Tuesday, July 22, 2014

உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

ஒரு சமயம் ஹிட்லரை ஒரு நிருபர் பேட்டியெடுக்க
வந்தார். ஹிட்லரிடம் நிருபர், “”உங்கள் வெற்றியின்
ரகசியம் என்ன?” என்றார்.

ஹிட்லர் அவருக்குப் பதில் சொல்லாமல் கோட்டை
மதில்மேல் நின்ற படைவீரனைப் பார்த்து, “”கீழே குதி!”
என்றார்.

அவனும் மறுபேச்சில்லா மல் உடனே குதித்து
விட்டான்.
“பார்! இதுதான் என் வெற்றியின் ரகசியம்!” என்றார்.

நிருபர் விடாமல், “”சரி… அவர் சாதாரண படை
வீரர். அதனால் குதித்தார். ஒரு பெரிய அதிகாரி
குதிப்பாரா?” என்று கேட்டார்.

ஹிட்லர் ஒரு கர்னலைப் பார்த்து, “கீழே குதி!”
என்றார்.
அந்தக் கர்னலும் உடனே குதிக்க முயல, நிருபர்
ஓடிப் போய் தடுத்து கர்னலிடம், “”என்ன சார்?
ஒரு கர்னல் நீங்களுமா?” என்று கேட்டார்.

நிருபர் காதில் கர்னல், “”அட போய்யா, இவர் கிட்ட
வேலை செய்வதை விட குதிச்சு சாவதே மேல்,”
என்று கூறினார்.!!??

Monday, July 21, 2014

ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லை.அதனால் அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.ஒரு நாள் அழகிய நாய் குட்டியை வாங்கி வந்தனர்,அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித்தனர்.

அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால் அவர்களை விரட்டியது.

நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல பெரிய நாயாக வளர்ந்தது.7 வருடம் கழித்து அந்த தம்பதியனருக்கும் ஒரு மகன் பிறந்தான்.

இப்போதெல்லாம் அந்த குழந்தையுடன் தான் அந்த தம்பதியினர் நேரத்தை செலவிடுகின்றனர்.நாய் இப்போதெல்லாம் தனிமையிலே தன் பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று.அவர்கள் வளர்த்த நாய்க்கு அந்த குழந்தை மேல் பொறாமை உண்டாயிற்று

ஒரு நாள் அந்த தம்பதியினர் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு மாடியில் நின்று பேசி கொண்டு இருந்தனர்.

சிறிது நேரம் கழித்து நாயின் சத்தம் கேட்டதும் மேலே இருந்து இறங்கி ஓடி வந்தனர்.படி அருகில் நாய் வாயில் ரத்தக்கறையுடன் நின்று கொண்டு இருந்தது.இதைப் பார்த்ததும் அதன் எஜமானர் ஓடி சென்று துப்பாக்க்கியை எடுத்து வந்து நாயை சுட்டு வீழ்த்தினார்.

பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.குழந்தையின் அருகில் நல்ல பாம்பு இரண்டு துண்டுகளாக கிடந்தது.குழந்தையை காப்பாற்ற அவர்கள் வளர்த்த நாய் அந்த பாம்பை கடித்து போட்டுள்ளது, அந்த பாம்பின் ரத்தக் கறை தான் நாயின் வாயில் இருந்தது என்று அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது.

தங்கள் குழந்தையை காப்பாற்றிய நாயை அநியாயமாக கொன்று விட்டனே என்று கதறி அழுதனர்.

முன்கோபம் முட்டாள் தனத்தில் போய் முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு.

எப்ப நாம ஒரு முடிவு எடுப்பது என்றாலும் நன்றாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.


Ilayaraja Dentist.

Sunday, July 20, 2014

கடவுளே அந்த நானூறு ரூபாய்..!!!

சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு ஐநூறு தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை..

கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், இந்தியா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.

ஒரு ...விளையாட்டாக அதை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். பிரதமருக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த பையனுக்கு உதவுவோம்.

ஆனால் ஒரு சிறு பையனுக்கு ஐநூறு எல்லாம் அதிகம். எனவே நூறு ரூபாய் மட்டும் அனுப்புவோம்"என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான் கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க..

ஆனாலும்.. நீங்க இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல நானூறு ரூபாயை இந்த காங்கிரஸ் அரசாங்கம் திருடிவிட்டது..

Saturday, July 19, 2014

ஒரு கோழிப்பண்ணை முதலாளியை பேட்டி எடுக்க வந்திருந்தார்கள்.

உங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே? அதற்குக் காரணம் என்ன என்று கேட்டனர்.. பண்ணைக்காரர், அதெல்லாம் ஒன்னுமில்லீங்க, நான் அவைகளுக்கு, பாதாம், பிஸ்தா எல்லாம் கொடுக்குறேன், அதனாலத்தான் இப்படி இருக்கு என்றார்.

வந்தவர்கள், அதைக் கேள்விப்பட்டுத்தான் நாங்கள் இங்கே வந்தோம்.
நான்கள் எல்லாம் வருமானத்துறை அதிகாரிகள், எடு கணக்கு நோட்டை என்று சொல்லி 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்..

பண்ணைக்காரர், தலையில் கையைவைத்துக் கொண்டு வருத்தமாக இரண்டு நாள் சாப்பிடவில்லை.

ஒருவாரம் கழித்து, ஒரு கும்பல் வேனில் வந்திறங்கியது. உங்கள் கோழிக்கெல்லாம் என்ன தீனி போடுகிறீர்கள் என்று கேட்டனர். பண்ணைக்காரர் சுதாரித்துக் கொண்டு, இந்தமுறை வந்தவர்கள் மூக்கை அறுக்கிறமாதிரி ஏதாவது பதில் சொல்லனும்னு, நான் ஒன்றுமே போடுவதில்லை என்றார்.

வந்தவர்கள் நாங்கள் ஜீவ காருண்ய சங்கத்திலிருந்து வந்துள்ளோம்.. நீங்கள் கோழிகளை பட்டினி போட்டதற்காக உங்களுக்கு ரூபாய் 50,000 அபராதம் என்று பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, ரசீது கொடுத்தனர்.

பண்ணையார் நிலைமை கேட்கணுமா?

என்னடாயிது, எதைச் சொன்னாலும் பணம் பிடுங்குரானுங்க... என்றிருந்த நிலையில்... மூன்றாவது அணி ஒன்று வந்து, அதே போல உங்கள் கோழிகளுக்கு என்ன சாப்பாடு போடுறீங்க என்றனர்.

பண்ணையார் பாதி பயத்துடன், அதுங்க கிட்ட ஆளுக்கு ஒருஅனா கொடுத்துடுறேன்.அதுங்க எதையோ வாங்கித்தின்னுட்டு வந்திடுது.. என்னா திங்குதுனு எனக்குத் தெறியாது என்று சொல்லி ஒருவழியாக தப்பித்தார்...


Friday, July 18, 2014

காசேதான் கடவுளடா.

ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்

.ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.

அந்தக் கஞ்சனும் பெருமையாக,எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன், என்றான்.அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,

கஞ்சன் சொன்னான்,என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.

# நீதி: என்னதான் இருந்தாலும்... காசேதான் கடவுளடா...



(அப்பாடா.. இருநூறு ரூபாய் மிச்சம்)

Thursday, July 17, 2014

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த நண்பன்...!

முதல் வாரத்தில்- ஒன் அன்ட் ஆப் லாக்ஸ் சம்பளம் மச்சி, ஆபிஸ் கார், ப்ளாட் தர்றாங்க. பப், பார்ட்டினு வாரத்துக்கு ரெண்டு நாள் ஜாலிதான் போ..

ரெண்டாவது வாரம்- ஒரு லட்சம் வாங்கினாலும் அதுக்கேத்த செலவாயிடும். ஒரு இந்தோனேஷிய குட்டிய கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன். அவளோட சாப்பிட போனாலே கிரெடிட் கார்டுல 10 ஆயிரம் காலி. அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.

மூணாவது வாரம்- அங்க எல்லாத்துக்கும் டாக்ஸ். தண்ணி, பார்க்கிங்குக்கே மாசம் 20 ஆயிரம் அழணும்.

நாலாவது வாரம்- மூணு மாசத்துக்கு ஒருக்கா அப்பாவுக்கு ஒரு 20, 30 ஆயிரம் தேத்தி அனுப்புவேன். அதுவே சமயத்துல கஷ்டம்தான்.

ஐந்தாவது வாரம்- நாய்ப் பொழப்புடா அது. சிலோன்காரன் தான் மேனேஜர் பருப்பு மாதிரி பேசுவான். எதிர்த்துப் பேசினா மொதலாளிகிட்ட போட்டுக்குடுத்துருவான். அந்த சீனாக்கார ... ... மகன் என் முட்டி உயரம்தான் இருப்பான். ஆனா, எப்டி திட்டுவான் தெரியுமா..

ஆறாவது வாரம்- போதும்டா அந்த கேவலம்லாம். மாசக்கடைசில எத்தனையோ நாள் சாப்பிட காசு இல்லாம ரூம்மேட் வாங்கிட்டு வர்ற பிரட்டுக்காக காத்திருப்பேன்.

ஏழாவது வாரம்- திரும்பிப்போகலடா மச்சான் நான். அத்தான் கிட்ட ஒரு லட்சம் கேட்ருக்கேன். செகன்ட் ஹேன்ட் கார் ஒண்ணு வாங்கி ஓட்டப்போறேன். அப்பாவுக்கு விவசாயித்துல கூடமாட இருந்து உதவியும் செய்யலாம்னு யோசனை.

எட்டாவது வாரம்- ....தா.. ஊராடா இது. பிடிக்கலடா. எப்டித்தான்டா இங்க வாழ்றது. பொடிக்கடை செட்டியார்கிட்ட அம்பதாயிரம் கேட்ருக்கேன். இன்னும் ரெண்டு நாளில் டிக்கெட் போட்டு ஓடிருவேன்டா.. வரும்போது உனக்கெதும் வாங்கிட்டு வரணுமாடா மச்சான்.

நான்.. போடாங்ங்ங்ங்......



Courtasy : Nellai Kalanjiyam

Wednesday, July 16, 2014

'ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு?

''தெற்கு ரயில்வேயில் ஒரு குமாஸ்தா அந்த இளைஞர். சினிமாவில் நடிக்க ஒரு சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால், பிரமாதப்படுத்திவிடலாம் என்ற கனவுடன் இருந்தார். அந்தச் சமயம், ஒரு நாடகத்தில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் மேடையில் தோன்றி நடிக்க சிறிய சந்தர்ப்பம் கிடைத்தது. வயிற்று வலியால் துடிக்கும் ஒரு நோயாளியாக நடிக்க வேண்டும்.

நாடகத்தில் அந்தக் காட்சியும் வந்தது. மேடையில் காலடி எடுத்தவைத்த முதல் கணத்திலேயே 'ஐயையோ டாக்டர்... வலிக்குதே... வயிறு வலிக்குதே’ என்று அந்த இளைஞர் துடித்த துடிப்பு ஒட்டுமொத்த அரங்கத்தையும் குபுக்கெனச் சிரிக்கவைத்தது. அப்போது மேடையில் இருந்த வேறு எவர் மீதும் கவனத்தைப் பதியவிடாமல், 'வயிற்று வலிக்காரனை’ மட்டுமே ரசிக்கவைத்தார் அந்த இளைஞர். இத்தனைக்கும் கதைப் போக்கில் எந்த மாற்றத்தையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தக்கூடிய பாத்திரம் இல்லை அது. ஆனால், நாடகம் முடிந்ததும் அந்த 'வயிற்று வலிக்காரன்’ மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தான்.


நாடகத்தை ரசித்த எம்.ஜி.ஆர். கையால் 'சிறந்த நடிகருக்கான’ முதல் பரிசையும் வென்றான் அவன்.

கிடைத்த சின்ன சந்தர்ப்பத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டு தமிழ் சினிமாவையே கட்டிப் போட்ட அந்த இளைஞன்தான்.... 'நாகேஷ்’ என்றழைக்கப்பட்ட நாகேஸ்வரன்!

- ஹெச்.பாஷா, சென்னை-106.

(நானே கேள்வி... நானே பதில்)
(ஆனந்த விகடன் - 24/10/2012)

Tuesday, July 15, 2014

மரணத்துக்கு ஆசைப்படு......

படுக்கையில் படுத்த பிறகு எந்த நொடியில் தூக்கம் கண்களைத் தழுவுகிறது என்பதை என்பதைக் கண்டறிந்திருக்கிறாயா?

அது போலவே உனக்குத் தெரியாமலே உன்னிடம் இருந்து உயிர் பிரிய வேண்டும். பூக்களில் இருந்து வாசம் வெளியேறுவதைப் போல... ஊதுபத்தியில் இருந்து புகை வெளியேறுவதைப் போல இனிமையாக இருக்க வேண்டும், உயிர் வெளியேற்றம்.

அப்படி ஒரு மரணம் நிகழவேண்டும் என்ற ஆசையுடன், மரணத்துக்காக அன்புடன் காத்திரு...

Monday, July 14, 2014

நீயும் உன் ரூபாயும்

திருமண வயதாகியும் ஒரு இளைஞன் எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பிக் கிடந்தான். வெறுத்துப் போன அவன் தந்தை கோபமாக ஒரு நாள், ''இன்றிலிருந்துதினசரி நூறு ரூபாய் கொண்டு வந்தால் தான் உனக்கு சாப்பாடு,'' என்றார்.

இளைஞன் நொந்து போய் விட்டான். என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. தாயிடம் புலம்பினான். தாயும் இரக்கப்பட்டு, ''நீ வெளியில் போய் வா. நான் உன்னிடம் நூறு ரூபாய் தருகிறேன். நீ அதை அப்பாவிடம் கொடுத்து விடு'' என்று சொல்ல அவனும் சம்மதித்தான்.

அன்று நூறு ரூபாயை அப்பாவிடம் கொடுத்த போது அவர் அதை வாங்கி, ''நீயும் உன் ரூபாயும்,'' என்று கூறி தூக்கி எறிந்து விட்டு வெளியே சென்று விட்டார். இளைஞன் அமைதியாக இருந்தான்.

சில நாட்கள் இப்படியே போயிற்று. ஒரு நிலையில் தாயிடம் கொடுக்கப் பணமில்லை. சில நாட்கள் கடன் வாங்கிக் கொடுத்தாள் .

ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் தந்தை , ''நீயும் உன் ரூபாயும், ''என்று கூறி விட்டெறிந்து கொண்டிருந்தார்.இப்போது தாய்க்கு கடன் யாரும் கொடுக்கத் தயாராயில்லை. மேலும் கொடுத்த பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர்.

தாய் வேறு வழியில்லாது, ''மகனே, இனி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. இனி நீ போய் ஏதாவது வேலை செய்து பணம் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. உன் தந்தையும் இவ்விசயத்தில் பிடிவாதமாக இருக்கிறார். நான் என்ன செய்ய முடியும்? என்று கூறி கை விரித்து விட்டார்.

இளைஞன் வேறு வழியின்றி வெளியே சென்று மூட்டை தூக்குவதிலிருந்து எந்த வேலையானாலும் செய்து அன்று நூறு ரூபாய் சம்பாதித்து விட்டான்.
அன்று பெருமையாகத் தந்தையிடம் ரூபாயைக் கொடுத்தான்.

அன்றும் வழக்கம் போலத் தந்தை, ''நீயும் உன் ரூபாயும், ''என்று கூறித் தூக்கி எறிந்தார்.

இளைஞனுக்கு வந்ததே கோபம்! ''அவனவன் மூட்டை தூக்கி கல் சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் இப்படித் தூக்கி எறிகிறீர்களே, என்ன நியாயம்?'' என்று கேட்டான்.
தந்தை சிரித்துக் கொண்டே கீழ குனிந்து எறிந்த பணத்தை எடுத்து, அதை முத்தமிட்டு தனது பைக்குள் வைத்துக் கொண்டு, ''இது என் மகன் உழைப்பில் வந்த பணம், இனி அவனைப் பற்றி எனக்குக் கவலை இல்லை'' என்று கூறி மகிழ்ச்சியுடன் வெளியே சென்றார்..

பிறரை நம்பாபல் உங்கள் சொந்த உழைப்பில் வாழுங்கள்..


Sunday, July 13, 2014

எங்கேயாவது


மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க!..

கணவன்: ஒண்ணுமில்ல!...

மனைவி: ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட
பார்த்துகிட்டு இருக்கிங்க!...

கணவன்: எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

மனைவி : கிர்ர்ர்ர்ர்


Saturday, July 12, 2014

ஒரு ஊரில் , ஒரு ராஜா !

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது; நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!

*திவ்யா சாவித்ரி*


Friday, July 11, 2014

கல்யாணத்துக்கு முன்னாடி நானும் !!!

ஒரு காட்ல சிங்கத்துக்கு கல்யாணம் நடந்துட்டு இருந்திச்சி. மத்த எல்லா மிருகமும் கொஞ்சம் தள்ளி நின்னு பாத்துட்டு இருந்திச்சிங்க. கல்யாணம் முடிஞ்சி எல்லா மிருகங்களும் தூர நின்னுகிட்டே வாழ்த்து சொல்லிச்சுங்க.

அப்ப அங்க வந்த சுண்டெலி மேடைக்கிட்ட போய் சிங்கத்துக்கு கை நீட்டி (கை குடுக்கத்தாங்க) வாழ்த்து சொன்னப்போ சிங்கம் கேட்டுச்சு என்ன தைரியம் இருந்தா கிட்ட வந்து கை குடுத்து வாழ்த்து சொல்லுவே, மத்தவங்க எல்லாம் தள்ளி நின்னு வாழ்த்து சொல்றது தெரியலையா ன்னு கேட்டுச்சு.

சுண்டெலி சொன்ன பதில கேட்டு சிங்கம் மயக்கமே போட்டுடுச்சு. அப்பிடி சுண்டெலி என்ன சொல்லி இருக்கும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கல்யாணத்துக்கு முன்னாடி நானும் "சிங்கம்"தாண்டான்னுச்சாம்

Thursday, July 10, 2014

பலம், பலவீனம்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானையின் பதில் :

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."



நீதி: தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

Wednesday, July 9, 2014

இளைஞர்களுக்கு மட்டும்

திருமணமானவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டாம்..(இளைஞர்களுக்கு மட்டும்)

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்;கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!


Tuesday, July 8, 2014

நல்ல பெயரே கிடைக்காது

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..


. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு....

நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது

Sunday, July 6, 2014

ஜலதோஷம்

காட்டில் ஒரு சிங்கம்,

ஒரு ஆட்டை அழைத்தது.

''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.


ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.

உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.

அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து

.அதனுடைய கருத்தைக் கேட்டது.

ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,

''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.

சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது

.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.
நரி சொன்னது,

''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.

அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.

புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

Thursday, July 3, 2014

கணவன்: என்னைக்கேட்டு யாராவது போன் பண்ணினா ”நான் வீட்டில இல்லை”ன்னு சொல்லிடு.

மனைவி: சரிங்க

அப்புறம் ஒரு போன் வந்தது. மனைவி போனை எடுத்து, “அவர் வீட்டில இருக்கார்”னு சொல்லிட்டாங்க.


கணவன்: நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்றே, நான் தான் வீட்டில இல்லைன்னு சொல்லச் சொன்னேன்ல

மனைவி: சும்மா கத்தாதீங்க. இது எனக்கு வந்த கால்.

Wednesday, July 2, 2014

நண்பேண்டா

ஒரு பையன் பைக்ல போகும் போது விபத்துல அடிபடுகிறான்.

இன்னும் 5 நிமிடத்தில் சாகபோறோம்னு தெரிந்த அவன், தன்னோட காதலிக்கும், நண்பனுக்கும் குறுந்தகவல் அனுப்புகிறான்.

“ஐ அம் கோயிங் குட் பை"


சற்று நேரத்தில் காதலியிடமிருந்து பதில் வருகிறது,

"ஓகே டா டேக் கேர்"

மிக கவலை கொள்கிறது மனது.

அப்போது அவன் நண்பனிடமிருந்து வருகிறது குறுந்தகவல்,

"ஹேய் ஸ்டூபிட் வெயிட் பண்றா ... ஒரு 2 நிமிடத்துல வந்திடுறேன் ... சேர்ந்தே போவோம்"

இதழில் புன்னகை பூக்க பிரிகிறது உயிர்.

Tuesday, July 1, 2014

சொன்னவர் திரு நாகேஷ் அவர்கள்

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நான் கவலையே படமாட்டேன். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.


அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!