Saturday, August 30, 2014

ரொம்ப நன்றி பா

ஒரு நாள் பணக்கார தந்தை அவரது மகனை வெளியூர் கூட்டிச்சென்றார்....

அவரது மகனுக்கு ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழை குடும்பத்துடன் தங்கினர்....

.

.

.

2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு வீடு திரும்பினர்....

வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார்....

" அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா...? இந்த சுற்றுலா இருந்து என்ன கத்துக்கிட்ட? "

.

.

மகன் சொன்னான்...

" பாத்தேன்... நாம ஒரு நாய் வச்சிருக்கோம்.. அவங்க 4 வச்சிருக்காங்க...

நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம்... அவங்க கிட்ட நதி இருக்கு..

இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்... அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு...

சாப்டுறதுக்கு நாம கடைல பொருள் வாங்குறோம்... அவங்க அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க...

திருடங்க வராமே இருக்க நாம வீடு சுத்தி செவுரு கட்டி இருக்கோம்... அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் , நண்பர்கள் இருக்காங்க... "

.

.

தந்தை அவனையே வெறித்துக் கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்...

" ரொம்ப நன்றி பா .... நாம எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய வச்சதுக்கு..."

நம்பிக்கை

ஜோசியத்தை நம்பினேன்.
நண்பர்களை நம்பினேன்.
காதலை நம்பினேன்.
சொந்தத்தை நம்பினேன் .
பந்தத்தை நம்பினேன்.

காலத்தில் கடவுளை நம்பினேன்.

சில காலம் போனது.

கடைசியில்

எல்லாம் விதியென்று நம்பினேன்.

உடனே என் உயிர் போனது.

செத்து

போன பிறகு

கடவுளிடம் முறையிட்டேன்..

எல்லாரையும் நம்பினேன்.

கடைசியில்

எல்லாரும் என்னை

கை விட்டு விட்டார்களே என்று.

கடவுள் சொன்னார்.

எல்லாரையும் நம்பினாயே

உன்னை நம்பினாயா என்று




அப்போது தான் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது.
நான் தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருக்கிறேன் என்று.
முழித்து பார்த்தேன். வாழ்வில் அர்த்தம் புரிந்தது. தன் மீதே நம்பிக்கை வைக்காதவன் எதை நம்பியும் பயன் இல்லை.


தன் மீது
நம்பிக்கை வைப்பவனுக்கு
எதைக் கண்டும் பயமில்லை.

Thursday, August 28, 2014

பிறந்தநாள் என்றால் என்ன ?

இந்த ஒரு கேள்வி BBC வேர்ல்ட் நிறுவனத்தார் உலகில் உள்ள பெரிய மனிதர்கள்(VIP) எல்லோரிடமும் கேட்டனர்.அதில் மிக சிறந்த பதிலாக தேர்வு செய்ய பட்டது யாருடைய பதில் தெரியுமா?

அப்துல் கலாம் அவர்களின் பதில் தான்.......அது என்ன தெரியுமா?
.
.
.
..
.
.
.
.
.
.
" வாழ்கையில் அந்த ஒரே ஒரு நாள் , உன்னுடைய அழுகை குரல் கேட்டு உன் தாய் சிரிப்பது "

Wednesday, August 27, 2014

அரண்மனையில் ஒரு போட்டி!

விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலாம்.

உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.

திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே?

ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான்.

அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து,

"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?"

"இல்லை..."

"பின்னே... 10 கிராமங்களா?"

"ப்ச்! வேண்டாம்..."

"ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"

"தேவை இல்லை..."

"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."

"என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்"

Tuesday, August 26, 2014

ச்சும்ம்மா பேசிட்டு இருந்தேன்

ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு மிஸ்ட் கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?"




"எப்போ?"

"ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி"

"ஓ, அதுவா சார் என் ஹஸ்பென்ட் தான் கூப்பிட்டார், இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கார்?"

"யாரு பேசுறதுன்னு தெரியலயே?"




"நான் அவரோட வைஃப் ..என்னை உங்களுக்குத் தெரியாது. என் ஹஸ்பன்ட்டுக்கு தான் சார் உங்களைத் தெரியும்."

"இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பேர் என்ன?"




"ஃபோன் என் மாமனார் பேர்ல தான் இருக்கு. ஆனா ஃபோன் பண்ணினது என் ஹஸ்பன்ட்"

"சரி என்ன விஷயமா ஃபோன் பண்ணினார்"

"அதை சொல்லத்தான் உங்கள பார்க்க வந்துட்டு இருக்கார்"

"சரி எங்கே வர்றாரு?"




"ஆமா எங்க வீட்லேர்ந்து தான் வர்றாரு"

"ரொம்ப சந்தோஷம் இதுக்கு மேல என்னால முடியாது ..ஃபோனை வெச்சிடறேன் ..அவர் வரட்டும் பார்த்துக்கறேன்"




ரூம்லேர்ந்து அவர்

"யார் கிட்ட இவ்ளோ நேரம் பேசிட்டு இருந்தே?"

"தெரியாம ஒரு ராங்க் கால் பண்ணிட்டேன்...அந்த நம்பர்லேர்ந்து தான் ஒருத்தர் கூப்ட்டாரு.. ச்சும்ம்மா பேசிட்டு இருந்தேன்"












Thursday, August 21, 2014

இரண்டு பெண்கள்?

பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொடிருந்தார்கள் .




ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி..இன்னொரு ­த்தி ஜன்னலை திறக்க சொல்லி!




ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும், காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து

கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார்.




முதலில் ஜன்னலை மூடுங்கள்.. ஒருத்தி செத்து விடுவாள்.

அப்புறமா ஜன்னலை திறன்கள் இன்னொருத்தியும் ­ செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு!.




சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம். எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..




பெரியவர் கூறினார்:

அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்!



Wednesday, August 20, 2014

எனக்குத் தெரியும்... இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் என்று...!!!!!!!!

சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை இந்தியப் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.முதல் வருடத்தில் அவர்களுக்கு அழகான குழந்தை பிறந்தது.மறு வருடம் யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த சீன இளைஞன் இறந்து போனான்.இந்தியப் பெண்ணிடம் துக்கம் விசாரிப்பதற்காகஉறவினர்களும், அந்தப் பகுதி மக்களும் கூடி அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.இரண்டு வருடத்தில் இந்தியப் பெண்ணின் காதல் கணவன் இறந்து போனது அவர்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.அந்தப் பெண்ணோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் "எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்!" என திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்.நீண்ட நேரமாக அவள் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்ததைக்கண்ட ஒரு இளைஞன் அவளிடம் சென்று கேட்டான்."சகோதரி! எனக்குத் தெரியும் என்கிற வார்த்தையை நீண்ட நேரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்.அர்த்தம் புரியாமல் கேட்பதற்குச் சங்கடமாக இருக்கிறது.இப்பொழுதாவது தெளிவாகச் சொல் உனக்கு என்ன தெரியும்?


-




-




-




-




-













" அழுது கொண்டே சொன்னாள்."

எனக்குத் தெரியும். சைனா பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் என்று...!!!!!!!!!!!!!!!!!!

Monday, August 18, 2014

நேர்மையை விதையுங்கள்

ஒரு மிகப்பெரிய கம்பெனியின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் கம்பெனியின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன் ரூமுக்கு வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் ,அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் ஜெயிக்கிறார்களோ அவர் தான் அடுத்த மேனேஜர் என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும்.யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர்.அந்த கம்பெனியில் வேலை செய்யும் வாசு வும் ஒரு விதை வாங்கி சென்றான்.தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான்.அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது ஆபிஸில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.ஆனால் வாசுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை.நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை.தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று ஆபிஸில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.வாசு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள்.செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை .நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

வாசுவும் காலி தொட்டியை ஆபிஸுக்கு எடுத்து சென்றான்.எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.வாவ் எல்லாரும் அருமையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார்.எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.வாசு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

வாசு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான்.முதலாளி வாசுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார்.ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

முதலாளி வாசுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார்.பிறகு வாசு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்.வாசுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள்[Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள்.வாசு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்,ஆகவே அவனே என் கம்பெனியை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

*If you plant honesty, you will reap trust.
* If you plant goodness, you will reap friends.
* If you plant humility, you will reap greatness.
* If you plant perseverance, you will reap contentment.
* If you plant consideration, you will reap perspective.
* If you plant hard work, you will reap success.
* If you plant forgiveness, you will reap reconciliation.
* If you plant faith in God , you will reap a harvest.

So, be careful what you plant now; it will determine what you will reap later..

“Whatever You Give To Life, Life Gives You Back”

via Ilayaraja Dentist

Sunday, August 17, 2014

எடுத்தான் பாருங்க ஓட்டம்...

ஒரு பொண்ணு டெய்லி காலெஜுலெர்ந்து வரும்போது ஒருத்தன்

பின்னாடியே வரதக் கவனிச்சுச்சு ...

வீட்டுக்குள்ள போயி மூஞ்சி கழுவி ட்ரஸ்

மாத்திக்கிட்டு வந்து பாத்தா அவன்

அங்கேயே நின்னுக்கிட்டு செல்போன

நோண்டிக்கிட்டு இருக்கான்....

ஒருவாரம் ஆயிருச்சு.... தினமும்

அதே கதை தான்.

பொண்ணு யோசிச்சது " அம்மாப்பாட்டச்

சொல்லிறலாமா?"

"இல்ல இன்னும் கொஞ்சம் பொறுத்துப்

பாப்போம்..."

ஒரு மாசம் தாண்டிருச்சு... கதை ரிப்பீட்டு...

ஒரு நண்பியக் கூட்டிக்கிட்டு வந்து அவனக்

காமிச்சுக் கதை சொல்லிச்சு அந்தப் பெண்...

பிரெண்டு " மூணு மாசம் வரைக்கும் பாரு...

பையன் நல்லா இருக்கான்.... வீட்டுல சொல்லிக்

கலியாணத்துக்கு ஏற்பாடு பண்ணிரலாம்"

ன்னு சொல்லிச்சு...

பெண்ணு மனசுக்குள்ள

ஒரு கிளுகிளுப்பு ஓட ஆரம்பிச்சிருச்சு....

நண்பியோடு கூடச் சேர்ந்து அவன் வேலை,

குடும்ப விபரம் எல்லாம்

கண்டு பிடிச்சு முடிச்ச போது ஒரு வருஷம்

தாண்டிருச்சு....

அப்பாம்மாட்டச் சொல்லிருச்சு.... அவங்களும்

கலியாணம் பேசி முடிச்சிரலான்னு

சொல்லி ஊர்லேர்ந்து பெரியவங்களக்

கூட்டிட்டு வந்து மொறைப் படி வரன் கேக்கப்

போக ரெடியானாங்க....

சந்தோசம் தாங்காமப் பொண்ணு அன்னைக்குச்

சாயங்காலம் அவன் கிட்டப் போயி "

ஒரு வருஷத்துக்கு மேலா என்ன

பாலோ பண்ணுறீங்க...

சின்சியரா வீட்டு முன்னாடி நின்னு பாக்குறீங்க....

ஆனாலும் ஒரு தப்புத் தண்டாவான

விஷயமெல்லாம் பண்ணலை.... அதுனால நான்

வீட்டுல சொல்லி, உங்க வீட்டுல சம்பந்த பேச

நாளைக்கு என்னோட அப்பாம்மா வராங்க... உங்க

வீட்டுல எந்தத் தடையும் சொல்ல

மாட்டாங்கன்னும் கண்டு பிடிச்சிட்டேன்.... ஐ

லவ் யூ டா கண்ணா" ன்னுச்சு...

அவன் அதுக்கு " அடாடா... நான் உங்க

வீட்டுவாசல்ல உங்களுக்காகக்

காத்து நிக்கலை...உங்க வீட்டு wi -fi ல நீங்க

பாஸ் வேர்டு போடலை... அதுனால

ப்ரீயா டவுன்லோடு பண்ணத்தான் வரேன்..."

ன்னு சொல்லிட்டு எடுத்தான் பாருங்க ஓட்டம்...



Saturday, August 16, 2014

செத்துப் போனவங்க 3 பேர் மேல் உலகத்துல சந்திச்சுக்கிட்டாங்க..

அப்ப ஒரு பேச்சு எழுந்தது.. சவப் பெட்டிக்குள் கிடத்தப்பட்டு குழிக்குள் இறக்கப்படும்போது துக்கத்துக்கு வந்தவங்க இறந்தவரைப் பற்றி என்ன பேசி இருந்தாங்கன்னா சந்தோஷப்பட்டிருப்பீங்கன்னு....

முதல் நபர் சொன்னார்... " நல்ல குடும்பத் தலைவன்.. அனைவரிடமும் அன்பாக இருந்த நல்ல ஊழியன்.." இப்படி சொல்லியிருந்தா மகிழ்ச்சியா இருக்கும்.

இரண்டாம் நபர், " சிறந்த போர்வீரர்.. நாட்டுக்காக வீர மரணம் அடைந்தார்,.." இப்ப்டி சொல்லியிருந்தா வாழ்ந்ததுக்கு பொருள் இருந்திருக்கும்..

3 வது ஆள் புலம்பினான்...

" அங்க பாருங்க.. கை காலெல்லாம் அசையுது.. இன்னும் இவர் சாகல.." ன்னு யாராவது ஒரு நாய் பார்த்து சொல்லியிருந்தா நான் இப்போ உங்ககிட்டே பேசிகிட்டு இருந்துருக்க மாட்டேன்...!


Friday, August 15, 2014

மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்.

ஒருவர் எதற்கெடுத்தாலும்
மனைவியுடன்
சண்டைப் போடுவார்..

ஒருநாள் 'ஆபீஸ்' போய்
வேலை செய்து பார்..
சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம்
என்று புரியும் என்று அடிக்கடி சவால்
விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து,
ஒருநாள் நீங்க வீட்ல
இருந்து பசங்களை பார்த்துக்கோங்க..
காலைல
குளிப்பாட்டி சாப்பிட வச்சு,
வீட்டுப் பாடங்கள்
சொல்லிக்கொடுத்து
சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..
அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும்
செஞ்சுதான் பாருங்களேன்..
என எதிர் சவால்விட்டாள்..

கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில்
இருக்க..
இவள் ஆபீஸ் போனாள்..
ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்..

முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்
கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..

வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய்
வருபவர்களை கண்டித்தாள்..
கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட
நினைத்தபோது,
ஓர் அலுவலரின் மகள் திருமண
வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல,
பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண
மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம்
ஒன்றை சொல்லிவிட்டு,
மணமக்களின்
கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..
பந்தியில்
உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே..

இலையில் வைத்த
'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும்
என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..
முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..
அவள் சாப்பிட்டதை விட,
பிள்ளைகளுக்கும்
கணவனுக்கும் என பைக்குள்
பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,
கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்
இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும்,
பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
அத்தனையும்
குரங்குகள்..
சொல்றதை கேட்க மாட்டேங்குது..
படின்னா படிக்க மாட்டேங்குது..
சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..
அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல
படுக்க வச்சிருக்கேன்..
பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள
கெடுத்து வச்சிருக்கே
என்று பாய..

அவளோ,
அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா...
என்றவாறே
உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய்
பிள்ளைகள்..

விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,
‘ஏங்க..
இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?
இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற..
ஓஹோ ,
அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க..

அந்த நிலையில் இருவருக்கும்
ஒன்று புரிந்தது..

இல்லாள் என்றும் ,
மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம்
தொடங்கி நம் மூதாதையர்கள்
சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும்
பிள்ளைகளுக்கு வளமான
வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..

அதுபோல,
பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும்
அளப்பரியது..

ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்
இது ஆணுக்கு,
இது பெண்ணுக்கு என்று
குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க
இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில்
ஒரு குடும்பம்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால்
கணவன்மீது மனைவியோ,
மனைவிமீது கணவனோ ஆதிக்கம்
செலுத்தாமல்
அன்பால் சாதிக்கும்
மனநிலையை கொண்டிருந்தால்தான்
எல்லா வளமும்
பெற்று பல்லாண்டு வாழ
முடியும்...





Thursday, August 14, 2014

பிசினஸ் தந்திரம்

இளைஞன் ஒருவன் நிறைய
கோழி முட்டைகளை ஒரு மூன்று சக்கர
வண்டியில் வைத்து மக்கள் கூட்டம்
மிகுதியாக உள்ள
கடைத்தெரு வழியே சென்று கொண்டிருந்தான்.

ஒரு திருப்பத்தில் எதிர்
பாராதவிதமாக வண்டி கவிழ்ந்து விட்டது.
முட்டைகள் அனைத்தும்
உடைந்து சிதறி விட்டன. இளைஞன் அழ
ஆரம்பித்து விட்டான், ''ஐயோ, என்
முதலாளிக்கு என்ன பதில் சொல்வேன்?
இவ்வளவு
முட்டைக்குரிய காசுக்கு நான் என்ன
செய்வேன்?'' அங்கே பெரும் கூட்டம்
கூடிவிட்டது. எல்லோருக்கும்
அழுது கொண்டிருந்த இளைஞனைப்
பார்த்து பரிதாபம் ஏற்பட்டது.
அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர், ''தம்பி,
ஏன் அழுகிறாய்? உடைந்த முட்டைகளுக்கான
காசை உன்னால் கொடுக்க
முடியாது என்பதுதானே உன் வருத்தம்?''
என்று கேட்க இளைஞனும் ஆம்
என்றான். உடனே அப்பெரியவர் தன்
துண்டை எடுத்தார்.'' இந்தக் கூட்டத்தில் இரக்க
குணமுடையவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்,
'' என்று சொல்லியபடியே அதில் தன்
பையிலிருந்து எடுத்து ஒரு பத்து
ரூபாய் நோட்டைப் போட்டார்.

பின் அந்தத் துண்டுடன் அந்தக்
கூட்டத்தை சுற்றி வந்தார். எல்லோரும் அதில்
காசு போட்டார்கள். எல்லோர் முன்னிலையிலும்
பணத்தை எண்ணினார்.
அதை அப்படியே இளைஞனிடம்
கொடுத்துவிட்டு,''
இனியாவது கவனமாக நடந்துகொள்,''
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு
சென்று விட்டார்.
கூட்டத்திலிருந்த அனைவரும்
அவரை பரோபகாரி என்று வாழ்த்தினர்.
கூட்டம் கலைந்தது. எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் இளைஞனிடம்,''
அவர் மட்டும் வரவில்லையென்றால் உன்
கதி என்ன ஆகி இருக்கும்? என்ன நல்ல குணம்
அவருக்கு? அவரை
உனக்கு முன்னரே தெரியுமா?'' என்று கேட்டார்.

அந்த இளைஞன் சொன்னான், ''அவர்தாங்க என்
முதலாளி. இந்த
முட்டைகளை ஏற்றி அனுப்பியவர்.''


Wednesday, August 13, 2014

குட்டிக்கதை:

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.

Tuesday, August 12, 2014

கடவுளும் குழந்தையும்..

இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.

குழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

கடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்

குழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்

கடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா.

குழந்தை : என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.

கடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.

குழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.

கடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.

குழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.

கடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

குழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.

கடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.

குழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

கடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.

உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின

குழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்

கடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.

கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது...


Monday, August 11, 2014

கடவுள் சொல்கிறார்

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."

ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

"மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."

"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்........."

"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"
"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."

"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"

"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."

"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."

"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"

"என் உடல்?..........."
"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."

"என் ஆன்மா?"
"இல்லை........அது என்னுடையது.........."
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........
கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,

கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......அது மட்டுமே நிரந்தரம்.......
-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....


Saturday, August 9, 2014

எதில் மகிழ்ச்சி!!!

ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது.அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து தங்கள் பெயரை எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன் ,அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார்.இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள்,அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார்,’இது தான் வாழ்க்கை.எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம், ஆனால் அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை’.

’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்,உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.



உண்மையை உணருங்கள், மற்றவருக்கும்... பகிருங்கள்....

Friday, August 8, 2014

என்ன பண்றீங்க?

ஒரு நாளு ஒரு முயல் அதோட
வீட்டுக்கு வெளியே உக்காந்து லேப்டாப்-ல ஏதோ டைப்
பண்ணிக்கிட்டு இருந்துச்சு, அங்க வந்த நரி முயலைப்பார்த்து

“என்ன பண்ணிக்கிட்டு இருக்க?”

“முயல் எப்பிடி நரிய
வேட்டையாடி சாப்பிடும்ன்னு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன்”

“நீ என்ன லூசா எந்த ஊருல முயல் நரிய வேட்டையாடி இருக்கு?”

“நம்பலையா கொஞ்சம் என் வீட்டுக்குள வேணா வந்து பாரேன்”

கொஞ்ச நேரம் கழிச்சி நரியோட எலும்போட வெளியே வந்த முயல்
திரும்ப டைப் பண்ண ஆரம்பிச்சுச்சு, கொஞ்ச நேரத்தில ஒரு ஓநாய்
அந்த பக்கம் வந்தது

“முயலாரே என்ன பண்றீங்க?”

“முயல்
எப்பிடி ஓநாயை வேட்டையாடி சாப்பிடும்ன்னு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன்”

“ஹே ஹே இது எங்கேயாவது நடக்குமா?”

“நம்பலையா கொஞ்சம் என் வீட்டுக்குள வேணா வந்து பாரேன்”

கொஞ்ச நேரம் கழிச்சி ஓநாயோட எலும்போட வெளியே வந்த
முயல் திரும்ப டைப் பண்ண ஆரம்பிச்சுச்சு, கொஞ்ச நேரத்தில
ஒரு கரடி அந்த பக்கம் வந்தது
“முயலாரே என்ன பண்றீங்க?”

“முயல்
எப்பிடி கரடியை வேட்டையாடி சாப்பிடும்ன்னு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன்”
“நம்ப முடியலையே?”

“நம்பலையா கொஞ்சம் என் வீட்டுக்குள வேணா வந்து பாரேன்”

வீட்டின் உள்ளே : முயல் உள்ள இருந்த சிங்கத்துக்கிட்ட
கரடியை அறிமுகப்படுத்திக்கிட்டு இருந்துச்சு
நீதி : நீங்க எவ்வளவு கேவலமா வேலை செய்யுறீங்க
என்பது முக்கியம் இல்லை உங்க 
பாஸ்க்கு உங்களை பிடிச்சு இருக்கா இல்லையாங்குறது தான்
முக்கியம்.

Wednesday, August 6, 2014

விவசாயியை முட்டாளாக நினைக்காதே!

தேசிய நெடுஞ்சாலை அதிகாரி துறை ஒருவர் வயதான விவசாயி ஒரு வரை அவருடைய வயல் அருகில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

"உங்களுடைய இடத்தில் புதிய பாதை அமைக்கவிருப்பதால் உங்களுடைய நிலத்தைப் பார்வையிட விரும்புகிறேன்'' என்றார்.

"சரி. வயலின் உட்பகுதிகளுக்கு மட்டும் போகாதீர்கள்'' என்றார் விவசாயி.

"நான் நெடுஞ்சாலைத் துறை . அதிகாரி எனக்கு எங்கு வேண்டு மானாலும் சென்ற பார்வையிட அனுமதியுண்டு. இதோ பாருங்கள். இது என்னுடைய அடையாள அட்டை. இது அரசாங்கம் கொடுத்தது'' என்றார் பணியாளர்.

"அதற்கு மேல் உங்கள் விருப்பம்'' என்று கூறிய விவசாயி பேசாமல் வயல் வரப்பில் அமர்ந்தார்.

வயலுக்குள் சென்ற பணியாளர் சிறிது நேரத்துக்கு எல்லாம் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்.

அவருக்குப் பின்னால், முரட்டுக்காளை ஒன்று துரத்தி வந்ததை விவசாயி பார்த்தார்.

தன்னைக் காப்பாற்றும்படி அலறிய அதிகாரியிடம் விவசாயி சொன்னார்,

"சீக்கிரமாக உங்கள் அடையாள அட்டையை எடுத்து அதனிடம் காட்டுங்கள்''

Monday, August 4, 2014

ரெண்டு பிரச்சனை....!!

ஒரு ஊர்ல ஒரு நெறைய பேரு இருந்தாங்களாம் ( ஒருத்தன் நு ஆரம்பிச்சா ஒருத்தன் தானான்னு கேப்பீங்க)..

அந்த நெறைய பேருல ஒருத்தர் செத்து போயிட்டாராம்….

அப்போ எல்லாருக்கும் ஒரு டவுட்டு …. செத்தவன எரிக்கிறதா? புதைக்கிறதா ??
எரிச்சா பிரச்சனை இல்லை….. புதைச்சா ரெண்டு பிரச்சனை…..
புதைச்ச இடத்துல புல்லு முளைக்குமா முளைக்காதா
முளைக்கலன்னா பிரச்சனை இல்லை… முளைச்சா ரெண்டு பிரச்சனை….. ...
மாடு திங்குமா திங்காதா…….
திங்கலன்னா பிரச்சனை இல்லை…. தின்னா ரெண்டு பிரச்சனை…….
பால் குடுக்குமா குடுக்காதா?
குடுக்கலன்னா பிரச்சனை இல்லை, குடுத்தா ரெண்டு பிரச்சனை …
குடிக்க்கலாமா வேண்டாமா ?
குடிக்கலன்னா பிரச்சனை இல்லை… குடிச்சா ரெண்டு பிரச்சனை…..
குடிச்சவன் பொழைப்பானா மாட்டானா?
பொழச்சுட்டா பிரச்சனை இல்லை… பொழைக்கலன்னா ரெண்டு பிரச்சனை….
அவன எரிக்கிறதா புதைக்கிறதா?
எரிச்சிட்டா பிரச்சனை இல்லை……. புதைச்சா?????
இப்போ நீங்க சொல்லுங்க… நான் கதைய தொடரவா வேண்டாமா?


Sunday, August 3, 2014

அரசன் ஒருவனுக்கு ஓர் ஐயம் எழுந்தது

உலகைத் துறந்தவன் உயர்ந்தவனா? உலகியல் கடமைகளை ஒழுங்காகச் செய்யும் இல்லறத்தான் உயர்ந்தவனா?’ என்று. இதற்கு விடை தரும்படி துறவி ஒருவரிடம் அரசன் வேண்டினான். ‘அவரவர் நிலையில் இருவரும் உயர்ந்தவரே’ என்றார் துறவி. ‘இதை நிருபிக்க வேண்டும்’ என்றான் வேந்தன். ‘நிச்சயமாக! என்னோடு வாருங்கள்’ என்றார் துறவி.

வேந்தனும் துறவியும் வேறொரு நாட்டில் நுழைந்தபோது, அங்கே சுயம்வரம் நடப்பதாக அறிந்தனர். சுயம்வர மண்டபத்தை இருவரும் அடைந்தனர். இளவரசி கையில் மணமாலையுடன் நின்றபடி, மண்டபத்தில் வீற்றிருந்த மன்னர்களைப் பார்த்தாள். ஒருவரிடமும் அவள் மனம் மயங்கவில்லை. வேடிக்கை பார்த்த இளம் துறவி ஒருவரின் பேரழகு அவளை ஈர்த்தது.
ஓடிச்சென்று அவன் கழுத்தில் மாலையிட்டாள்.

இளந்துறவியோ மாலையை வீசியெறிந்து விட்டு விரைவாக வெளியேறினான். மனம் நிறைந்த அவனையே மணாளனாக அடைவது என்ற முடிவுடன் இளவரசியும் பின் தொடர்ந்தாள். எந்த நிலையிலும் தன்னால் அவளை ஏற்க இயலாது என்று மறுத்துவிட்டு, அந்த இளந்துறவி நடந்தார். அழுத கண்ணீருடன் இளவரசி இதயம் வருந்த, அங்கேயே நின்றாள். அரசனும் துறவியும் அந்தக் காட்சியைக் கண்டனர். அவர்களது வழிப்பயணம் தொடர்ந்தது.

அடர்ந்த காட்டில் நடந்த இருவரும் ஒரு மரத்தின் அடியில் வந்து நின்றனர். இருவருக்கும் கடுமையாகப் பசித்தது. இரவுக் குளிரில் உடல் நடுங்கியது. மரக்கிளையில் ஒரு குருவி தன் துணையுடனும், மூன்று குஞ்சுகளுடனும் கூடு கட்டி வாழ்ந்து வந்தது.

வேந்தனும் துறவியும் கீழே வாடி நிற்பதை பார்த்த குருவி, பறந்து சென்று சுள்ளிகளைச் சுமந்து வந்து தீ வளர்த்து, முதலில் அவர்களது குளிரைப் போக்கியது. விருந்தினரின் பசியாற்ற விரும்பிய குருவி, ‘என் உடலை அவர்களுக்கு உணவாக்குகிறேன்’ என்று பெண் குருவியிடம் சொல்லிவிட்டு நெருப்பில் விழுந்தது. ஒரு சிறிய குருவியால் எப்படி இருவர் பசி தீரும் என்று சிந்தித்த பெண் குருவி, தன் கணவன் வழியைப் பின்பற்றித் தானும் தீயில் விழுந்தது. ‘நம் பெற்றோருடன், நாமும் வந்த விருந்தினர்க்கு உணவாவோம்’ என்று மூன்று குஞ்சுகளும் நெருப்பில் விழுந்து கரிந்தன.

அரசனும் துறவியும் அந்த அன்பிற் சிறந்த பறவைகளின் பண்பைக் கண்டு வியந்தனர். ‘மன்னா, அவரவர் நிலையில் அவரவர் உயர்ந்து நிற்க முடியும் என்பதை இப்போது உணர்ந்திருப்பாய். அழகான பெண்ணையும் பேரரசையும் துரும்பென உதறித் தள்ளிய அந்த இளந்துறவி எப்படி உயர்ந்தவனோ, அப்படித்தான் பிறருக்காகத் தம்மைத் தியாகம் செய்த இந்தப் பறவைகளின் இல்லறமும் உயர்ந்தது. ஏற்றுக் கொண்ட நெறியில் இருந்து எள்ளளவும் பிறழாமல் வாழ்வதுதான் முக்கியம்’ என்று விளக்கினார் துறவி


Friday, August 1, 2014

டேமேஜ் ஒண்ணும் ஆகலையே..?

நம்மாளு ATM ல பணம் எடுக்க போனார். முடியல. ரெண்டு மூணு தடவை முயற்சி பண்ணினார். முடியல. கடுப்பேறி பேங்க்கிற்கு போன் பண்ணி விபரம் சொன்னார். அவருடைய கணக்கை சரிபார்த்த டெல்லெர் பொண்ணு சொல்லிச்சு...

" சார்.. உங்க கணக்கில் எந்த பிரச்னையும் இல்லை, பணமும் இருக்கு, ப்ளாக் ஆகவும் இல்ல. பிறகு பணம் வராம இருக்காதே. ஒரு தடவை கூட முயற்சி பண்ணுங்க சார்..."

நம்மாளு மீண்டும் முயற்சி பண்ணினார். பணம் எடுக்க முடியல.

"ஏம்மா.. ATM ல பணம் இல்லையாக்கும்..?"

" இருக்கே சார்.. மத்தவங்க எடுக்கிறாங்களே.... சார் உங்க கார்டு நல்லாதானே இருக்கு..? டேமேஜ் ஒண்ணும் ஆகலையே..?"
*
*
*
*
*
*
" என்ன பேச்சும்மா பேசுறே..? கார்டுக்கு டேமேஜ் ஆகிவிட கூடாதுன்னு தானே நேத்து 'லேமினேசன்' பண்ணி வச்சிருக்கேன்...!"