Thursday, June 19, 2014

சுமை...

ஒரு காட்டின் வழியே இரண்டு துறவிகள் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியில் ஆறு ஒன்று குறுக்கே இருந்தது. அவர்கள் அந்த ஆற்றைக் கடந்து கரைக்குச் செல்ல நீரில் இறங்கினர்.

அந்த நேரம் ஒரு இளம் பெண் ஆற்றை கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் துறவியிடம் "என்னை மறுகரைக்கு கொண்டு சேர்க்க முடியுமா?" என்று கேட்டாள். ஆனால் அவர்களில் ஒரு துறவி மிகவும் தயங்கினார். மற்றவர் தயங்காமல், அந்த பெண்ணை தன் தோள் மீது தூக்கிச் சென்று, மறுகரையில் இறக்கினார். மறுகரை சேர்ந்ததும் அந்த பெண்துறவிக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அவர்களும் தங்கள் பயணத்தை தொடங்கினர். சற்று நேரம் கழித்து, உதவி செய்ய தயங்கிய துறவி மற்றொருவரிடம் "நம் புத்த மதக் கொள்கையின் படி, துறவியான பின் எந்த பெண்ணையும் தொடக்கூடாது தானே? ஆனால் நீங்கள் ஏன் அந்த பெண்ணை தொட்டு தூக்கி மறுகரையில் இறக்கினீர்? அது தவறல்லவா?" என்று கேட்டார்.

அதற்கு உதவி செய்த துறவி சொன்னார், "நான் அந்த பெண்ணை தூக்கி கரையிலேயே இறக்கிவிட்டேன். நீங்கள் தான் இன்னும் அதனை சுமக்கிறீர்கள்" என்று புன்னகையுடன் சொன்னார்.


Wednesday, June 18, 2014

இப்போ சொல்லு

ஒரு சிறுவனை சில திருடர்கள் கடத்தினார்கள்.

"உன் வீட்டில் உள்ள தங்கம் வைரம் எல்லாம் எங்கே வைத்திருக்கிறார்கள்" என்று கேட்டு மிரட்டினார்கள்...

"ஒரு ஐஸ் கிரீம் 6 பைவ் ஸ்டார் சாக்லேட் வாங்கி கொடுத்தா சொல்றேன்" என்று சிறுவன் சொன்னான்.

"தொலைஞ்சு போ" என்று அவன் கேட்டதை வாங்கி கொடுத்துவிட்டு

"இப்போ சொல்லு"

"எல்லாமே அடகு கடையில் இருக்கு" .


Tuesday, June 17, 2014

உள்ளத்தை மட்டும் பாருங்கள்.

ஒரு முறை நான் அமெரிக்கா செல்லும்பொது ஜன்னல் சீட் அருகில் அமர்ந்திருந்தேன் அப்போது ஒரு பெரிய உருவம் என் அருகில் வந்து அமர்ந்தது.என்னுடைய சீட்டின் முக்கால்வாசி இடத்தை அடைத்து கொண்டு உட்கார்ந்திருந்தார்.நான் வேறு வழி இல்லாமல் ஜன்னல் ஓரம் ஒண்டிக்கொண்டேன்.

அந்த பெண்மனி என்னை பார்த்து ஹாய் என்றார், நானும் வேண்டாவெறுப்பாக ஹாய் என்றேன்.இந்த அம்மாவோட எப்படி தான் உட்கார்ந்து போவதோ என்று எண்ணியபடி ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

ஒரு பெரிய கை என் முகத்துக்கு நேராக நீட்டியது என் பெயர் லாரா என்றாள் நான் அமேரிக்கா நீங்களும் அமேரிக்காவா என்றாள்.இல்லை மலேசியா என்றேன் சலிப்போடு.ஓ சாரி நீங்க அமெரிக்கான்னு நினைச்சேன் ,இன்னும் 6 மணி நேரம் ஒன்றாக பிரயானம் பண்ணப்போகிறோம் கை கொடுங்க ஜாலியா பேசிட்டே போகலாம் என்றாள்.நானும் வேறி வழி இல்லாமல் கையை நீட்டினேன்.

அந்த அம்மா அவர்களை பத்தி பேச ஆரம்பித்தார்கள் தான் ஒரு டீச்சர் என்றும் தன் மாணவர்களுக்கு நிறைய பொருட்கள் வாங்கி கொண்டு போவதாகவும் தன் குடும்பத்தார் தனக்காக ஏர்போர்டில் காத்து கொண்டு இருப்பார்கள் என்றும் சொல்லிகொண்டே வந்தாள் .நான் எல்லாவற்றிற்கும் ஒரு வரியில் பதில் சொல்லி கொண்டு வந்தேன்.

அவர் பேசும்போது நன்கு படித்தவர் என்பதும் சைக்காலஜி நன்கு தெரிந்தவர் என்பதும் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்படுத்தியது.பணிப்பெண் எங்களுக்கு உணவு கொண்டு வந்தார்.இருவரும் எடுத்து கொண்டோம்.பணிப்பெண்னிடம் உங்கள் இந்த சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்க்ள் என்றார்.பணிப்பெண் சிரித்துக்கொண்டே போனார்.யானை மாதிரி இடத்தை அடைத்து கொண்டு உட்கார்ந்து இருக்கேன் நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொள்கிறேன் நீங்கள் ப்ரீயா சாப்பிடுங்கள் என்றார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி அந்த பெண் மேல் எரிச்சலடைந்த
நான் இப்போது அவர் பேசபேச சிரித்து ரசித்து கேட்டு கொண்டு வருகிறேன்.

அந்த அம்மா பேசுவதை எல்லாரும் ரசித்து கேட்டு கொண்டு வந்தனர்.ஆரம்பத்தில் அவர் உருவத்தை பார்த்து கேலி செய்தவர்கள் இப்போது அவருடன் ஆவலாக பேசிக்கொண்டும் சிரித்து கொண்டும் வந்தார்கள்.அந்த விமானத்திலேயே அவர் தான் Centre of attraction .

நீங்கள் உங்கள் உடம்பை குறைக்க எதாவது முயற்சி எடுத்தீர்களா என்று கேட்டேன்.இல்லையே நான் ஏன் என் உடம்பை குறைக்கனும்.குண்டாக இருந்தால் இதய நோய் வரும் அதுனாலத்தான் சொன்னேன் என்றேன்.கண்டிப்பாக கிடையாது ,முழு நேரமும் எடையை பற்றி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்ற உங்களை மாதிரி ஆட்களுக்கு தான் இதய நோய் வரும்.

விளம்பரங்களில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்’ உங்கள் உடல் குண்டாக இருக்கிறது என்று தாழ்வு மனப்பான்மையா எங்களிடம் வாருங்கள் ‘என்று விளம்பரப்படுத்துவார்கள்.நான் பிறக்கும்போதே குண்டாக பிறந்தேன் ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறேன் நன்றாக நடக்கிறேன்.எனக்கு எந்த கவலையும் கிடையாது.எனக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும்போது உடல் இடையை குறைக்க நான் ஏன் என் நேரத்தை வீணடிக்க வேண்டும்.

மற்றவர்கள் தான் என்னை பார்க்கும்போது குண்டு என்றும் சோம்பேறியாக இருப்பாள் என்றும் நினைக்கிறார்கள்.நான் உடல் அளவில் தான் பெரியவள் ஆனால் மனதளவில் நான் குழந்தை.உங்களைவிட எனக்கு மனதளவில் தைரியம் ஜாஸ்தி.

உங்கள் பின்னாடி ஆண்கள் துரத்தி இருக்கிறார்களா என்று விளையாட்டாக கேட்டேன்.ஆமாம் துரத்தி இருக்கிறார்கள் என்றார்.நிறைய ஆண்கள் உருவத்தை பார்ப்பதில்லை மனதை மட்டுமே பார்ப்பவர்கள்.எனக்கு திருமணம் ஆகிவிட்டது இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர் என்றார்.நான் டீச்சராக இல்லாமல் இருந்தால் பெரிய ஆலோசகராக மாறி இருப்பேன்.நிறைய ஆண்கள் என்னிடம் வந்து ஆலோசனை கேட்பார்கள்.

கடவுள் எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார் அதை என் பெரிய உருவத்தில் வைத்து மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.என் எடையை குறைத்து என் சந்தோஷத்தை நான் இழக்க விரும்பவில்லை.நிறைய பெண்கள் திருமணத்திற்கு பிறகு குண்டாகி விடுகிறார்கள் அதற்காக அவர்கள் கணவர்கள் அவர்களை வெறுப்பதில்லை.

லாரா பேச்சை கேட்டு விமானத்தில் இருந்த அனைவரும் கை தட்டினர்.விமானம் தரை இறங்கியதும் லாராவை அழைத்து செல்ல பெரிய உருவம் கொண்ட அவர் உறவினர்கள் வந்திருந்தனர்.பயணம் செய்த அனைவரும் லாராவுக்கு டாட்டா காட்டி வழி அனுப்பி வைத்தனர்.லாரா போகும்போது என்னை பார்த்து கண்ணடித்துவிட்டு சென்றாள்.

நான் பார்த்த பெண்களிலே இவளை போன்று ஒரு அழகியை பர்த்தது இல்லை என்று என் மனம் சொல்லியது.



நண்பர்களே மனிதர்களின் உடலை பார்க்காதீர்கள் உள்ளத்தை மட்டும் பாருங்கள். உடல் பருமன் ஒரு குறை அல்ல.

Monday, June 16, 2014

இரண்டு ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தினர்.

காய்கறிச்சந்தைக்குச் சென்றார்கள்.

அங்கு குடை மிளகாய் பார்த்தனர். இது என்ன பழம்?,

ஆப்பிள் பழம் போல் இருக்கின்றதே என்று வியாபாரியிடம் கேட்டனர்!.

அவர் பேசும் தமிழ் இவர்களுக்கு புரியவில்லை.

இவர்கள் பேசும் ஆங்கிலம் அவருக்கு விளங்கவில்லை.
சரி இரண்டு பழங்கள் வாங்கி சாப்பிடலாம் என்றெண்ணி வாங்கினார்கள்.

முதலில் ஒருவன் சாப்பிட்டான். மிளகாய் காரமாக இருந்ததால் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

கண்ணீரைப் பார்த்த நண்பன் கேட்டான், 'ஏன் அழுகிறாய்'.?

'இல்லை 10 வருடத்திற்கு முன் என் மாமாவை தூக்கில் போட்டார்கள். அவரை நினைத்ததால் அழுகை வந்தது' என்றான்.

பிறகு 'இந்தா நீயும்சாப்பிடு' என்று இன்னொரு மிளகாயை நண்பனிடம் கொடுத்தான்.

நண்பனும் ஆர்வத்துடன் சாப்பிட்டான். காரத்தால் அவனுக்கும் கண்ணீர்வந்தது.

அடப்பாவி, உண்மையை மறைத்து விட்டானே என்று கோபம் கோபமாய் வந்தது.

அவன் கண்களில் கண்ணீரைக்கண்டதும், முன்னவன் கேட்டான், 'நீ ஏன் அழுகின்றாய்?'



இவன் பதில் சொன்னான். 'இல்லை 10 வருடத்திற்கு முன் உன் மாமாவை தூக்கில் போட்ட போது ஏன் உன்னையும் சேர்த்து போடவில்லை என்று நினைத்தேன்' என்றான்

Sunday, June 15, 2014

குதிரைகள் பல நிறத்தில் இருக்கும்.

ஒரு வெள்ளைகாரன் நம்ம நாட்டுகாரனை பார்த்து கேட்டான். ஐரோப்ப ­ாவில இருந்து வருகின்ற நாங்க சிவப்பா இருக்கோம் ஆப்பிரிக்காகாரன ­் கருப்பா இருக்கான் . சீனாகாரன் மஞ்சள் நிறத்தில் இருக்கான்.

ஆனா இந்தியாவில இருக்கறவங்க ஒருத்தன் சிவப்பா இருக்கான் ஒருத்தன்கருப்பா இருக்கான் இன்னொருவன் மாநிறமா இருக்கான் உங்களுக்குள் நிறத்தில் ஒற்றுமை இல்லையே என்றான்.

உடனே நம்மாளு சொன்னான் கழுதைங்க தான் ஓரே நிறத்தில் இருக்கும் குதிரைகள் பல நிறத்தில் இருக்கும்.


# கி.ராஜநாரயணனின் ­ நாட்டுபுற கதைகள்.

Saturday, June 14, 2014

கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி தாங்க

ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம்வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் .அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ளவச்சு அவன் வந்த பைக் பஞ்சர்ஆய்ருச்சு.உடனே பக்கத்துலபார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய்எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்.

அங்க இருந்த துறவி சொன்னாரு .தம்பி நேரம்வேறு போயிருச்சு இந்தஇருட்டுக்குள்ள நீங்கஊருக்கு வண்டியசரி பண்ணி போகனுமா ?பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு .உடனே இவனும்சரின்னு ஒத்துக்கிட்டான்.அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரியசத்தம் .ஆனா ஒருத்தரும்எழும்பி என்னனு பார்க்கல .உடனே இவனும்அப்படியே படுத்து தூங்கிட்டான்.

மறுநாள் காலைல வண்டியசரிபண்ணிட்டு போகும் போது.அந்தசத்ததுக்கானகாரணத்தை தலைமை துறவிகிட்டகேட்டான் உடனே அவரு அத உன்கிட்டசொல்லகூடாது.நீ போகலாம்அப்படின்னு சொல்லிட்டார் .இவனும்வந்துட்டான் அப்புறம் ஒரு வருடம்கழிச்சு அதே வழிய வரும்போது அதே மாதிரி வண்டி பஞ்சர்ஆகி அதே மடத்துல தங்கவேண்டி வந்தது .அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது .

இவனும் மறு நாள்காரணம் கேட்டான் .ஆனா தலைமை துறவி அப்பவும்சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார்மறுபடியும்மூன்றாவது தடவையும்இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம்கேட்டான் .அவர் அப்பவும்மறுத்தார் .உடனே இவனுக்கு கோபம்வந்துருச்சு .ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க .ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான்.அதுக்கு அவரு நீயும் என்னமாதிரி துறவி ஆனா சொல்றேன்அப்படின்னார் .

உடனே இவனும் வீட்டுக்கு போய்எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாகவந்துட்டான் .வந்ததும் அவரு இவனதவம் பண்ண சொன்னார் .இவனும்பண்ணினான் ஆறு மாதம் கடுமையா தவம் இருந்தபிறகு அந்ததலைமை துறவி இந்தாப்பா இந்தசாவிய வச்சு அந்த கதவ தொற அங்கதான் நீ கேட்ட கேள்விக்கு பதில்இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .

உடனே இவனும் தொறந்தான்.அங்கஇன்னொரு கதவு, பக்கத்திலஒரு சீட்டு அதில ஒரு கேள்வி .அதுக்கு பதில் கண்டு புடிச்சபிறகு அடுத்தசாவி தருவேன்னு துறவி சொன்னார்.இவனும் கண்டு பிடிச்சான்அடுத்தசாவியும் தந்தார் .இவன்தொறந்தான் . அப்புறம்இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .

ஒரு வழியா அதுக்கும் பதில்கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவதொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கானகாரணத்தை கண்டு புடிச்சான் . . .அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா நீங்கதுறவியாகனும்.



( பாவி பயலுக எனக்கும்இப்படிதாங்க அனுப்புனாங்க )

Friday, June 13, 2014

உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. . என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவன் கேட்டான் - அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.

எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?-

லேசான நகைப்போடு இவன் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -
அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்.

Thursday, June 12, 2014

மூன்று குடிகாரர்கள்

மூன்று குடிகாரர்கள் ஒரு வாடகை டாக்ஸியில் ஏறினார்கள்.

இவர்கள் நல்லா குடிச்சி இருக்கறத தெரிஞ்சிகிட்ட டாக்ஸி டிரைவர் என்ஜின் ஸ்டார்ட் செஞ்ச்சு ஆப் செஞ்சிட்டு நாம வர வேண்டிய இடம் வந்தாச்சுனு சொன்னாரு.

முதல் ஆள்: பணம் கொடுத்தான்.

இரண்டாம் ஆள்: Thank You சொன்னான்.

மூன்றாம் ஆள் பளார் ஒரு அறை கொடுத்தான்.
டிரைவர்க்கு பயம்!

ஒரு வேளை இவனுக்கு புரிஞ்சிருக்குமோ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
மூன்றாம் ஆள் : இனிமே இவ்வளவு வேகமா ஒட்டாதே..... நீ வந்து சேர்ரவரை எங்க உயிர் எங்க கிட்ட இல்ல....


பொறுப்பு


ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போ தோட்டக்காரனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. தான் ஊருக்குப் போகும் காலத்தில் குரங்குகளை தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லலாமே என்று நினைத்தான்.

குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

நீதி: புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்

Wednesday, June 11, 2014

கணவனும் மனைவியும்

ஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள் .
ஒரு அழகிய பெண்ணும் லிப்ஃடில் வந்தாள்.
கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க,
திடீரென அழகி அவனை அறைந்தாள்.
கணவன் அதிர்ச்சியடைந்து "ஏன் இப்ப அறைஞ்சே..?"என்று கேட்க
"எதுக்கு என் இடுப்பை கிள்ளினே..?"என்றாள்.
கணவனுக்கோ ஒன்றும் புரியல . மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்று அவமானம் .
அதோட பயங்கர குழப்பம் வேற . லிப்ஃட் நின்னு எல்லோரும் வெளியேற,
மனைவி குசுகுசுன்னு சொன்னாள்,
"அதையே யோசிச்சுட்டு இருக்காதீங்க. உங்க ஜொள்ளைப் பார்த்து எரிச்சல்ல நான் தான் அவளைக் கிள்ளினேன்..!


Tuesday, June 10, 2014

மதுரை பக்கம் சார்

Bill Gates அவரது Microsoft நிறுவனத்திற்கு ஒரு புதிய Chairman பதவிக்கு ஆள் எடுக்க 5000 நபர்களை Interview எடுக்க வரவழைத்தார்..

அனைவரும் ஒரு பெரிய அறையில் ஒன்று கூடினர்...
இதில் நமது ஊரைச்சேர்ந்த ராமசாமியும் அடக்கம்...
Bill Gates : “ Thank you for coming....
Those who do not know JAVA may leave for the day.... “

JAVA தெரியாதவங்கள போக சொன்னதும் 2000 பேர் அந்த இடத்தை காலி செய்துகொண்டு சென்றுவிட்டனர்...
ராமசாமி மனசுகுள்ளயே நினைச்சிக்குறார்,

’ நமக்கு JAVAனா என்னன்னே தெரியாதே.. சரி சும்மா இருந்து பாப்போம்.. என்னதான் நடக்குதுன்னு.. ‘
Bill Gates : “ Candidates who never had experience of managing more
than 100 people may leave.... “

இதனை கேட்டதும் மேலும் 2000 பேர் சென்றுவிட்டனர்...

ராமசாமி மறுபடியும் நினைச்சிக்குறார்,
‘நாம ஒருத்தன வச்சே வேலை வாங்குனதில்ல... இதில எங்க இருந்து 100 பேர் வச்சி வேலை வாங்கி இருக்கோம்... அவளோ ஏன் ஒரு மாடுக்கூட மேய்க்க தெரியாது நமக்கு... சரி பாப்போம் என்னதான் நடக்குதுன்னு...’
Bill Gates : “ Candidates who do not have management degrees may
leave... “
இதை கேட்டதும் இன்னும் 500 பேர் வெளியேறிவிட்டனர்...

ராமசாமி தனக்குள்ளேயே,
‘ நான் எங்க MBA எல்லாம் படிச்சேன்.. இன்ஜினியர்ங்கே முக்கி முக்கி பாஸ் பண்ணேன்.. சரி பாக்கலாம் என்ன நடக்குதுன்னு... ‘
கடைசியா,
Bill Gates சொல்றார் யாருக்கு எல்லாம் Serbo-Croat எனும் மொழியில் பேசத்தெரியாதோ அவங்க எல்லாம் போயிடலாம்...

மேலும் இருந்த 500 நபர்களில் 498 பேர் சென்றுவிட்டனர்....

இப்போ நம்ம ஹிரோ ராமசாமி யோசிக்குறார்,
‘ நமக்கு இங்கிலிஷே ஒழுங்கா பேச வராது... இதுல Serbo-Croat ன்னு என்னவோ மொழி சொல்றாரே.. ‘
இப்படி நினைத்துக்கொண்டே பக்கத்தில் இருக்கும் மீதம் உள்ள ஒருவரை பார்க்கிறார்..

Interviewக்கு வந்த 5000 நபர்களில் மிஞ்சியது இவர்கள் இருவர் மட்டுமே...

Bill Gates அவர்கள் இருவரிடமும் வந்து கை கொடுத்துவிட்டு சொன்னார்,
” Apparently you are the only two candidates who speak Serbo-Croat, so I'd now like to hear you have a conversation together in that
language....”

இவர்கள் இருவரையும் Serbo-Croat மொழியில் உரையாடிக்கொள்ள சொன்னார் Bill Gates..

அமைதியாக பக்கத்தில் இருந்தவரிடம் திரும்பிய ராமசாமி,
பக்கத்தில் இருந்தவரை பார்த்து,
“ எந்த ஊர்ரு நீங்க....?? “ என்றார்...

அடுத்தவர் கொஞ்சமும் சளைக்காமல்,
“ மதுரை பக்கம் சார்” என்றார்.....


Monday, June 9, 2014

நீங்க பொழச்சுகுவீங்க வக்கீல் சார்

மூன்று பேர் இறந்து சொர்க்கம் போனார்கள்.. அங்கிருந்த ஏஞ்சல் உங்கள் பிணத்தை சுற்றி இருப்பவர்கள் என்ன பேசணும் என்று விருபுகிறீர்கள்?

டாக்டர் : இந்த டாக்டர் ரொம்ப கை ராசிக்காரர். இவர் வைத்தியம் பார்த்தல் தீராத வியாதியே இல்லை.

எஞ்சினியர் : இவனுக்கு பயங்கர மூளை. எல்லா விஷயங்களுக்கும் தீர்வு வைத்திருப்பான்.

வக்கீல் : இவர் உடம்பு அசைகிறது. இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்.

ஏஞ்சல் : நீங்க பொழச்சுகுவீங்க வக்கீல் சார்


Sunday, June 8, 2014

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன. மெலிதாய் காற்று வீசிக்கொண்டு இருந்தது.

காற்றை கண்டதும்‘ அமைதி ‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘ ஐயோ காற்று வீசுகின்றது, நான் அணைந்துவிடுவேன் என்று பலவீனமாக சொன்னது. காற்று பட்டதும் அணைந்துவிட்டது.

‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது’என்று அணைந்துவிட்டது.

அறிவு ‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.

நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சில நொடிகள்போராடி ஜெயித்துவிட்டது.

அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான். அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்’ என்றது.

சிறுவன் உடனே …… ‘ நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து ” உன் பெயர் என்ன ?” என்று கேட்டான் . நம்பிக்கை என்றது மெழுகுவர்த்தி.



நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது.

Saturday, June 7, 2014

அழகு

ஒரு ராஜா அழகான குதிரை ஒன்று வளர்த்து வந்தார்.அந்த குதிரைக்கு தான் இன்னும் அழகாகனும்னு ஆசை வந்து கடவுள்கிட்ட வேண்டிகிச்சு.

கடவுள் குதிரையின் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.குதிரை நான் இன்னும் அழகாகனும் அதுனால என் கழுத்தை நீளமாகவும் கால்களை நீளமாகவும் படைக்க வேண்டும் என்று கேட்டது.

கடவுளும் குதிரை கேட்ட மாதிரி கழுத்தையும்,கால்களையும் நீளமாக படைத்தார்.குதிரை இப்போது ஒட்டகம் மாதிரி ஆகிவிட்டது.தன் உருவத்தை பார்த்த குதிரைக்கு அழுகை வந்து விட்டது.

அய்யோ கடவுளே என்னை பழைய மாதிரியே மாற்றிவிடுங்கள் என்று கேட்டது குதிரை.நீ விரும்பிய மாதிரி தான் உன்னை படைத்துள்ளேன்,பிறகு ஏன் வருத்தபடுகிறாய் என்று கேட்டார்.

ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக படைத்துள்ளேன்.உன்னால் தரையில் வேகமாக ஓட முடியும்,ஒட்டகத்தால் பாலைவனத்தில் விரைவாக ஓடமுடியும் அதிகமாக பொதி சுமக்க முடியும்.

அழகு வேண்டும் என்று மேலும் மேலும் ஏதாவது செய்ய நினைத்தால் இப்படித்தான் போய் முடியும் என்றார்.



”அழகு என்பது உருவத்தில் அல்ல நீ செய்யும் செயலில்”

Friday, June 6, 2014

ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான் குருவே நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா? இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம் என்றார் குரு.

உடன் சீடன் கேட்டான். கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே? என்றான் அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம்..

மறுபடியும் சீடன் கேட்டான் மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே? ஒரு குறையும் இல்லை என்றார் குரு அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான். இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான்.

குரு கேட்டர் கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா? வலிக்காது குருவே என்றான் மேலும் சிறிது நீரை ஊற்றினால்... குரு கேட்டார். அதுவும் வலிக்காது குருவே என்றான்.

குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் சரியான வகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்? என் தலை பிளந்துவிடும் குருவே என்றான்.



உன் கேள்விக்கான விடை கிடைத்து விட்டது. என்றார் குரு.

Thursday, June 5, 2014

கொஞ்சம் குசும்பான கதை

வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...

அட..இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?

அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..

நீ ஏம்பா கவலைப் படறே.. நான் சமாளிச்சுக்கறேன்..

இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..!
டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டு போய் விட்டுடும்..!

பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி .. விலையைச் சொல்லு..!

சொன்ன கேளுங்க.. இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க..விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!

வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி..

புது வீடு.. புது எஜமானியம்மா.. ப்ரமாதம்..!

எஜமானிக்கு ஆச்சர்யம்..! பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..

கிளி. மீண்டும் சொல்லிற்று...

." புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. ப்ரமாதம்..

எஜமானிக்கு இப்போது ஒரு சந்தேகம் வந்தது..

இவ்வளவு அருமையான கிளியைப் பற்றி அவதூறு சொன்னானே கடைக்கார கடன்காரன்..கட்டையில போக..

சற்று நேரம் கழித்து கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...



புது வீடு..புது எஜமானியம்மா..புது குழந்தைங்க..புது காரு...
அடடே.. வாங்க பார்த்த சாரதி.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???

Wednesday, June 4, 2014

கணவனும் மனைவியும்

புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.

அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா.

ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு.

திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.

அதுக்கு அந்த கணவன்’அது வேற ஒன்னும் இல்ல.

இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.

இதனால் நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னானா: அடுத்தவனோட குறைகளா நாம நெனைக்கிறது சில நேரங்களில் நம்மளோட பார்வை பிரச்சினையா கூட இருக்கலாம்.


Tuesday, June 3, 2014

காதல்

காலை 7 மணிக்கு காதலனிடமிருந்து SMS வந்தது.
' டியர்...

நீ தூங்குவதாக இருந்தால்... உன் கனவை எனக்கு அனுப்பு..

நீ சிரித்துக்கொண்டிருந்தால்...உன் புன்னகையை எனக்கு அனுப்பு...

நீ அழுதுகொண்டிருந்தால்...உன் கண்ணீரை எனக்கு அனுப்பு...

9 மணியளவில் SMS ஐ கண்ட காதலி அவசரமாக பதில் எழுதினாள்....
*
*
*
*
*
*
*
*
*
"சாரிடா... உன்னோட SMS வந்தப்ப, நான் டாய்லெட்ல இருந்தேனா.. கவனிக்கல... சாரிடா...!"


மனைவி சொல்லே மந்திரம்!!!!????

ஒரு ஊரில் ஒரு ராஜா அரசாட்சி செய்து வந்தார். ஒருநாள் அவரது முக்கியமந்திரி, சிறிது காலதாமதமாக அரசவைக்கு வந்தார்.

உடனே அரசர் மந்திரியைப் பார்த்து, எதனால் காலதாமதம்? என வினவினார். மந்திரியும், அரசே எனது மனைவி அவளுக்கு ஒத்தாசையாக காய், கறி நறுக்கித்தரக் கூறினாள், அதனாலேயே தாமதம் ஏற்பட்டது எனவும், அதற்காக மன்னிக்கவும் வேண்டினார்.

அதைக் கேட்ட அரசரும், மிகுந்த கோபத்துடன் "நீர், ஒரு நாட்டின் முக்கியமந்திரி. அதிலும் எனது முதல் மந்திரி. கேவலம் ஒரு பெண் விடுத்த ஏவலை செய்துவிட்டு வந்து, புகழ் வாய்ந்த எனது அரசவையிலே, மற்றோர் அறியும் வண்ணம் அக் கருமத்தை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் மேலும் அதற்கு மன்னிப்பு வேறு வேண்டுகிறீர்கள்." என்று கூற, மந்திரியும் அடக்கத்துடன், அரசே எனக்குத் தெரிந்தவரை நம் நாட்டில் அனைத்து திருமணமான ஆண்களுமே, அவரவர் மனைவிமார்கள் கூறுகின்ற வேலைகளை "செவ்வனே" செய்கின்றனர் என்றார்.

அதைக்கேட்ட அரசருக்கு கோபம் மேலிட, அவர் மந்திரி கூறியதை பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டார். உடனே, திருமணமான ஆண்கள் அனைவரையும் அன்று மாலை அரசவைக்கு அருகிலுள்ள பெரிய மைதானத்திற்கு வந்துசேர தண்டோரா போட ஆணையிட்டார்.

அரசரது ஆணைப்படி, திருமணமான ஆண்கள் அனைவரும் அன்று மாலை மைதானத்தில் ஒன்று கூடினர். சிறிது நேரத்தில் அரசரும், முக்கியமந்திரியும் அங்கு வந்து சேர்ந்தனர்.

அரசர் ஒரு சேவகனைப் பார்த்து மைதானத்தின் குறுக்காக ஒரு கோடு போடும்படி ஆணையிட்டார். பின்னர் அரசர், அனைத்து திருமணமான ஆண்களையும் பார்த்து "யாரெல்லாம் தங்களது மனைவியின் சொல்பேச்சைக் கேட்பவர்களோ அவர்களெல்லாம் கோட்டிற்கு மறுபுறம் செல்லுமாறும், மனைவியின் சொல்லை கேட்காதவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறும் கட்டளையிட்டார்".

உடனே, அங்கு பெரிய சலசலப்பு ஏற்பட்டு ஒரே புழுதி கிளம்பியது. இரண்டு நிமிடங்களில் எல்லாம் அடங்க, ஒரு திருமணமானவனைத் தவிர மற்ற அனைவருமே கோட்டிற்கு மறுபுறம் சென்று தாங்கள் தங்களது மனைவியர் சொற்களை கேட்டுத்தான் நடப்போம் என்ற கட்சியில் இணைந்திருந்தனர்.

அதைக் கண்ட அரசருக்கோ தலை சுழன்றது. இருப்பினும் தன் சொற்படி நடக்க ஒரு பிரஜையாவது இருக்கிறானே என்று மகிழ்ச்சி. உடனே, அவனுக்கு பரிசு அளிக்க, அவனை அருகில் அழைத்தார்.

அருகில் வந்த அவனிடம் இது பற்றி வினவ, அவனோ "ராஜா, எனது மனைவி எப்போதும் கூட்டத்தோடு சேராதே!! என்றும் எங்கும் தனியாகவே இருக்கவேண்டும்" என்று கூறியதாலேயே தனியாக நின்றதாக பெருமையாகக் கூறினான்.

என்ன நண்பர்களே, இதற்குப் பிறகும், நான் அரசரின் நிலை பற்றி கூறவும் வேண்டுமா?????