் 30 இன்ச், நல்ல கொழு கொழுன்னு இருக்கும், கண்ணு நீல நிறம், சாக்கலேட் கலர்ல முடி, அதோட வலது கால்ல நக விரல் ஒன்னு உடைஞ்சு போச்சு பாவம், அதுக்கு சிக்கன்ன ரொம்ப பிடிக்கும், என்ன விட்டுட்டு அது சாப்பிட்டதே இல்ல, எப்பவுமே என் கூடவே இருக்கும்".

சொல்லிட்டு அழ ஆரமிச்சாங்க.!..

இன்ஸ்பெக்டர்: "அழாதீங்க, வாங்க நாய கண்டுபிடிப்போம் !!!!!!!


Tuesday, May 13, 2014

ஆகாயத்தில் பரந்துகொண்டிடிருந்த அந்த விமானம் ஒரு கார்மேகத்துக்குள்ளே சென்றது விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக சரிய தொடங்கியது

பயணிகள் பீதியில் அலறினார்கள் ஒரு குழந்தை மட்டும் எதையுமே பொருட்படுத்தாமல் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது

ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்பு விமானம் பத்திரமாக தரை இறங்கியது அப்போது ஒருவர் அந்த குழந்தையிடம் கேட்டார்

இவ்வளவு ஆபத்தான நிலையிலும் உன்னால் மட்டும் எப்படியம்மா சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருக்க முடிந்தது ?

குழந்தை சொன்னது ..

எங்க அப்பா தான் இந்த விமானத்தின் பைலட் அவர் என்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்று எனக்கு தெரியும் ..


Monday, May 12, 2014

இது ஒரு சின்ன கதை தான்

.... சில நேரங்களில் நாம சிலர்கிட்ட பொறுப்பை கொடுத்துட்டு எப்படி ஏமாந்து போறோம்னு தெரிஞ்சுகுவீங்க.. ஓகே கதைக்கு போலாமா?

ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன.
தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போ தோட்டக்காரனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. தான் ஊருக்குப் போகும் காலத்தில் குரங்குகளை தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லலாமே என்று நினைத்தான்.

குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.
குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால்,
அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை.
வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க.
சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன். ''வேர் பெருசா இருக்கா,
சின்னதா இருக்கானு பார்க்கிறதற்காக,
செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.
--------------------------------------------------------------------
புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது,
புத்தியில்லாத செயல்.


Sunday, May 11, 2014

பத்தாயிரம் ரூபாய் பரிசு

இந்தியன் ஹோட்டல் ஒன்றில் ஓர்
அமெரிக்கர் நுழைந்தார்.
”நிறுத்தாமல் அடுத்தடுத்துப்
பத்து பொட்டலம்
பிரியாணி சாப்பிட்டு பவர்களுக்கு பத்தாயிரம்
ரூபாய் பரிசு.

போட்டியில் தோற்றால்
நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய்
தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?”
என்று அறிவித்தார்.
யாரும் அசையவில்லை.

நம்மாளு ஒருவர் மட்டும்
எழுந்து அவசரமாக வெளியே போனார்.

இருபது நிமிடம் கழித்துத்
திரும்பி வந்தார்.

”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.

அடுத்தடுத்து பத்து பொட்டலம்
பிரியாணியை அவர்
காலி செய்து முடித்ததைப் பார்த்து,
அமெரிக்கர் வியந்து போனார்.

சொன்னபடி பரிசுத் தொகையைக்
கொடுத்துவிட்டு,
”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?”
என்று கேட்டார்.



”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள
வேறொரு ஹோட்டலுக்குச் சென்று பத்து பொட்டலம் பிரியாணி சாப்பிட்டு பார்த்தேன்” என்றார்
அவர். மயங்கி விழுந்தார் அமெரிக்கர்.
யாருகிட்ட... நாங்கெல்லாம்
அப்பவே அப்பிடி

Saturday, May 10, 2014

ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் நடந்த ஒரு சிறிய சம்பவம். அனைவரும் கொஞ்சம் இத படிங்க!!

மகன் : அப்பா உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா?

தந்தை: கேளேன்...

மகன் : ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதிகிறீர்கள்?

தந்தை: 100 டாலர் ...

மகன் : அப்படீனா எனக்கு 50 டாலர் தாங்கப்பா!

தந்தைக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. ஆனாலும் மறுக்க முடியாமல் 50 டாலரை மகனிடம் கொடுத்தார்.

மகன் சிரித்த முகத்தோடும், சந்தோசமாகவும் அந்த பணத்தை வாங்கி கொண்டான். அப்படியே தனது தலையணைக்கு கீழே கை போட்டு அங்கிருந்த வேறு சில பணத்தை எடுத்தான்.

தந்தை: உன்கிட்ட நிறைய பணம் இருக்குத்தானே, பின் எதுக்காக என்னிடம் கேட்டாய்?

மகன் : முன்பு என்கிட்ட போதுமான பணமில்ல... அதான். ஆனா இப்ப என்கிட்ட 100 டாலர் இருக்கு. உங்க நேரத்துல ஒரு மணி நேரத்த நான் வாங்கி கொள்ளலாமா? நாளைக்கு நேரத்தோட வீட்டுக்கு வாங்க அப்பா. உங்க கூட சேர்ந்து உட்கார்ந்து ஒன்னா சாப்பிடனும்.

தந்தைக்கு மிகவும் கவலையும், கண்ணீரும் வந்தது. அப்படியே ஸ்தம்பித்து போனார். உடனே மகனை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க, தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் விசயம் என்னவென்றால் "தன்னை நேசிப்பவர்களுக்கு காட்டப்படும் அன்பை விட 100 டாலர் ஒன்றும் பெரிதல்ல".

குடும்பத்துக்காக உழைக்கும் நீங்கள் குடும்பங்களின் சந்தோசத்தையும் கவனியுங்கள். சில மணி நேரத்தை உங்கள் குடும்பத்தோடு செலவழியுங்கள். நாளை நாம் மரணித்தால் நாம் பணி புரிந்த நிறுவனம் நமக்கு பதிலாக வேறொருவரை பணிக்கு அமர்த்திக் கொள்ளும். ஆனால் நமது குடும்பம் துக்கத்தோடும், துயரத்தோடும் நம்மை எண்ணி எண்ணி வாழுமே! இதை யோசித்தீர்களா?

ரொம்ப யோசிக்க வேண்டாம்... நாளையெனும் .... நாளை ... பிறகு இல்லாமேலே போகலாம்.


Friday, May 9, 2014

அம்மாவுக்காக..

அவள் ஒரு கிராமத்து அம்மா...... நான் பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்......

என்னிடம் வந்தாள்....." ஆத்தா இத எப்படி பேசுவது? சொல்லித் தறியா? கையில் புதிய போன்..."

நான் சொன்னேன்:" அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்.....சிகப்பு புட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்....

அதற்கு அந்த அம்மா:_" இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது....." எவ்வளவு பெருமிதம்.......

அந்த அம்மா முகத்தில்......

என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்......மாசம் ஒரு தடவை பேசுவான்.........

இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே இல்லை.....

அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு பாரும்மா...?" என்றாள்...

நான் பார்த்தேன்.......அந்த பையன் call பண்ணவே இல்லை...... நான் சொன்னேன் ஒரு தடவை call பண்ணி இருக்காங்க....... நீங்க தான் பாக்கலை பச்சை என்று நெனைச்சு சிகப்ப அமுக்கிடிங்க போல் " அப்டி என்று பொய் சொன்னேன்...

அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்..........

சாப்டீங்களா அம்மா.......என்று கேட்டேன்....

எங்க என்னோட ராசா சாப்டானோ இல்லையோ? எனக்கு அவனை நெனைச்சா சாப்பாடே இறங்கல....

நான் சொன்னேன்........ நீங்க நல்லா சாப்டா தானே உங்க பையன் வரும்போது என்னோட ராசா என்று கட்டி பிடிக்க தெம்பு இருக்கும் என்றேன்......

அந்த தாய் அழுது விட்டாள்..... அப்டியா ஆத்தா சொல்ற இனிமேலே சாப்டறேன்.......

எனக்கு அழுகை வந்து விட்டது....

வெளி நாட்டில் இருக்கும் வெளி ஊரில் இருக்கும் சகோதர்களே உங்கள் தாயிடம் பேசுங்கள்....

அம்மா என்ற சொல்லுக்காக ஏங்குபவள்.........

அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்.........


Thursday, May 8, 2014


ஒருவர் வாரந்தோறும் கோயிலுக்குச் செல்லும்போது அங்கிருந்த ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

6 மாதம் கழிந்த பிறகு, அவர் அந்தப் பிச்சைக்காரனுக்கு 75 பைசாக்கள் மட்டும் போட்டார்.
ஒரு வருடம் கழித்தது. இப்போது அவர் அந்தப் பிச்சைக்காரனுக்கு 50 காசுகள் மட்டும் போட்டார். அடுத்த 2 வருடங்களில் இதுவும் குறைந்து அவர் பிச்சைக்காரனுக்கு 25 காசுகள் மட்டுமே போட்டார்.

இத்தனை நாள் பொறுத்த பிச்சைகாரன்(ர்), (அவருக்கும் வயசாகிடுச்சில்ல!) ஏன் இப்படி படிப்படியாக குறைந்த காசுகளைப் பிச்சை போடுகிறார் எனக் கேட்க, அந்த மனிதரும் ஸின்ஸியராக, 'மிஸ்டர் பெக்கர், முதலில் நான் பேச்சிலர், 1 ரூபாய் போட்டேன், பிறகு கல்யாணமாச்சு, பெண்டாட்டியையும் கவனிக்கணும், 75 காசு போட்டேன், பிறகு குழந்தை பிறந்தது, 50 காசு போட்டேன். இப்போ அந்தக் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கக் காசு சேமிக்க வேண்டியிருக்கு, அதனால் 25 காசு போடறேன்' என்றார்.



பிச்சைக்காரர் யோசித்தார். 'அப்போ என் வருமானத்தில் தான் நீ குடும்பம் நடத்தறேன்னு சொல்லு' என்றார்!!
தீபனும் திவ்யாவும் கணவன் மணைவி. இருவரும் தனிமையில் பேசி கொண்டிருக்கும் போது தீபன் கூறினான்.

நான் கல்யாணத்துக்கு முன்னடி ஒரு பெண்ணை காதலித்தேன் என்றான்.

உடனே திவ்யா, இதையேன் கல்யாணத்துக்கு முன்னடியே சொல்ல, இப்படி என்னை ஏமாத்திட்டிங்களே.! உங்க கூட இனி என்னால வாழ முடியாது என கூறி கோபத்தோடு தன் தாய் வீட்டுக்கு போய் விட்டாள் திவ்யா.

தீபன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் திவ்யா கேட்கவில்லை. பிடிவாதமாக இருந்தாள்.

மனைவி பிரிந்த துக்கத்தில் அதிகமாக குடித்து மரண படுக்கைக்குள் விழுந்தான் தீபன்.

அவன் மரண படுக்கையில் இருக்கும் நேரம் தன் மனைவி திவ்யாவுக்கு ஒரு கடிதம் எழுதி அதை தன் மனைவியிடம் கொடுத்து விடும்படி கூறினான் தீபன்.

தீபன் கொடுத்த கடிதத்தை திவ்யாவிடம் கொடுத்து விட்டு தீபனை வந்து பார்த்து விட்டு போகும்படி கூறினார்கள்.

ஆனால் திவ்யா, அதை காதில் வாங்காமல் கடிதத்தை தூக்கி பழைய பெட்டிக்குள் போட்டாள்.

நாட்கள் சென்றது.

திவ்யாவின் அண்ணனுக்கு திருமணம் ஆனது.

அண்ணி வந்த சில நாட்களிலையே திவ்யாவை சாடைமடையாக பேச சண்டையிட ஆரம்பித்தாள்.

அப்போது தான் திவ்யாவுக்கு புரிந்தது,
தாய் வீடு என்றைக்கும் ஒரு பெண்ணுக்கு நிரந்தரமில்லை என்று. தன் கணவனை நினைக்க ஆரம்பித்தாள். அப்போது அவன் எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது.

இரும்பு பெட்டியிலிருந்து எடுத்து கடிதத்தை படித்தாள் திவ்யா.

அன்புள்ள மனைவிக்கு,
நான் தற்போது மரண படுக்கையில் இருக்கிறேன்
மரணிக்கிற நேரத்தில் யாரும் பொய் கூற மாட்டார்கள். நான் கூறுவது உண்மை. நான் திருமனத்திற்கு முன்பே உன்னை காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அதை தான் நான் திருமனத்திற்கு முன்பே ஒரு பெண்ணை காதலித்தேன் அது நீ தான் என்பதற்குள் நீ சண்டையிட்டு சென்று விட்டாய். நீ இக்கடிதத்தை படிக்கும் நேரம் நான் மரணித்து இருப்பேன்.
என்று தீபன் எழுதிய கடிதத்தை படித்து முடித்து,
அவசரபட்டுட்டேனே என அழ ஆரம்பித்தாள் திவ்யா.



"சரியாக கூறபடாத தகவல்களும் அவசரபட்டு எடுக்கும் முடிவுகளும் அவஸ்தைகளை தேடி தரும்"

Wednesday, May 7, 2014

வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது

ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கும் பொழுது கொள்ளைக்காரன் " யாரும் நகராதீர்கள், பணம் நாட்டின் உடையது, உங்கள் உயிர் உங்களுடையது " என்றான்.. எனவே அனைவரும் அமைதியாக இருந்தனர், இது தான் "மனம் மாற்றும் கருத்து "

. ஒரு பெண் மேசையில் படுத்திருந்தாள், ஒரு கொள்ளைக்காரன் "நங்கள் கற்பழிக்க வரவில்லை கொள்ளையடிக்க வந்திருக்கிறோம், ஒழுங்காய் கீழே உக்காரு " என்றான். இது தான் "தொழில் முறை யுக்தி", 

கவனம் சிதறாமல் இருப்பதற்கு. கொள்ளையடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒருத்தன் கேட்டான் "எவ்வளவு பணம் இருக்குது னு எண்ணுவோம்". இன்னொருவன் " அட முட்டாளே, டிவி'ல நியூஸ் போடுவாங்க அதுல பாத்துக்கலாம்" என்றான். இது தான் "அனுபவம்" என்பது, திறமைகளை விட பெரியது. 

அவர்கள் கொள்ளை அடித்து சென்ற பிறகு வங்கி மேலாளர், ஊழியரிடம் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள் என்றார், ஆனால் அவன் "நாம ஒரு 10 கோடி எடுத்துட்டு, மொத்தம் 50 கோடின்னு கணக்கு சொல்லிடலாம்" என்றான். இது தான் "அலைகளை நோக்கி நீந்து" என்பது. அதை கேட்டு மேலாளர் சொன்னார், "மாதா மாதம் கொள்ளை நடந்தால் நல்லா இருக்கும்" இது தான் "அலுப்பின் வெறுப்பு", 
வேலையை விட சொந்த சந்தோசம் தான் முக்கியம் இவர்களுக்கு. மறுநாள் டிவி'யில் 100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது. 

அந்த கொள்ளைக்காரன் ஆக்ரோஷத்துடன் "நாங்கள் உயிரை பணயம் வைத்து 30 கோடி தான் கொள்ளை அடித்தோம், ஆனால் அவர்கள் 70 கோடி கொள்ளை அடித்துவிட்டனர், கொள்ளை அடித்தவனை விட படித்தவனே மிக கேவலமாக நடந்து கொள்கிறான்" இதுவே "அறிவு தங்கத்துக்கு நிகரானது" என்று சொல்லப்படுகிறது. 

அந்த வங்கி மேலாளர் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார், கொள்ளை சம்பவத்தால் தான் இழந்த பங்கு சந்தையை மீட்டார். இது தான் "வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது". இப்பொழுது சொல்லுங்கள், இதில் யாரு உண்மையான கொள்ளைக்காரன் ??

Tuesday, May 6, 2014

ஒரு வியாபாரி,ஒரு ஆசிரியர்,ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறி மிகுந்த அலைச்சலுக்குப் பின் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர்.

விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க,விவசாயி சொன்னார்,''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும்.மூன்றாவது நபர் ஆடு,பசு,பன்றி இவை தாங்கும் கொட்டகையில் தான் தூங்க வேண்டும்,

''ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக் கொள்கிறேன்.''என்றார்.மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர்.

கொஞ்ச நேரம் ஆனவுடன் கதவு தட்டப்பட்டது.கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.''என்னால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.

''உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார்.

இறுதியாக அரசியல்வாதி ,தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார்.

ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது.ஆசிரியரும்,வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர்.

இப்போது ஆடு,பசு,பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன.


this is மனிதன்

செங்குத்தான மலைச்சரிவில் தவறி விழுந்தவன் ஒரு மரத்தின் வேரைப் பிடித்துக்கொண்டு தொங்கினான்.

“பிள்ளையாரப்பா என்னைக் காப்பாத்தக்கூடாதா,” என்று ஓலமிட்டான்.
உடனே  கடவுளின் குரல் கேட்டது. “பக்தா என்மீது உனக்கு உண்மையிலேயே விசுவாசம் இருக்கிறதா?”

“என்ன கணேசா இப்படிக் கேட்கிற? விசுவாசம் இல்லாமலா என் குடும்பத்தோட வருசா வருசம் உன் கோவிலுக்கு வந்து பூசை செய்றேன்? விசுவாசம் இல்லாமலா என் கம்பெனிக்கு உன் பெயரை வைச்சிருக்கேன்...”

“சரி உண்மையிலேயே என் மேல் நம்பிக்கை இருந்தால் நீ பிடித்துக்கொண்டிருக்கிற அந்த வேரை விட்டுவிடு.

சில நொடிகள் மவுனம். கடவுளுக்கே அவன் என்ன செய்யப்போகிறான் என்று புதிராகிவிட்டது.
.
.
.
.
.
அவன் இப்போது மறுபடியும் உ ரக்க ஓலமிட்டான்: “ முருகா என்னை காப்பாத்தக்கூடாதா...”

this is மனிதன்......


Monday, May 5, 2014

ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார்.

தலைப்பு "கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்" என்பது.

ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார், அதை கண்ட அவர் கணவர்,

"என்ன ஆச்சு? ஏன் அழுகிறாய்? என்றார்.

என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள் என்று கொடுத்தார். அதில்,

"கடவுளே, என்னை என் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியப் போல் ஆக்கிவிடு. நான் அதன் இடத்தை பிடிக்க வேண்டும். அதைப் போல‌ வாழ வேண்டும். எனக்கான இடம், என்னை சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சை கவனமாக கேட்க வேண்டும்.

அவர்களின் கவனம் என்னை சுற்றியே இருக்க வேண்டும். தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்பு கவனத்தை போல் நானும் பெற வேண்டும். அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.

அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும். என்னை வில‌க்கக் கூடாது. என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும். சண்டையிடவேண்டும்.

என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும். கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும் என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை. நான் தொலைக்காட்சி பெட்டியைப் போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்."

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார்,

"அந்த குழந்தை பாவம் என்ன? இந்தக் குழந்தையை கவனிக்காமல் இருக்கும் பெற்றோர் என்ன ஜென்மமோ?"

ஆசிரியை தன் கணவரிடம் கூறினார்,

"இந்த கட்டுரையை எழுதியது நம் மகன்"

Sunday, May 4, 2014

நிகழ்வு 1 :

ஒரு மேடையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்... அவர் பேசி முடிச்சதும் வழக்கம் போல எல்லோரும் கை தட்டினாங்க. ஆனா அதில் அவருக்கு திருப்தி இல்ல. இறங்கி வந்ததும் தன்னோட நண்பர் கிட்ட, என் பேச்சு எப்படி இருந்தது என்று கேட்டார்... அதற்கு அவரும், ரொம்ப அற்புதமான பேச்சுங்க உங்களோடது, நிறைய கருத்துகளை நான் குறிப்பெடுத்து வச்சிருக்கேன்.. அப்படின்னு சொன்னார். அப்பாடான்னு நிம்மதியானார் அக்கல்லூரி பேராசிரியர்..

நிகழ்வு 2:

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை விளையாடிகிட்டு இருந்துச்சு... குழந்தையோட அம்மா, பள்ளிக் கூடம் சேர்த்து மூணு மாசம் ஆயிடுச்சே என்ன சொல்லிக் கொடுத்திருப்பாங்கன்னு ஆசைப்பட்டு தன குழந்தையைக் கூப்பிட்டு தங்கம் ஒன்னு, ரெண்டு தெரியுமான்னு கேட்டாங்க, குழந்தை தெரியும்ன்னு சொல்லுச்சு... சொல்லுன்னு சொன்னதும், குழந்தை ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு... அத்தோட நிறுத்திகிச்சு. அம்மா மறுபடியும் சொல்ல சொன்னாங்க... அப்பாவும் அதே மாதிரி நாலு வரைக்கும் சொல்லி நிறுத்திகிச்சு. அம்மாக்கு கோபம், என்னடா குழந்தைக்கு ஒன்னு ரெண்டு கூட சொல்லத் தெரியலைன்னு நினைச்சு கிட்டு, அடுத்த நாள் பள்ளிக் கூடத்துக்குப் போனாங்க.. அங்க ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். அவர் கிட்ட என்னங்க என் குழந்தை ஒன்னு, ரெண்டு கூட சொல்ல மாட்டேங்குது.. நீங்க சொல்லிக் கொடுக்களையான்னு கேட்டாங்க.. அதுக்கு அவர் சொன்னார் இல்லையே உங்க குழந்தை அழகா சொல்லுமே.. அப்படின்னு சொல்லிட்டு குழந்தைய கூப்பிட்டார்...

குழந்தை கிட்ட சொல்ல சொன்னார்... குழந்தை ஒன்னு சொல்லுச்சு, அப்போ ஆசிரியர் ம்ம்.. அப்படினார். குழந்தை ரெண்டு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம் அப்படின்னார். குழந்தை மூணு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம்.. அப்படின்னார்.. குழந்தை அப்படியே நூறு வரை சொல்லிடுச்சு... அப்போ அவங்க அம்மா சொன்னாங்க நான் நேத்து கேட்ட போது சொல்லலையே இப்போ மட்டும் எப்படி சொல்லுச்சு அப்படின்னு... அதுக்கு ஆசிரியர் சொன்னார், குழந்தை புதுசா கத்து கிட்டு வந்த விஷயத்தை நீங்க அங்கீகரிக்கனும்... ஒன்னு அப்படின்னு சொல்லி முடிச்சதும் நீங்க ம்ம்.. அப்படின்னு ஒரு சின்ன அங்கீகாரத்தை கொடுத்திருக்கணும்... இயந்திரம் தான் தொடர்ச்சியா சொல்லிகிட்டே இருக்கும். மனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே. அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவும் முக்கியம், அப்படின்னு அம்மா செய்த தவறை சுட்டிக் காட்டினார்.

ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கே தன் பேச்சுக்கான அங்கீகாரம் தேவைப் படுகிற போது, குழந்தைகளுக்கு, அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கு நாம் அங்கீகாரம் அளிக்கிறோமா என்பது மிக முக்கியமானது... எனவே கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான், ஏனெனில், நாமும் அதே அங்கீகாரத்திற்கு தான் காத்திருக்கிறோம்...

# உலக புத்தக தின விழாவில் கேட்டது...

- இளையராஜா டென்டிஸ்ட்

Friday, May 2, 2014

தைரியமும் தன்னம்பிக்கையும்

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.

அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.

அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.

வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்...!